ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 1 - கேந்திராதிபத்திய தோஷம்...

ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 1 - கேந்திராதிபத்திய தோஷம்....


ஜாதக இராசி சக்கரத்தில் ஜனன லக்னத்திற்கு 1,4,7,10 ஆகிய ஸ்தானங்கள் கேந்திரங்கள் ஆகும் அதாவது மனித வாழ்க்கையில் அவனுடை மூல தலைவிதியை தீர்மானிக்க கூடிய 1வது ஸ்தானம் என்னும் லக்னம் பிரதன கேந்திரம், சுக போக வாழ்வை  தீர்மானிக்க கூடிய 4 வது ஸ்தானம் சதுர் கேந்திரம்,  இல்லற வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய 7 வது ஸ்தானம் சப்தம கேந்திரம், தொழில் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய 10வது ஸ்தானம் தசம கேந்திரம் ஆகிய நான்கு கேந்திரங்களும் மனித வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது இதை வாழ்க்கையை தாங்க்கூடிய நான்கு தூண்களாக வர்ணிப்பார்கள் ஜோதிட ரிஷிகள், உபய லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு இரண்டு இரண்டு கேந்திரங்களுக்கும் குருவும், புதனும் அதிபதி ஆவார்கள் இயற்கை சுபர்களான இவர்கள் 1,4,7,10 ஆகிய சுப ஸ்தானங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும்.

உதாரணமாக தனுசு லக்னத்திற்கு 7,10 க்குடைய புதன் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய இராசிகளில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்தால் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும், அதே போல் கன்னி லக்னத்திற்கு 7,10 க்குடைய குரு மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய இராசிகளில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்தால் கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும்.

கேந்திராதிபத்திய தோஷத்தின் பலன்கள் - இரண்டு சுப ஸ்தானங்களுக்கு அதிபதிகள் ஏதேனும் ஒன்றின் சுப பலன்களை தருவார்கள் அதாவது இன்னொரு சுப ஸ்தானத்தின் பலன்களை பெறுவதில் ஏதேனும் குறை ஏற்பட்டு விடும்.

உதாரணமாக தனுசு லக்னத்திற்கு 7,10 க்குடைய புதன் மிதுனம், கன்னி ஆகிய இராசிகளில் ஏதேனும் ஒன்றில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளதாக வைத்துக்கொள்வோம் அதில் தான் பெரும்பாலும் இருக்கும் ஸ்தானத்திற்கு அதாவது 7 ஆம் வீட்டில் இருந்தால் இல்லற வாழ்க்கையில் நன்மையான பலன்களை மிக குறைவாகவும் தொழில் ஸ்தானத்தின் நன்மையான பலன்களை முழுமையாகவும் தருவார் புதன், சில நட்சத்திர சாரத்திற்கு இந்த பலன்கள் தலைகீழாக அதாவது இருக்கும் ஸ்தானத்திற்கு நன்மையான பலன்களையும் மற்ற ஸ்தானத்திற்கு மிக குறைவாக நன்மையான பலன்களை தருவார் புதன்,

அப்படிபட்ட ஜாதகருக்கு குடும்பம் நன்றாக அமைந்து விடும் ஆனால் தொழிலை சிறப்பாக நடத்த முடியாமல் திணருவார் வருமான ஏற்ற இறக்கம் காணும் மாததாந்திர பட்ஜெட்டில் துண்டு விழும் தன் மீது பாசமாக உள்ள குடும்ப உறவுகளை சரியாக பேண முடியாததை நினைத்து அவர் மனம் புழுவாய் துடிக்கும், அல்லது ஜாதகருக்கு தொழில் நன்றாக அமைந்து விடும், ஸ்திர தன்மை வருமான நிலை போன்றவைகள் ஏற்பட்டுவிடும் ஆனால் திருமண தாமதம் அல்லது சிக்கல், இல்லற குடும்ப உறவுகளை சாமாளிப்பதில் இழுபறி, துக்கம், மறுதிருமணம் போன்றவைகள் ஏற்படவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

இந்த தோஷத்திற்கும் சில விதிவிலக்குகள் உண்டு பொதுவாக இப்படி அமர்ந்துள்ள குருவோ, புதனோ அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சேரும் போதோ, அல்லது அந்த கிரகத்தின் நட்சத்திர சாரத்தை பெறும் போதோ, அல்லது இந்த கிரகங்களினால் பார்க்கும் போதோ, அல்லது 13 பாகைக்குள் இந்த கிரகங்களுடன் சேரும் போதோ கேந்திராதிபத்திய தோஷத்தின் தாக்கம் குறையும்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "ஜோதிட அசுப தோஷங்கள் பகுதி 1 - கேந்திராதிபத்திய தோஷம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger