திருமுருக கிருபானந்த வாரியார் ஜாதகம் - இலக்கிய ஞானம், சொற்பொழிவு, ஆன்மிக உயர்நிலை...

திருமுருக கிருபானந்த வாரியார் ஜாதகம் கணிப்பு

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் ஐயாவின் ஜாதகம் மூலம் இலக்கிய ஞானம், சொற்பொழிவுத்திறன், ஆன்மிக உயர்நிலை போன்றவற்றிற்கான சோதிட பலன்களை பார்போம்.
பிரபல ஜாதகங்கள்
திருமுருக கிருபானந்த வாரியார் ஜாதகம்
இவர் சொற்பொழிவைக் கேட்க சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்போதும் பெரிய கூட்டமே இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, கருத்தையும் சேர்த்து வழங்கும் தனித்திறமை பெற்றவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சென்று சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்திய பெருமை பெற்றவர்.


முதலில் சொற்பொழிவை ஒருவர் நிகழ்த்த வேண்டுமானால் அவருக்கு கூரிய இலக்கிய ஞானம், ஆன்மீக கல்வி பயிற்சி, தத்துவ சாஸ்திரங்களில் ஆற்றல் வேண்டும் அப்போது தான் சிறந்த சொற்பொழிவை ஒருவரால் நிகழ்த்த முடியும் எனவே முதலில் இது போன்ற சாஸ்திரங்களில் சிறந்து விளங்க 5 ஆம் என்று சொல்லபடும் சுபதிரிகோண ஸ்தானமும், அதன் அதிபதி, அவர் எடுத்துள்ள நட்சத்திர சாரம் வலிமையாக இருக்க வேண்டும், ஐயாவின் ஜாதகத்தில் சுபதிரிகோண ஸ்தானாதிபதியான செவ்வாய் வெளிப்பார்வையாக பார்த்தால் நீசம் ஆனால் அதிநீச பாகையில் இருந்து நன்றாக விலகிவிட்டதாலும், நீசமடைந்த செவ்வாய் லக்ன கேந்திரம் பெற்றும், நீசமடைந்த செவ்வாய்க்கு இடம் கொடுத்த சந்திரனும் லக்னத்திற்கு கேந்திரம் அடைந்தும் மேலும் செவ்வாயின் நீசத்தன்மை சற்று குறைந்து விட்டது மேலும் இராகுவின் மருள் வட்டத்திற்குள்ளும் வந்தால் செவ்வாய் பலம் முழுதும் இராகு ஏற்பார் இந்த நிலையில் உள்ள செவ்வாயும், இராகுவும் சாஸ்திர வல்லுநன் என்று சிறப்பெயர் பெற்ற புதனின் சாரத்தை பெற்றதும், ஐயாவின் லக்னமே புதனின் சாரத்தை பெற்றதும், அந்த லக்ன புதனும் சுய சாரம் பெற்று ஆட்சி பலத்தை விட வலிமையான அமைப்பை பெற்றுள்ளதால் சமயம், இலக்கியம், எழுத்து, இசை என அனைத்து சாஸ்திரங்களிலும் நிபுனத்துவம் பெற்றார்.


சிறந்த சொற்பொழிவை நிகழ்த்துவதற்கு சத்சங்க ஸ்தானமான 2 ஆம் வீடும், அதன் அதிபதி, அவர் எடுத்துள்ள நட்சத்திர சாரம் வலிமையாக இருக்க வேண்டும், ஐயாவின் ஜாதகத்தில் அந்த ஸ்தானாதிபதியான சூரியன் தனது 2 ஆம் விட்டிலேயே ஆட்சி பலம் பெற்று மேலும் சித்தர்களால் மெய்ஞானி என்று அழைக்கபடும் கிரகமான கேதுவின் சாரம் பெற்று, நவாம்சத்தில் புதனின் வீட்டிற்கும் சென்று அமர்ந்துள்ளதாலும் மேலும் பாததுவைதாம்சம் சக்கரத்தில் சிம்ம லக்ன பெற்று லக்னத்திலேயே சூரியன் ஆட்சி பெற்று உள்ளதும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு பட்டிதொட்டி எங்கும் கோயில் குளங்கள் எங்கும் தன் சொற்பொழிவால் மக்களை ஆன்மீக பாதை நோக்கி ஈர்த்தார், தன் கெம்பீரமான சொல்வளமையால் சென்ற இடங்களிலில் எல்லாம் மதிப்பு, சிறப்பு மரியாதைகளையும் பெற்றார் 2ல் ஆட்சி பெற்ற சூரியன் இந்த கெம்பீரமான சொல்வளமை தந்தார்.

