குமார் மங்கலம் பிர்லா ஜாதகம் - உயர் குடும்பத்தில் பிறப்பதற்கும், செயல் திறனுக்கும்...

பிரபல ஜாதகங்கள்
இந்தியாவில் டாடா, பிர்லா தொழில், வர்த்தக துறைகளில் கொடிகட்டி பறக்கும் பணக்கார குடும்பங்கள் இதை தெரியாதவரே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு புகழும் பெற்றவர்கள் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவரும், ஆதித்ய பிர்லா குழுமத்தின் (Aditya Birla Group Chairman) தலைவராகவும் உள்ள குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) அவர்களின் ஜாதகத்தை பற்றியே இப்போது பார்க்க போகிறோம், உயர்ந்த செல்வந்த குடும்பத்தில் பிறப்பதற்கும், அதே நேரத்தில் செயல் திறமையானவராகவும் இருப்பதற்க்கான சில ஜோதிட விதிகளையும் பார்போம்.
 குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) ஜாதகம்

இவரின் ஜாதகத்தில் கடக லக்னம் லக்னத்திற்கு 9 ஆம் பாவம் அதாவது முன்னோர்கள் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம் என்றும், தந்தை வழி உயர்வு, பூர்வீகச் சொத்துக்களையும் குறிக்கும் 9 ஆம் ஸ்தானத்தின் அதிபதி குரு பகவான் கடக லக்னத்திலேயே உச்சம் பெறுகிறார் இது ஒருவர் உயர்ந்த செல்வந்த குடும்பத்தில் பிறப்பதற்கு, சிறந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறப்பதற்கும் மிகச்சிறப்பான அமைப்பாகும் இப்படிபட்ட உயர்ந்த யோகத்தை இவர் பெற்றிருக்கிறார், அது போக  குரு பகவான் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மைகளை தெரிவிக்கும் பாவமான 5ஆம் ஸ்தானத்தை பார்பதுவும் மேலும் 3 ஆம் வீட்டில் அமர்ந்த செவ்வாய் 9 ஆம் வீட்டை பார்பதுவும் இப்படி 5,9 ஆகிய இரு திரிகோண ஸ்தானாதிபதிகளும் தங்கள் தங்களின் வீட்டை பார்வையிடுவதும் உயர்ந்த யோக அமைப்பாகும்.

கடக லக்னத்திற்கு தொழில் கூட்டு, வர்த்தக கூட்டுக்கு காரகன் ஆன சனி இராசி, நவாம்சம் ஆகிய இரு சக்கரங்களிலும் குருவின் வீட்டில் அமர்ந்து இராசி சக்கரத்தில் சனியின் சாரம் பெற்று உச்சமான குருவால் பார்க்கபடுவதும் மேலும் 3 ஆம் வீட்டில் அமர்ந்த செவ்வாய் சுய சாரம் பெற்று தனது 10 ஆம் வீட்டை பார்பது வியாபார, தொழில் பாரம்பரிய குடும்பத்தில் பிறப்பதற்க்கான நிலையை காட்டும் உயர்ந்த அமைப்பாகும்.

பட்டய கணக்காளர் பட்டம் பெறுவதற்கு குரு, புதன் நல்ல நிலை தொடர்பு பெற வேண்டும், இவர் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தினால் இருந்து பட்டய கணக்காளர் பட்டம் பெறுவதற்கு குரு, புதன் நல்ல நிலை தொடர்பு பெற்றுள்ளது அதாவது இவருக்கு உச்சம் பெற்ற புதன் குருவின் சாரம், குருவும் சுக்கிரனும் சனி சாரம் அந்த சனி புதனின் சாரம் இந்த அமைப்பின் காரணமாக பட்டய கணக்காளர் பட்டம் பெற்றார் ஆனால் இதை விட வேறு பலமான யோக அமைப்புக்களால் பட்டய கணக்காளர் பணி செய்யாமல் போக வேண்டி வந்துள்ளது.

