மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....மேஷ லக்னம் பற்றிய அடிப்படை :-
மேஷம் சர லக்னம்
மேஷம் ஒற்றை பட ராசி லக்னம்
மேஷம் நெருப்பு லக்னம்
மேஷம் ஆண் லக்னம்
மேஷம் தர்ம  லக்னம்
மேஷம் பித்த லக்னம்
மேஷம் கிழக்கு திசை லக்னம்
மேஷம் க்ஷத்ரிய லக்னம்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி செவ்வாய் ஆவார் அவரே மறைவு ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கும் அதிபதி ஆவார் இருந்தாலும் லக்னத்திற்கு அதிபதியாவதால் செவ்வாய் மேஷ லக்ன ஜாதகருக்கு 60% சுப தன்மையுடைய சுபர் அதாவது ஜாதகரின் வாழவில் 60% நன்மையான பலன்களும் 40% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே செவ்வாய்  தசையில் முதலில் 60% நன்மையான பலன்களும் பிற்பாதியில் 40% தீமையான பலன்களையும் தரவல்லார், செவ்வாய் மேஷ லக்ன ஜாதகருக்கு முழுமையான பாவரல்ல.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் ஆவார் அவரே ஏழாம் வீடு - களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும் அதிபதியாவர் எனவே மேஷ லக்ன ஜாதகருக்கு இவரின் நிலையை வைத்தே குடும்ப, மண வாழ்க்கையின் மகிழ்ச்சி வெற்றியை காண முடியும், சுக்கிரன் மாராகாதிபதி தன்மையையும் அடைகிறார் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் சுக்கிரனே எனவே இவர் மேஷ லக்ன ஜாதகருக்கு நடுநிலையானவர் எனவே  சுக்கிரன் இருக்கும் நிலைகளை வைத்து நன்மை தீமைகளை மாறிமாறி தருவார்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மூன்றாம் வீடு  -  தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானத்திற்கும், ஆறாம் வீடு  -  ரண ருண ரோக ஸ்தானம், சேவா ஸ்தானத்திற்கும் அதிபதி புதன் ஆவர் எனவே புதன் மேஷ லக்ன ஜாதகருக்கு 85% பாவரே,  அதாவது 85% தீமையான பலன்களையும் தரவல்லார், மேஷ லக்ன ஜாதகருக்கு இவர் பாவர்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், தாய் ஸ்தானத்திற்கு அதிபதி சந்திரன் ஆவார் கேந்திராதிபதி தோஷம் அடையாதவரை  மேஷ லக்ன ஜாதகருக்கு சந்திரன் சுப தன்மையுடைய சுபர் நன்மையே செய்வார்.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  ஐந்தாம் வீடு  -  பூர்வ புண்ணிய  ஸ்தானம், புத்திர ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் திரிகோண ஸ்தானாதிபதி ஆவதால் மேஷ லக்ன ஜாதகருக்கு நல்ல யோகமான பலன்களை தரவல்ல யோகர் ஆவர்.

 மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கும், பன்னிரண்டாம் வீடு  -  நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதி குரு பகவான் ஆவார் ஒரு திரிகோண ஸ்தானாதிபதி ஆனாலும் அவரே பாதி மறைவு ஸ்தானமான 12 ஆம் வீட்டிற்கும் அதிபதி ஆவார் இருந்தாலும் 9 ஆம் திரிகோண ஸ்தானாதிபதி அதிபதியாவதால் சுப தன்மையுடைய சுபர், 75% நன்மையான பலன்களும் 25% தீமையான பலன்களையும் தரவல்லார் அதுவே குரு  தசையில் முதலில் 75% நன்மையான பலன்களும் பிற்பாதியில் 25% தீமையான பலன்களையும் தரவல்லார்.

 மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும், பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கும்
 அதிபதி சனி பகவான் ஆவார் மேலும் மேஷ லக்னத்திற்கு 11ம் வீடு பாதகஸ்தானம் ஆகும் எனவே சனி பாதகாதிபதி தன்மையையும் அடைகிறார் இருந்தாலும் பாதகங்களை ஏற்படுத்திய பிறகு மேஷ லக்ன ஜாதகருக்கு இவரே தொழில் வெற்றி, லாபம், முன்னேற்றத்தையும் தரவல்லார் எனவே சுப தன்மையுடைய சுபரே.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்...."

கருத்துரையிடுக

Powered by Blogger