ஜாதகத்தில் கேது நான்காம் வீட்டில் (4ல்) இருந்தால்...

ஜாதகத்தில் கேது லக்னத்திற்கு நான்காம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -கேது நான்கில் சாதகமான நிலையில் இருந்தால் : -

பரந்த மனப்பான்மை உண்டானவர், பூர்வீக சொத்துகள், பழைய வீடு அமைப்பு இருக்கும், வலுவான உளவியல் அடித்தளம் மற்றும் உள் உணர்வுகள் உள்ளவர், ஆன்மீக சார்ந்த குடும்ப வாழ்க்கை, மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுதல் அவர்களின் பிரச்சினை தீர உதவுதல், தானாகவே கற்றுக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர், சொந்தமாக புதிய கலைகளை உருவாக்கும் ஆற்றல் பெற்றவர், தெய்வீக புண்ணியங்கள் நிறைந்தவர், சமூக தொண்டு அல்லது ஆன்மீக பணி செய்பவர், அமைதியான இறுதி கால வாழ்க்கை அமையும், ஆன்மீக சுழலில் அருகில் வாழும் இடம் - கோயில், மடம், சபை…

உயர் கல்வி மதம், வெளியுறவு விவகாரங்கள், மருத்துவம், மருந்துப் பொருட்கள், ஜோதிடம், மனோதத்துவம், கழிவு மறுசுழற்சி, புலன் ஆய்வுத்துறை, சட்டம் தொடர்பான கல்வித்துறைகளில் அமையலாம்.

கேது நான்கில் பாதகமான நிலையில் இருந்தால் : -.

தாயன்பு இல்லாமல் போய்விடும் (அ) தாய்க்கு தோஷம் ஏற்படும், பெரிய மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை, கல்வியில் தடை, மகிழ்ச்சி, சொத்துக்கள், சொந்தங்கள், வண்டி வாகனங்கள் கிடைகாது அப்படியே கிடைத்தாலும் அனுபவிக்க தடை, வீட்டு சூழல்கள் சுலபாக இருக்காது, ஆரோக்கிய குறைபாடு, சந்தேக புத்தி, ஒழுக்க குறைபாடு, நீடிக்காத சுக போக மகிழ்ச்சிகள், வாழ்வின் இறுதியில் அசாதாரண அனுபவங்கள் இருக்கும், முதுமை நேரத்தில் வாழ பிரச்சினைகள், தன்னை ஏமாற்றுதல்.

இராகு & கேது ஆகிய இரு கிரகங்களும் இவ்வாறான பலன்களை தந்தாலும் வாங்கும் சாரத்திற்கும் உள்ள இராசி வீடு ஏற்ப இதில் எழுதப் பாடாத பலன்களை தரும் ஆற்றல் பெற்றவர்கள்  
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜாதகத்தில் கேது நான்காம் வீட்டில் (4ல்) இருந்தால்..."

கருத்துரையிடுக

Powered by Blogger