ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 6 - வேசி யோகம், வாசி யோகம்….

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 6 - வேசி யோகம், வாசி யோகம்….

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


வேசி யோகம்
ஜாதகருடை இராசி கட்டத்தில் சூரியனுக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன், ராகு, கேது, சனியை தவிர மற்ற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் போன்ற கிரகங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சேர்ந்து இருந்தால் இந்த வேசி யோகம் உண்டாகும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது சூரியனின் 13 பாகைக்குள் அந்த கிரகங்கள் வரக்கூடாது யோகம் அந்தளவுக்கு வேலை செய்யாது.

இதன் பலன்கள் -
ஜாதகர் அதிருஷ்டசாலியாகவும் சந்தோஷமானவராகவும், நல்லொழுக்கம் உள்ளவராகவும், பிரபலமானவராகவும் மற்றும் பிரபுத்துவ தோற்றம் பெற்றவராகவும் இருப்பார், சொன்னதை செய்து முடிக்கும் ஆற்றல் ஏற்படும்.

 
வாசி யோகம்
ஜாதகருடை இராசி கட்டத்தில் சூரியனுக்கு பன்னிரண்டாம் இடத்தில் சந்திரன், ராகு, கேது, தவிர மற்ற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் போன்ற கிரகங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட சேர்ந்து இருந்தால் இந்த வாசி யோகம் உண்டாகும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது சூரியனின் 13 பாகைக்குள் அந்த கிரகங்கள் வரக்கூடாது யோகம் அந்தளவுக்கு வேலை செய்யாது.

இதன் பலன்கள் -
வளமானவராகவும், மகிழ்ச்சியானவராகவும், தாராளமான மனம் உடையவராகவும், நிர்வாகத்துடன் ஒத்துப்போபவராகவும், வளைந்து கொடுத்து முன்னேறத் தெரிந்தவராக இருப்பார், பாவ கிரகங்கள் இருந்தால் தூக்கமின்மை வரலாம்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 6 - வேசி யோகம், வாசி யோகம்…."

கருத்துரையிடுக

Powered by Blogger