ஜாதகத்தில் சனி நான்காம் வீட்டில் (4ல்) இருந்தால்...

ஜாதகத்தில் சனி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -

சனி நான்கில் சாதகமான நிலையில் இருந்தால் : -

குடும்பத்தினருடன் அக்கறை மேலும் அர்ப்பணிப்பு உடையவராக இருப்பார், பற்றாக்குறை அல்லது எளிமையான வசதி குறைவான வீடுகளில் வசித்தல் அல்லது விரும்புதல், பழைய வீடுகள் & தொழிற்சாலை வாங்கும் யோகம், பொறுப்புணர்வு மிக்கவர், ஆன்மீக திருப்பணிகளில் ஆர்வம் உள்ளவர், சமூகத்தில் உயர் நிலைகள் அடைவார், வணிக தொழிற்கூடங்கள் கட்டக்கூடியவர், வாழ்வின் கடைசி காலங்களில் நல்ல மதிப்புடன் திகழ்வார், நிலையான சொத்துக்கள், நிலங்கள் சேர்ப்பார், தனது தொழில் பயிற்சி திறமை வளர்த்துக் கொள்ள ஆர்வம் காட்டுவார்.

பொறியியல் துறை, உலோகத்துறை, விவசாய தொழில்கள், ஆராய்ச்சி, சுரங்கங்கள், கட்டிடங்கள், தொழிற்சாலை துறைகளில் உயர் கல்வி அமையலாம்.

சனி நான்கில் பாதகமான நிலையில் இருந்தால் : -

தந்தை மற்றும் தாய் ஏதேனும் பாதிப்பு அல்லது தாய்வழி உறவுகளில் ஒத்துவராத தன்மை, குழந்தை பருவகாலங்களில் நோய் வாய்ப்படும் நிலை, நோய் எதிர்ப்புசக்தி குறைவு, ஒதுங்கிய வாழ்க்கை வாழ விரும்புபவர் அதனால் உறவினர்களுடன் நெருங்கி பழகமாட்டார் அதிக பாதகமான நிலையில் இருந்தால் உறவினர்களுடன் வெறுக்கப்படல் ஏற்படும், வயதான காலத்தில் அவதிபடும் நிலை, கல்வியில் தடை, மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் கிடைகாது அப்படியே கிடைத்தாலும் அனுபவிக்க தடை, சுவாச மற்றும் சளி தொல்லைகளால் அவதிப்படலாம், சோம்பல் குணம், வாழ்க்கையில் தூய்மை இருக்காது, வேலைவாய்ப்பு தடை, வருமானக் குறைவு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜாதகத்தில் சனி நான்காம் வீட்டில் (4ல்) இருந்தால்..."

கருத்துரையிடுக

Powered by Blogger