விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்க (செஸ்) வெற்றி வீரர் - ஞாபக சக்தி, சிந்தனை திறன்...


பிரபல ஜாதகங்கள்
விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்க (செஸ்) வெற்றி வீரர் - ஞாபக சக்தி, சிந்தனை திறனுக்கான சில ஜோதிட விதிகளை பார்போம்

விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்க (செஸ்) வெற்றி வீரர் ஜாதகம்
 
விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க (செஸ்) போட்டிகளின் வெற்றி வீரர் இவர் ஜாதகத்தை கொண்டு ஞாபக சக்தி, சிந்தனை திறனுக்கான ஜோதிட விதிகள் சிலவற்றை பார்போம், விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க விளையாட்டில் பல வருடங்களாக முன்னனியில் இருக்கும் வீரர். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீரராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி மின்னல் பையன் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றவர், இப்போது நாம் நமது விஷயத்திற்கு வருவோம் ஜோதிட விதிகளின் படி

லக்னத்திலிருந்த 3 வது வீடு தான் ஒருவருடைய நினைவாற்றலை காட்டும் ஸ்தானம் ஆகும்.


லக்னத்திலிருந்த 5 வது வீடு தான் ஒருவருடைய சிந்தனை திறன் காட்டும் ஸ்தானம் ஆகும்.


லக்னத்திலிருந்த 9 வது வீடு தான் ஒருவரின் உள்ள விஷயங்களை முன்னமே கணிக்கும் அதாவது யுகிக்கும் ஆற்றலை காட்டும் ஸ்தானம் ஆகும்.


மேலும் எதிரிகளை மடக்குவதற்கும் வீழ்த்துவதற்கும் 6 வது வீடு நன்றாக இருக்க வேண்டும்.


கிரகங்களில் ஞாபக சக்தி, சிந்தனை திறன், விஷயங்களை முன்னமே கணிக்கும் திறன் போன்றவற்றிற்கு புதன், குரு, கேது ஆகிய கிரகங்களே காரகத்துவம் பெற்றவை இந்த கிரகங்கள் ஜாதகத்தில் பலமாக இருக்கவேண்டும், மேலும் எதிரிகளை மடக்குவதற்கும் வீழ்த்துவதற்கும் செவ்வாய் பலமாக இருக்கவேண்டும்.


இனி இவரின் ஜாதகத்தில் இத்தகை பலங்களை பார்போம், முதலில் எந்த விளையாட்டு வீரருக்கும் 5 வது வீடு நன்றாக இருந்தால் தான் விளையாட்டு அவருக்கு சிறப்பாக வரும் இவருக்கு 5 க்குடைய சனி மேஷத்தில் நீசம் அடைந்தாலும் சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே பரிவர்த்தனை யோகம் பெற்றதாலும், நவாம்சத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் சனி சேர்வதாலும் சனிக்கு நீசத்தன்மை போய் நீசபங்க ராஜ யோகத்தை அடைகிறார் இது மிகச்சிறப்பான அமைப்பாகும் மேலும் விளையாட்டு வீரர்களின் கிரகமான செவ்வாய் தன் சொந்த சாரம் பெற்ற நட்சத்திரத்தில் அமைந்து அத்தகைய செவ்வாயை குரு பார்ப்பதும் மேலும் சிறப்பு ஆகும்.


விஷயங்களை முன்னமே கணிக்கும் திறனுக்கு உடைய ஒன்பதாம் வீட்டின் அதிபதியான புதன் ஒன்பதாம் வீட்டை பார்பதுவும், ஒன்பதாம் வீட்டை குரு பார்ப்பதும் மேலும் ஒன்பதாம் வீட்டின் அதிபதியான புதன் நவாம்சத்தில் ஆட்சி பெறுவதும் வேகமாக யுகிக்கும் திறனையும், அடுத்து விளையாட்டின் போது என்ன நடக்கலாம் என்று கணிக்கும் ஆற்றலையும் இந்த ஜாதகருக்கு தரும்.

ஞாபக சக்தி, சிந்தனை திறனுக்கும் : - 
5ல் இராகு இருந்தால் வேகமாக யோசிக்கும் தன்மை ஏற்படும் அந்த இராகு ஞாபக சக்திக்கு உடைய மூன்றாம் வீட்டின் அதிபதியான குருவின் சாரம் பெற்று குருவாலே பார்க்கபடுவது அதி வேகமாக யோசிக்கும் திறனையும், நல்ல ஞாபக சக்தியையும் கொடுக்கும் மேலும் 3ல் புதன் அமைந்து கேதுவின் சாரம் பெறுவதும் நல்ல ஞாபக சக்தியையும் கொடுக்க கூடிய அமைப்பாகும் மேலும் வித்தியாசமாக யோசிக்க கூடிய தன்மையையும் தரும்.

நாம் ஏற்கனவே நல்ல நிலையில் சந்திரன், புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன் என்று ஒரு முறை எழுதி உள்ளோம் அதாவது நல்ல ஞாபக சக்தியை பெற்றிருப்பார், மனபலமும் புத்திபலமும் உள்ளவர் என்று மேலும் இவர் ஜாதகத்தில் புதன், சந்திரன் 9,10 க்குடையவர்கள் இவர்கள் சேர்ந்து ஒரு வீட்டில் அமர்ந்தது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும் இந்த யோகம் அமைந்தவர்கள் செய்யும் செயல்கள் சிறந்த மதிப்பு, மரியாதையை தேடித் தரும், அது மிகச்சிறப்பாக அமைந்திருந்தால் மதிப்பு, மரியாதை, உலகப் புகழ் பெறும் யோகம் எல்லாம் சிறப்பாக அமையும் அத்தகைய யோகம் பெற்றவரே இந்த விஸ்வநாதன் ஆனந்த் இது போன்ற சிறப்பான அமைப்புகளால் தான் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு வழங்கிய இரவு விருந்தில் அழைப்பு விடுக்கப்பட்ட ஒரே விளையாட்டு வீரர் இவர் தான், இது போன்ற பெருமைகளை இவருக்கு தேடி வந்தது.

15 - 16 வயது காலங்களில் தொடங்கிய புதன் சாரம் பெற்ற சூரியனின் திசா காலங்களிலேயே தனது ஆரம்ப வெற்றிகளை குவிக்க ஆரம்பித்துவிட்டார், புதன் உடன் சேர்ந்த சந்திரன் திசா காலங்களில் இந்திய அளவில் முன்னனியில் வந்தார், தன் சொந்த சாரம் பெற்ற செவ்வாய்  திசா காலங்களில் உலக அளவில் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்துவிட்டார்.

இதிலிருத்து லக்னத்திலிருந்த 3,5,9 வது வீடுகள் நல்ல பலமான நிலையில் இருந்தாலும், புதன், குரு, கேது ஆகிய கிரகங்கள் நல்ல பலமான நிலையில் இருந்தாலும் ஏற்படக்கூடிய நன்மைகளை நாம் அறிய முடியும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "விஸ்வநாதன் ஆனந்த் சதுரங்க (செஸ்) வெற்றி வீரர் - ஞாபக சக்தி, சிந்தனை திறன்..."

கருத்துரையிடுக

Powered by Blogger