ஜாதகத்தில் ஆறாம் வீடு சொல்லும் உண்மை என்ன?

ஆறாம் வீட்டை ரண ருண ரோக ஸ்தானம் என்று பொதுவாக கூறினாலும் இது ஒரு ஜாதகருக்கு ஏற்படும் வாழ்க்கை தடைகள், தாமதங்கள், ஜாதகருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்கள் என பல அறியலாம்.

மேலும் ஒரு ஜாதகருக்கு திருமணத்திற்கு ஏற்படும் தடைகள், விவாகரத்து போன்ற விஷயங்களை இந்த ஸ்தானத்தைக் கொண்டு காணலாம். எதிரிகள், தொழில் போட்டியாளர்கள், கடன் பாதிப்பு,  பணமுடக்கம், சிறு கடன், ஊழியர்கள், சேவகர்கள், பங்காளிகள் போன்ற விஷயங்களை இந்த ஸ்தானத்தைக் கொண்டு காணலாம்.

மேலும் ஆறாம் வீட்டின் காரகத்துவங்கள் :-

உடல்நலம்
நோய்கள்
அடிக்கடி வரும் நோய்கள்
எதிரிகள்
வம்பு வழக்கு
ஆழ்ந்த வேதனை
கடன்கள்
அடமானம்
வாடகையாளர்கள்
வேலையாட்கள்
சேவையாட்கள்
சேவை செய்தல்
சேவை பணி
கஞ்சத்தனம்
சவால்கள்
போட்டிகள்
மாமா உறவுகள்
கால்நடைகள்
நேரடியான எதிரிகள்
பிரச்சினைகள்
ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து
சந்தேகம்
வலிகள் & காயங்கள்
இறப்பை பற்றிய சந்தேகங்கள்
வளர்ப்புத்தாய்
தொழிலாளர்கள்
வேலை பயிற்சி
தொழிற்சங்கங்கள்
தொழிலாளர் இடங்கள்
பணி பயிற்சி இடங்கள்
சோம்பேறித்தனம்
சிறைபடுதல்
பாவமான காரியங்களை செய்தல்
தாயின் உடன்பிறப்புகள்
தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள்
 கால்நடை
அடி வயிறு
குடற்பகுதிகள்
மண்ணீரல்
வயிறு நரம்பு மண்டலம்
குடல்கள்
செரிமானம் மண்டலம்
கீழ் முதுகு
கர்ப்பபை கோளாறுகள்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "ஜாதகத்தில் ஆறாம் வீடு சொல்லும் உண்மை என்ன?"

கருத்துரையிடுக

Powered by Blogger