ஆன்மிக வாழ்வில் உயர்நிலை எய்த 1 வீடு,5 வீடு,9 வீடு,12 வீடு ஆகிய ஸ்தானங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றும், மேலும் குரு, புதன், சனி, கேது ஆகிய கிரகங்கள் உயர்ந்த வலிமை பெறுவதும் மிகமிக முக்கியம்.

ஐயாவின் ஜாதகத்தில் 5 வீடு க்குடைய கிரகம் 1 ஆம் வீட்டிலும், 9 வீடு க்குடைய கிரகம் 12 ஆம் வீட்டிலும், 12 வீடு க்குடைய கிரகம் 1 ஆம் வீட்டிலும் மாறி மாறி அமர்ந்துள்ளதும் அவர்கள் குரு, புதன் ஆகிய கிரங்களாக இருப்பதும், மேலும் ஆத்மகாரகன் ஆன சூரியன் கேதுவின் சாரம் பெற்று, நவாம்சத்தில் கேதுவுடனும் சேர்ந்து அமர்ந்த்தும், நவாம்சத்திலும் கவனியுங்கள் குரு, புதன், சனி, கேது ஆகிய கிரகங்கள் தங்களின் வீடுகளுக்குள் மாறி மாறி அமர்ந்துள்ளதாலும் இவ்வாறு ஆன்மீக தன்மை கொண்ட கிரகங்கள் தங்களுக்குள் வலுவான தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளது இது போல் உள்ள அமைப்புகளிலின் காரணமாக ஆன்மிக வாழ்வில் உயர்நிலை எப்படி என்றால் ஐய்யா வாரியார் சுவாமிகள் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று ஆன்மிக வழியில் சென்று கொண்டிருந்தார், ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. அதுபோக எப்போதும் முருகா! முருகா!! என்று வாயாலும் மனதாலும் நினைத்துக் கொண்டே இருந்தார். தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல உபதேசங்களையும் வழங்கியவர் அதன்படியே தானும் வாழ்ந்தும் காட்டினார்.

இசையாற்றல் மிக்கவர் ஐய்யா வாரியார் சுவாமிகள் இசை ஸ்தானமான 3,5,11 இதில் 3க்குடைய புதன் சுய சாரம் பெற்று 5 க்குடையவருடன் சேர்ந்துள்ளது செவ்வாயும் புதனின் சாரத்தை பெற்றுள்ளது,  சஷ்டதசிபாத துவைதாம்சம் சக்கரத்தில் 3க்குடைய கிரகம் 3ல் ஆட்சி, 11 க்குடைய கிரகம் 11ல் ஆட்சி ஆம் ஐய்யா வாரியார் சுவாமிகள் சிறந்த வீணை இசை கலைஞர், அது போக கவிதை காவிய கிரகங்களான புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய கிரகங்களுக்கிடையே ஒரு முக்கூட்டு பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளது இதனால் எழுத்து ஆற்றல், கவிபாடும் ஆற்றலையும் பெற்றவர் இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

பிறப்பு திசையான புதனின் சாரம் பெற்ற இராகுவின் திசையிலேயே தன் கலை பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டார், அதே இராகு சாரம் பெற்று 12ல் ஞானத்தன்மை பெற்ற குருவின் திசையில் ஞான, தத்துவ சித்தாந்தங்களில் தேர்ச்சி பெற்றவர் ஆனார் பின் தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார், கேதுவின் சாரம் பெற்று 2ல் ஆட்சி பெற்ற சூரியனின் காரணமாக மேடை பயம் இல்லாமல் வளர்இளம் பருவத்திலேயே தேர்ந்த சொற்பொழிவாளர் போல் பேச ஆரம்பித்துவிட்டார், சனியின் திசையில் 28 வயதில் தொடங்கியது 47 வயதில் நிறைவடைந்தது அதே இராகு சாரம் பெற்று 8ல் ஆட்சி அடைந்துள்ள சனி, மற்றும் நவாம்சத்தில் குருவிடம் பரிவர்த்தனை பெற்ற சனியால் தன் சார்ந்த துறையில் உச்சபட்ச புகழை ஈட்டினார், ஏற்கனவே புதனின் உயர்ந்த வலிமையை மேலே சொல்லி இருக்கிறேன் அந்த புதன் திசையில் ஊர் உலகெல்லாம் சுற்றி சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றார்.

இப்படி நிறைய விஷயங்களை எழுதலாம் ஆனால் இதுவே போதும் என்று நிறைவு செய்கிறேன்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "திருமுருக கிருபானந்த வாரியார் ஜாதகம் - இலக்கிய ஞானம், சொற்பொழிவு, ஆன்மிக உயர்நிலை..."

கருத்துரையிடுக

Powered by Blogger