ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) ஜாதகம் கணிப்பு - கணினித் துறையின் வியாபார ஜாம்பவான்….


ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) ஜாதகம் கணிப்பு - கணினித் துறையின் வியாபார ஜாம்பவான்….

ஸ்டீவ் ஜொப்ஸ் (Steve Jobs) ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தவர் இப்படி தான் ஈடுபட்ட துறைகளில் எல்லாம் எதேனும் சாதனை படைத்தவர், பல ஆயிரம் கோடிகளை ஈட்டிய கோடீஸ்வரர், தன் இளமைகாலத்தில் மிகுந்த சிரமபட்டு பின் மெல்ல மெல்ல வாழ்க்கையில் பெரிய உச்சத்தை தொட்டவர், மொபைல் கணினித் துறையில் முன்னேற விரும்பும் பல இளைஞர்களின் ஆதர்சனமாக உள்ளவர் இவரின் ஜாதகத்தின் மூலமாக இளமைகாலத்தில் மிகுந்த சிரமபட்டு பின் சுயமாக முன்னேற்றம் காணும் அமைப்பு, தத்துவ தேடல், தொழில் துணிவு, ஆகியவற்றை பற்றி பார்ப்போம்.

ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) ஜாதகம்


 
சிம்ம லக்னத்தில் பிறந்த ஸ்டீவ் ஜொப்ஸ் தன் பிறப்பிலேயே சிக்கல்கள் கொண்டவர் அதாவது முதலில் சிம்ம லக்னத்தில் ராசியாதிபதியும் லக்ன சாரம் பெற்றவரும் ஆன மிக முக்கியமான கிரகமான சூரியன் ஜாதகரின் பிறப்பு குழந்தைபருவ காலத்தை தீர்மானிக்க காரகத்துவம் பெற்றவர் அவர் சிம்ம லக்ன பகை ஸ்தானமான மகரத்தில் அமர்ந்து அதுவும் பகை சாரம் ஆன இராகு சாரத்தில் இருந்து நவாம்சத்திலும் பகை ராசியை அடைந்து அஷ்டபாத துவைதாம்சம் சக்கரத்தில் நீசமும் ஆகிறார் இதனால் திருமணம் ஆகாத இரண்டு பல்கலைக்கழ மாணவர்களுக்குப் குழந்தையாக பிறந்தார் ஸ்டீவ் ஜொப்ஸ். இவரின் பெற்றோர் இவரை வேறு ஜோடிக்கு தத்து கொடுத்து அங்கு வளர வேண்டிய நிலை ஏற்பட்டது.

வளர்இளம்பருவ காரகத்துவம் பெற்ற 2 ஆம் வீட்டின் அதிபதியும் புதனும் ஆனவர் 12 ஆம் மறைவு ஸ்தானாதிபதியின் சாரம் பெற்று 6 ஆம் மறைவு ஸ்தானத்தில் மறைந்தும், நவாம்சத்திலும் 8 ஆம் மறைவு ஸ்தானத்தில் மறைந்தும் மிக கடுமையாக பலவீன அடைந்துள்ளார் இதனால் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தத்து கொடுக்கபட்டு சரியாக படிப்பை தொடரவும் முடியாமல் நண்பர்களின் உதவி நாடி வாழ வேண்டிய நிலைக்கு தள்ள பட்டார்.

தாய் ஸ்தானமான 4 ஆம் வீட்டிற்கு அதிபதியும் 9 ஆம் திரகோண ஸ்தானமான பாக்ய ஸ்தான அதிபதியும் ஆன செவ்வாய் 9 ஆம் ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற போதும் ஏன் இவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்று தோன்றலாம் ஆம் சிம்ம லக்னத்திற்கு 9 ஆம் ஸ்தானம் பாதக ஸ்தானம் அந்த ஸ்தானத்தில் பாதகாதிபதியே ஆட்சி பெற்றதால் வாழ்வில் பாதகங்களை அதாவது கஷ்டங்களை அனுபவிக்காமல் இது போன்ற ஜாதகங்களால் யோகத்தை பெற முடியாது அதுவும் செவ்வாய் கேதுவின் சாரம் தத்துவ ஸ்தானமான 9 ஆம் ஸ்தானத்தில் மெய்ஞான கிரகமான கேதுவின் சாரம் செவ்வாய் பெற்றதால் மேலும் குரு, கேது சேர்க்கை நவாம்சத்தில் குரு, சனி சேர்க்கை என இவைகளால் சிலகாலம் ஆசிரம வாழ்க்கை, ஹிப்பி தத்துவ ஈர்ப்பு, பின் புத்த மத நம்பிக்கை ஏற்பட்டது.