இவருக்கு குரு, பாதகாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து 8க்குடை சனியின் சாரம், 8க்குடை சனி 9லும் அமர்ந்ததால் குமார் மங்கலம் பிர்லாவின் தந்தையார் ஆதித்ய பிர்லா சீக்கிரமாகவே இறந்தார்  ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் பொறுப்பை 1995ஆம் ஆண்டில் தம் 28 ஆம் அகவையில் சந்திர திசையில் ஏற்றுக்கொண்டார், சந்திரன் நவாம்சத்தில் ஆட்சி அதுபோக சந்திரன் கேது சாரம், இவரின் ஜாதகத்தில் மிகவலிமையான இராகு, கேதுக்கள் அமைய பெற்றுள்ளனர் எப்படி என்றால் இராகு கேது சாரம்,  கேது இராகு சாரம், இது இராகு, கேதுக்களுக்கு மிகவலிமையான அமைப்பாகும் அதனால் 4,10 அமையபெற்ற இராகு, கேது வால் வலிமை பெற்ற சந்திரனின் திசை நிறைய போராட்டங்களை தந்தாலும் அளப்பறிய சாதனைகள், தொழில் வெற்றிகள் புரிய வைத்தது.

அடுத்தவந்தது செவ்வாய் திசை, இவரின் ஜாதகத்தில் 3 ஆம் வீட்டில் அமர்ந்த செவ்வாய் சுய சாரம் பெற்று தனது 10 ஆம் வீட்டை பார்பதும், அதுபோக பஞ்சாம்சம், சஷ்டாம்சம், திரிம்சாம்சம் ஆகிய மூன்று அம்சங்களிலும் மகர லக்னமே பெற்று அந்த மூன்றிலும் லக்னத்திலேயே உச்சமும் அடைந்து மிக சிறந்த வர்கோத்தம பலன் ஆகும் மேலும் தசாம்சத்தில் குருமங்கள யோகமும் பெற்றுள்ளார் இந்த அளவு சுப பலம் பெற்ற நிர்வாக காரகன் செவ்வாயின் திசையில் தன் நிர்வாகத்திறமையால் இவர் பொறுப்பேற்றபோது ஆதித்யா குழுமத்தின் விற்றுமுதல் 200 கோடி டாலராக இருந்தது. ஆனால் இப்பொழுதோ 4000 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

அடுத்தது இராகு திசை இது மேலும் உயர்வானதே ஆனாலும் தொழில் சில சட்ட சிக்கல்களையும், மன பாரம் தரக்கூடிய சில நிகழ்வுகளையும் இராகு திசையில் சந்திக்கவேண்டி வரும் ஆனாலும் 

குரு பகவான் 12 அம்ச சக்கரங்களில் சுமார் 9 அம்ச சக்கரங்களில் திரிகோண, கேந்திர ஸ்தானங்களிலேயே அமைய பெற்றுள்ளது குருவிற்கு சிறந்த ஸ்தான பலம் ஆகும்,  
கடக லக்ன யோகாதிபதி லக்னத்திலேயே அமைந்ததும், மறைந்த புதன் நிறைந்த கலை, அறிவு தருவார் என்பது பழமொழி 12ல் மறைந்து உச்சம் பெற்ற புதன் இவருக்கு கூரிய புத்திசாலிதனத்தை தருவார், அவர் மூன்றுக்கும் அதிபதி என்பதால் அபரிவிதமான செயல் திறனையும் சேர்த்தே தருவார்.

2 க்குடைய சூரியன் 11ல் அமைந்து 11க்குடைய சுக்கிரன் 1ல் அமைந்து 1 க்குடைய சந்திரன் 2ல் அமைந்து ஒரு முக்கூட்டு பரிவர்த்தனை யோகம் ஆகும், என இதுபோல பல அடிப்படை வலிமை பெற்ற ஜாதகம் என்பதால் பெரிய பாதிப்புகள் தராது.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "குமார் மங்கலம் பிர்லா ஜாதகம் - உயர் குடும்பத்தில் பிறப்பதற்கும், செயல் திறனுக்கும்..."

கருத்துரையிடுக

Powered by Blogger