ஜாதகத்தில் எட்டாம் வீடு சொல்லும் உண்மை என்ன?


ஜாதகத்தில் எட்டாம் வீடு சொல்லும் உண்மை என்ன?

ஆயுள் ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும் இந்த ஸ்தானம் வேதகால ஜோதிடத்தில் நீண்ட ஆயுள், போரினால் ஏற்படும் வெற்றி தோல்வி, எதிரிகள், கோட்டைகள், ஆக்கிரமிப்பினால் கிடைக்கும் செல்வம், மறு பிறப்பு, அஞ்ஞான வாசம், மறைந்திருக்கும் கலைகள், பகைவர்களால் ஏற்படும் ஆபத்து, இறந்தவர்கள் மற்றும் பழைய விஷயங்கள் மூலம் கிடைக்கும் செல்வத்திற்கு என்பனவற்றிக்காக பார்க்கபட்ட ஸ்தானம்.

பிற்காலங்களில் இந்த ஸ்தானம் தவறி விழுதல், தீரா கடன், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ளவும் பயன்படுகிறது.

எட்டாம் வீடு கொண்டு அறியும் காரகத்துவங்கள் :-

ஆயுள் ஸ்தானம்
விபத்துக்கள்
துரதிர்ஷ்டம்
பூசல்
மற்றவர்களின் பணம் உங்களிடம் சேருதல்
அவமானம்
தடைகள்
தாமதம்
மனவருத்தம்
ஏமாற்றம்
தோல்வி
இழப்பு மற்றும் அடைப்பு
திருட்டு
தற்கொலை மூலம் மரணம்
கொள்ளை.
காப்பீடு
ஓய்வூதியம்
பணிக்கொடை
அறுவை சிகிச்சை
பரம்பரை உடைமை
வழிவழிச் சொத்து
மறு பிறப்பு
நீண்ட நாள் நோய்கள்
தீரா நோய்கள்
துன்பம்
முன்னோர் வழிவந்த பண்பு
நிரந்தர வலி
கூட்டாளிகள் பணம்
கவலைகள்
உடல்உறவு
உடல்உறவில் உங்களின் நடத்தை, விருப்பம்
பாலியல் பிரச்சினைகள்
வரிகள்
எதிரிகள்
போராட்டம்
ஆழமான கண்டுஅறியாத சிந்தனைகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான வீடு

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "ஜாதகத்தில் எட்டாம் வீடு சொல்லும் உண்மை என்ன?"

கருத்துரையிடுக

Powered by Blogger