தனது 21 வயதில் அவரது வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை 1976 ல் ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து நிறுவினார் தொழில் நிறுவனத்தை நிறுவுவதற்கு சனியின் பலம் மிக முக்கியம் என்று ஏற்கனவே போன பதிவுகளில் சொல்லி இருந்தேன் இவரின் ஜாதகத்தில் தொழில் கூட்டு ஸ்தானமான 7 ஆம் வீட்டின் அதிபதியான சனி 3 ஆம் வீட்டில் உச்ச பலம் பெறுகிறார், அதுபோக பஞ்சாம்ச சக்கரங்களில் சுமார் நான்கு சக்கரங்களில் சனியும், தொழில் ஸ்தான அதிபதியான சுக்கிரன் சேர்ந்து அமர்ந்து பலம் பெறுகிறார்கள்,

கணினித்துறையில் சாதிக்க சந்திரன், சுக்கிரன், புதனின் பலம் மிக முக்கியம் இவரின் ஜாதகத்தில் 12க்குடை சந்திரன் 8ல் அமர்ந்து கெட்டவன் கெட்டால் லாபம் என்ற அடிப்படையில் விபரீத ராஜயோகம் பெற்றுள்ளதும், பஞ்சாம்ச சக்கரங்களில் இரண்டில் புதன் ஆட்சி, உச்சம் அடைந்துள்ளதும், மேலும் தொழில் ஸ்தான அதிபதியும் ஆடம்பர வசதிபொருள்களின் காரகத்துவமும் பெற்ற சுக்கிரன் 3, 10 ஸ்தான அதிபதி 5ல் அமர்ந்து 5க்குடைய குருவால் பார்க்கபட்டு நுகர்வுபொருள்களின் காரகத்துவம் பெற்ற இராகுவுடன் சேர்ந்து லக்னாதிபதியின் சாரம் பெற்று வலுவடைந்துள்ளதாலும் மேலும் உச்சம் பெற்ற நட்பு கிரகமான சனியால் 3ஆம் பார்வையாக பார்க்க பட்டும், தசாம்சம் சக்கரத்தில் 11ல் குரு ஆட்சி பெற்று உடன் ராகு, சந்திரனுடன் வலுவடைவதாலும் தனது 21 வயதில் துவக்கிஆப்பிள் நிறுவனம் 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனமாக ஆனது,

ஆனால் சுக்கிரனுக்கு சுய பலம் குறைந்துள்ளதால் பிற கிரகங்களின் வலுவில் உள்ளதால் பிற கிரகங்களின் ஒத்துழைப்பு கிடைக்காத காலத்தில் தான் வளர்த்திய அந்த நிறுவனத்தை வேறு ஒருவரிடம் விட்டுக்கொடுத்து வரவேண்டிய நிலைமையும் அவர் வாழ்வில் ஏற்பட்டது அப்போது அவர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலைக்கும் ஆளானார்.

தைரிய ஸ்தானமான 3ல் உச்சம் பெற்ற சனியால் துணிவு மிக்கவராக திகழ்தார்,  மறைந்த புதன் நிறைந்த அறிவை தரும் என்பது பழமொழி, மேலும் சொற்ப்பொழிவு ஸ்தானமான 9 ஆம் ஸ்தான அதிபதி செவ்வாய் 9 ஆம் ஸ்தானத்தில் ஆட்சி எனவே ஸ்டீவ் ஜாப்ஸ் சிறந்த பேச்சாளர் ஆகுவும் திகழ்ந்தார், லக்ன பாவக சக்கரத்தின் படி சனி இரண்டில் உச்சம் அதற்க்கு பகை கிரகமான செவ்வாய் 7ல் சமசப்தமமாக இருப்பதால் இதனால் தொழில் கூடத்தில் எதையும் கடுமையான உத்தரவுகளால் வேலை வாங்க கூடியவர்.

சிம்ம லக்ன யோகாதிபதியான செவ்வாய் ஆட்சி பெற்றும் அதற்கு நேர்எதிர் ஸ்தானத்தில் பகை கிரகமான சனி உச்சம் பெற்றும் உள்ளதால் வாழ்க்கையின் எதிர்எதிரான காலங்களிலும் எதிர்எதிரான வாய்ப்புகளிலும் துவண்டு விழாமல் சாதித்து காட்டினார்.

தூர தேச பயண ஸ்தானமான 12 ஆம் மறைவு ஸ்தானாதிபதியின் சாரம் பெற்று 6 ஆம் மறைவு ஸ்தானத்தில் உள்ள புதனின் திசையில் மேலே சொன்னது போல் கஷ்டமாகவும், நாடும் ஊரும் சுற்றி திரிந்தும் கழிந்தது, நாம் ஏற்கனவே முந்தைய பதிவுகளில் சொல்லி இருக்கோம் அதாவது ஒரு ஜாதகத்தில் இராகு கேதுவின் சாரம் பெறுவதும் அதேநேரத்தில் கேது இராகுவின் சாரம் பெறுவதும் மிக சிறந்த யோகம் ஆகும் அப்பேர்பட்ட கேதுவின் 11ல் சுய சாரம் பெற்ற குருவுடன் சேர்ந்த கேதுவின் திசையில் தனது நிறுவனத்தை பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றினார், சுக்கிர திசையின் பிற்பாதியில் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்திற்கே வந்தார், ராகுவின் சாரம் பெற்று லக்னத்தை பார்க்கும் சூரியனின் திசையில் ஆப்பிள் நிறுவனத்தை சிறந்த வளர்ச்சி பாதையில் கட்டமைத்தார், ஆயுள் ஸ்தானமான 8 ஆம் மறைவு ஸ்தானத்தில் அமர்ந்த 12 க்குடைய சந்திரனின் திசையில் இயற்கை ஏய்தினார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) ஜாதகம் கணிப்பு - கணினித் துறையின் வியாபார ஜாம்பவான்…."

கருத்துரையிடுக

Powered by Blogger