சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) ஜாதகம் - கர்ம யோகம், குரு அருள், தெய்வீக ஈர்ப்பு சக்தி..

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) ஜாதகம் கணிப்பு

 இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவரும் இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரும் சுவாமி விவேகானந்தர் இவரின் கருத்துகள், எழுத்து, பேச்சுக்களும் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக இருந்தது, இராமகிருஷ்ண பரமஹம்சர் ஞான மார்கம் என்றால் சுவாமி விவேகானந்தர் கர்ம மார்கம், இவரின் ஜாதகத்தை கொண்டு கர்ம யோகம், விளக்கால் மட்டுமே விளக்கை ஏற்ற முடியும் என்று சொல்லுவார்கள் அது போல் வழிகாட்டும் குருவின்றி எந்த யோகமும் கை கூடாது அதனால் நல்ல குரு கிடைக்கும் புண்ணியம், தெய்வீக ஈர்ப்பு சக்தி, பேச்சாற்றல் ஆகிய பற்றி பார்போம்.
 பிரபல ஜாதகங்கள்
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) ஜாதகம்

முதலில் நல்ல குரு கிடைக்கும் புண்ணியத்திற்கு 5 ஆம் ஸ்தானமும், 9 ஆம் ஸ்தானமும் நல்லவிதமாக பலம் பெறுவது மிகவும் முக்கியம் விவேகானந்தர் தனுசு லக்னம் தனுசு லக்னத்திற்கு 5,9 க்குடைய சூரியனும், செவ்வாயும் இயற்கையிலேயே நட்பு கிரகங்கள் 9 க்குடைய சூரியன் சுய சாரம் பெற்று லக்னத்திலேயே அமர்ந்துள்ளது இது மிக சிறப்பு அது போக பஞ்சாம்ச சக்கரங்களில் 4 அம்சத்தில் சூரியன் குருவின் வீட்டிலேயே அமர்ந்து வர்க்கோத்தம யோகம் பெற்றுள்ளது அதாவது வர்க்கோத்தம பலம் பெறுவதன் மூலமாக சூரியன் வெறும் மேலொட்டமான பலத்தை தண்டி ஆழமான பலத்தை பெறுகிறது அப்படிபட்ட 9 க்குடைய சூரியன் லக்னத்திலேயே அமர்ந்து சுய சாரமும் பெற்றதால் தான்

எதையும் முற்றிலும் ஏற்றுக் கொள்ளும் முன் அதனை சோதித்துப் பார்க்கும் குணம் கொண்ட விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை,  குரு உபதேச ஸ்தானமான 9 க்குடைய ஆத்மகாரகனான சூரியன் லக்னத்திலேயே அமர்ந்ததால் இராமகிருஷ்ண பரமஹம்சரே தனாக முன் வந்து தன் சீடனை கண்டுகொண்டுவிட்டதாக உணர்ந்து விவேகானந்தருக்கு, பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள வைத்து பின் கர்ம மார்க்கத்தை நோக்கி வழியனுப்பியும் வைத்தார், 5 க்குடைய செவ்வாய் ஞானத்தன்மையான கேதுவின் சாரத்தில் ஆட்சி பெற்றதால் தான் குரு சொன்னதை உணர்ந்து கொள்ளும் பூர்வபுண்ணியத்தையும் பெற்றார்.

வெறும் 9 ஆம் ஸ்தானம் மட்டும் பலம் பெற்றால் குருவின் அருகில் இருந்து ஞானத்தை கேட்டுக் கொண்டே இருப்பார் ஆனால் உணரவோ கடைபிடிக்கவோ மாட்டார் இப்படி பல பேர்கள் குருவை சுற்றி இருப்பார்கள், 5 ஆம் ஸ்தானமும் பலம் பெற்ற ஒரு சிலரே அதை உணர்வர்.

உபநிஷத்துக்கள், சாஸ்திர ஞானம் பெற்றிருக்க வேண்டுமானால் 5 ஆம் ஸ்தானம் பலம் பெற வேணும் 5 க்குடைய செவ்வாய் ஞானத்தன்மையான கேதுவின் சாரத்தில் ஆட்சி பெற்றும் மேலும் இராசியிலும், நவாம்சத்திலும் உபநிஷத்துக்கள், சாஸ்திர கிரகமான குருவின் பார்வை பலமும் பெற்று உள்ளது இது சிறந்த குருமங்கள யோகம் ஆகும், அது போக நவ அம்ச சக்கரங்களில் சுமார் 6 அம்ச சக்கரங்களில் குரு பகவான் செவ்வாயின் வீட்டிலேயே அமர்ந்துள்ளார் அது போக மீதி 3  சக்கரங்களிலும் செவ்வாயின் வீட்டை பார்க்கவும் செய்கிறார் இதற்கொல்லாம் பலன்கள் பண்டித ஞானமும், இவரின் ஞானத்தால் அனைவரும் ஈர்க்க படுவர், குரு செவ்வாயும் இப்படி அமர்ந்தால் அவர் கர்ம மார்க்கமாகவே அதை அனைத்து மக்களுக்கும் போதிப்பார், அவர் முகத்தில் ஒருவித ஒளிவட்டமும் ஏற்படும், தெய்வீக ஈர்ப்பு சக்தியும் ஏற்படும்.

