ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 52 - விசேஷகாரக யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 52 - விசேஷகாரக யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஜ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஜயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


விசேஷகாரக யோகம்
பஞ்ச கிரகங்கள் ஆன சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களில் குறைந்தது இரண்டு கிரகங்கள் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி பெற்றால் உண்டாகும் இந்த விசேஷகாரக யோகம். காரகன் என்றால் அந்த விஷயமாக செயல்பட உரிமை உள்ளவன், அதிகாரி, நிர்வாகி, தயாரிப்பாளர் என்றெல்லாம் அர்த்தம் வரும் அப்படிபட்ட காரகன் அவனது வீட்டிலேயே ஆட்சி பெறும்போது அந்த அந்த காரக விஷயங்கள் பலப்படுகின்றன.

இதன் பலன்கள் -
ஏதேனும் தனித்துவமான திறமைக்கு வாய்ப்பும் உண்டாகும், நல்ல ஆயுள், ஆரோக்கியம், மற்றவர்களிடம் இருந்து பாராட்டைப் பெறும் படியாக புதிய விஷயங்கள் படைப்பது, வெற்றிக்காக சிறப்பான நடவடிக்கைகள் எடுப்பதில் சிறந்த கருவியாக செயல்படுவது, நற்பெயர் கொண்டவர், ஆளுமைத்திறன் உடையவர், படைப்பாளி. அது போக ஆட்சி பெற்ற அந்த அந்த ஸ்தானத்தின் காரக பலன்களும் வலுவாக இவருக்கு நடக்கும்

சூரியக் குடும்பமும் அதன் வகைகளும்...

சூரியனோடு ஒப்பிட்டு பார்க்க மற்ற கோள்களின் நிறை அளவுக்கான படம்

சூரியக் குடும்பமும் அதன் வகைகளும்...


வகைகள்
கோள்கள்
விளக்கம்
சூரிய கிரகங்கள்
சூரியன், சுக்கிரன், புதன்
இந்த கோஷ்டியை शीघ्रोच्च - zIghrocca என்று சூரிய சித்தாந்தம் கூறுகிறது இதற்கு விரைவாக நகரும் கிரகங்கள் என்று பொருள் படும், அதாவது சூரியனை ஒட்டி சூரியனின் ஈர்ப்பு மற்றும் விலக்கு வேகத்தில் அதிகமாக ஆட்பட்டு அதனால் வேகம் கொண்ட கிரகங்கள் ஆகும்.
வாயு கிரகங்கள்
குரு, சனி
இதை Gas giant planet  என்று ஆங்கிலத்தில் கூட அழைக்கிறார்கள் ஏனென்றால் இந்த கிரகங்களில் hydrogen and helium போன்ற வாயுக்களே அதிகமாக உள்ளது
சாயா கிரகங்கள்
இராகு, கேது
சாயா (छाया chAyA ) கிரகங்கள் அதாவது நிழல் கோள்கள் சூரிய பூமி சந்திரனின் எதிர் நிழல் கிரகங்கள். இதன் இருப்பு கணக்கு பற்றி இந்த பதிவில் நிறைய கூறியிருக்கிறார்கள் - http://thamizhselva.blogspot.in/2014/08/blog-post.html
நட்சத்திரங்களின் பதி
சந்திரன்
சந்திரனுக்கு "நட்சத்திர பதி" என்று சிறப்பு பெயர் உண்டு அதாவது நட்சத்திரங்களின் துணைவன் (கணவன்) என்பது இதன் பொருளாகும். சந்திரனையும் நட்சத்திரங்களையும் கொண்டே நமது கால கணிதங்கள் பல கணிக்கப்படுகிறது.
பூமிபுத்திரன்
செவ்வாய்
பூமிதேவிக்கு பிறந்தவன் செவ்வாய் என்பது புராணங்களின் கூற்று.  புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றே உள்ளது. மணல் போன்ற இரும்பு தாது துகள்கள் அதிகம் கொண்டுள்ளதால் இதற்கு சிவப்பு வண்ணமும் மண் தாதுவால் நிறைந்துள்ளதால் இதற்கு பூமிபுத்திரன் சிறப்பு பெயர் உண்டானது.

ஜோதிட கலையின் முக்கிய நோக்கம் என்பது கோள்களை விளக்கி ஆராய்வது என்பது அல்ல அதனால் சூரியனையும் சந்திரனையும் ஆதாரமாக கொண்டு பயன்படுத்தும், தற்கால விண்ணியல் சந்திரனை முக்கிய கோளாக அங்கீகரிக்காது அதாவது தற்கால விண்ணியலின் நோக்கம் என்பது கோள்களை விளக்கி பகுத்து ஆராய்வது அதனால் இரண்டின் நோக்கங்கள் வேறுவேறு
 சந்திரன் இல்லாமல் மற்ற கோள்களுக்கிடையே ஒப்பிட்டு பார்க்க நிறை அளவுக்கான படம் 

தற்கால விண்ணியல் சூரியக் குடும்பத்தை அகக்கோள்கள், புறக்கோள்கள் என இரண்டாக வகுத்துள்ளது அவை

அகக்கோள்கள் - புதன், வெள்ளி (சுக்கிரன்), புவி மற்றும் செவ்வாய் என்றும்
புறக்கோள்கள் - வியாழன் (குரு), சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என்றும் வகுத்துள்ளது.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger