ஜாதகத்தில் பத்தாவது வீடு சொல்லும் உண்மை என்ன?

http://www.ssivf.com/ssivf_cms.php?page=30

ஜாதகத்தில் பத்தாவது வீடு சொல்லும் உண்மை என்ன?
கர்ம ஸ்தானம், காரிய ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும், பத்தாம் ஸ்தானம் ஒவ்வொருத்தரும் விரும்பி பார்க்கும் கேட்கும் ஸ்தானமாகும் ஏன்னென்றால் இந்த பிறவியில் எந்த செயல் செய்து பிழைக்க போகிறார் அதாவது எந்த தொழிலை செய்ய போகிறார், எப்படி  செய்ய போகிறார் போன்றவற்றை காட்டும் ஸ்தானம் இந்த  ஜீவன ஸ்தானம் ஆகும் மேலும் சமுதாயத்தில் அவருக்கு ஏற்படும் மதிப்பு மரியாதை, குடும்ப பாரம்பரிய தொழில், தொழிலில் ஏற்படும் வெற்றிகளை காட்டும்.

காலப்புருஷ தத்துவப்படி இந்த ஸ்தானத்துக்கு காரகத்துவம் பெற்றவர் கர்மகாரகனான சனி பகவான் ஆகும், இருந்தாலும் ஒவ்வொருத்தருடைய ஜாதகத்தை பொருத்து சற்று மாறுபடும் எப்படி என்றால்

சுயதொழில், காவல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அரசாங்க அதிகாரிகள், தனியார் நிறுவனங்களில் சந்தைபடுத்தல் (Marketing Executives) அதிகாரிகள், சந்தைபடுத்தல் ஊழியர்கள் (Marketing Employees), உடல்பலத்தின் மூலம் செய்யப்படும் தொழில்கள் மற்றும் விளையாட்டுகள் இது போன்ற இன்னும் நிறைவுள்ளது இது போன்ற பணிகளை செய்வோர்களுக்கும் அல்லது மேஷம், விருச்சிகம் பத்தாம் ஸ்தானமாக வந்தால் அவர்களுக்கெல்லாம் பொதுவாக 10 வது ஸ்தானத்துக்கு காரகத்துவம் பெற்றவர் செவ்வாய் ஆகும்.

கலைத்துறை,வாகனம், தொலைக்காட்சி, வானொலி, Media Industry, நடனம்,கலைப்பொருட்கள் விற்பனை, வண்ண ஓவியர், இனிப்புப் பண்டங்கள்,கணினி, Home Appliance, luxury product, Mobile technology இது போன்ற இன்னும் நிறைவுள்ளது இது போன்ற துறைகளில் பணிகளை செய்வோர்களுக்கும் அல்லது ரிஷபம், துலாம் பத்தாம் ஸ்தானமாக வந்தால் அவர்களுக்கெல்லாம் பொதுவாக 10 வது ஸ்தானத்துக்கு காரகத்துவம் பெற்றவர் சுக்கிரன் ஆகும்.

இது போன்ற மீதி கிரகங்களுக்கான காரகத்துவ தொழில்களையும் ஒருவேளை பத்தாம் வீட்டின் அதிபதி பலமிழந்தால் அந்த பொறுப்புகளை எடுத்து செய்யும் அடுத்த கிரங்கள் மற்றும் அதற்கான சிறப்புக்களையும் பின் விரிவாக பார்போம் இப்போது
பத்தாம் வீட்டின் காரகத்துவங்கள் பார்போம் : -

கர்ம ஸ்தானம்
காரிய & ராஜ்ய ஸ்தானம்
மரியாதை
கௌரவம்
பொது மதிப்பு
பெயர் மற்றும் புகழ்
அதிகாரம் செல்வாக்கு
பெற்றோர் இறுதி சடங்குகள்
இலட்சியம்
உலக நடவடிக்கைகள்
பொறுப்புகள்
பதவி உயர்வு
முன்னேற்றம்
நியமன தொழில்
வெற்றி நிலை
மத செயல்பாடுகள்
புனித யாத்திரை
அரசு மரியாதை
அரசு உயர் நிலை
வேலைகள்
சுயதொழில்
தொழில் தரம்
அரசாளும் யோகம்
குடும்ப பாரம்பரிய தொழில்
இரவாபுகழ்
மனைவியின் வசதி நிலை, கல்வியறிவு
தொழிலில் செய்த முதலீட்டின் நிலை
தொழிலுக்கான போக்குவரத்து
தந்தையின் வசதி நிலை

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "ஜாதகத்தில் பத்தாவது வீடு சொல்லும் உண்மை என்ன? "

கருத்துரையிடுக

Powered by Blogger