சந்நியாசி யோகம் ஏற்படுவதற்கு சனி, சந்திரன் பலமான தொடர்பு வேண்டும் சுவாமியின் ஜாதகத்தில் வித்தையின் ஸ்தானமான புதனின் வீட்டில் சனி சந்திரன் சேர்க்கை ஏற்பட்டு சனியும் சந்திரனும் மனோகாரகனான சந்திரனின் சாரமே பெற்றதால் மன எல்லாம் ஞானம், துறவு வாழ்க்கையில் ஆர்வமும் பின் அந்த நிலையையும் அடையவும் செய்தார், மேலும் மோட்ச ஸ்தானமான 12 க்குடைய செவ்வாய் 5 ல் ஆட்சி பெற்று 12 ஆம் வீட்டை பார்பதுவும், சந்நியாச கர்ம காரகனான சனி 3 ஆம் பார்வையாக 12 ஆம் வீட்டை பார்பதுவும் சிறப்பு.

பாதகாதிபதி புதன் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்ததும் 8 க்குடையவனின் சாரம், 2 க்குடைய குடும்ப ஸ்தானாதிபதி சனி 8 க்குடையவனின் சாரம் அவருடன் சேர்க்கை ஏற்பட்டதும், நவாம்சத்திலும் சனி 8 ல் அமர்ந்ததும் இல்லற வாழ்க்கை யில்லாது போனதற்கு காரணமாக அமைந்து விட்டது.

பேச்சாற்றலுக்கு - லக்னத்திற்கு 2 ல் புதனும், சுக்கிரனும் நல்ல நிலையில் சேர்ந்து அமர்ந்தால் இனிமையான பேச்சும், எவ்வளவு பெரிய விஷயமானாலும் எளிமையாக புரியவைக்கும் பேச்சுத்திறமையும் ஏற்படும், பேச்சுவதற்கு கான விஷய ஞானமும் ஏற்படும், பேச்சில் சாதுர்யமான வார்த்தை பிரயோகமும் இருக்கும்.

சுவாமி அவர்களுக்கு  லக்னத்திற்கு 2 ல் சனி வீட்டில் புதனும், சுக்கிரனும் நல்ல நிலையில் சேர்ந்து அமர்ந்ததுடன், நவாம்சத்தில் 2 ல் குரு அமர்ந்து செவ்வாயால் பார்க்க பட்டதும், பாத துவைதாம்சம், சதுர்பாத துவைதாம்சம் ஆகிய அம்சங்களில் லக்னதிற்கு 2 ல் குருவும், சனியும் சேர்ந்து அமைந்தால் ஞான வேத  தத்துவ சித்தாந்தங்களை பேசி இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. செவ்வாய் 5 ல் ஆட்சி பெற்று குருவின் பார்வையை பெற்றதால் சிறந்த எழுத்தாற்றலும் கிடைத்தது.

தொழிற்சாலை, நிறுவனம், அறக்கட்டளை, மடம் போன்றவற்றை நிறுவ வேண்டுமானால் சனியின் தொடர்பு 10 ஆம் ஸ்தானத்திற்கும், 10 ஆம் ஸ்தானத்தின் தொடர்பு சனிக்கும் பலமாக வேண்டும்.

சுவாமி அவர்களுக்கு 10 க்குடைய புதனுக்கும், சனிக்கும் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளது அது போக பாத துவைதாம்சம், சதுர்பாத துவைதாம்சம் ஆகிய அம்சங்களில் புதன் ஆட்சியும் அடைந்துள்ளது ஆனால் இராகு, கேதுக்கள் உடன் அமர்ந்ததால் தொழிற்சாலை, நிறுவனம் ஆரம்பிக்காமல் ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் ராமகிருஷ்ணா மடம் போன்ற அறக்கட்டளைகள், மடங்களை நிறுவினார்.

12 ல் புதனின் சாரம் பெற்ற இராகுவின் திசையில் அதாவது இள வயது முதலே இசை வாத்தியங்களும், தியானமும் பழகினார், ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் தத்துவம் பயின்றார்.  ஏற்கனவே செவ்வாய், குருவின் உயர்ந்த தொடர்பை மேலே சொல்லி இருக்கிறேன் செவ்வாயின் சாரம் பெற்று பின் வந்த 16 வருஷ குரு திசையில் குருவின் அருள், ஞானம், உலகப் புகழ், இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் போன்ற அறக்கட்டளைகள், மடங்களை நிறுவி, அந்த குருவின் திசையிலேயே அதாவது உபய லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய தனுசு லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும், புதன், சுக்கிரன் இந்த இரண்டு மாரகாதிபதிகளும் 2ல் சேர்ந்து அமர்ந்து ஆயுள் ஸ்தானமான 8 ஆம் வீட்டை பார்ப்பதால் குறைவான ஆயுள் பெற்று குருவின் திசையிலேயே மோட்சத்தையும் அடைந்தார்.

நேரம் கிடைத்த அளவுக்கு சுவாமியின் ஜாதக விஷயங்களை பற்றி எழுதி உள்ளேன்.

0 Response to "சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) ஜாதகம் - கர்ம யோகம், குரு அருள், தெய்வீக ஈர்ப்பு சக்தி.."

கருத்துரையிடுக

Powered by Blogger