ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 8 - மகாபுருஷ யோகம், லட்சுமி யோகம்...

ஜோதிட ரா யோகங்கள் பகுதி 8 - மகாபுருஷ யோகம், லட்சுமி யோகம்...

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


மகாபுருஷ யோகம்
ஒரு ஆணின் இராசி சக்கரத்தில் லக்னம், சந்திரன், சூரியன் இந்த மூன்றும் ஆண் இராசிகள் என்று வர்ணிக்கபடும் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த இராசிகளில் இருந்தால் இந்த மகாபுருஷ யோகம் யோகம் ஏற்படும் இதில் முக்கியமாக சனி,சுக்கிரன், இராகு, கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கை அங்கே இருக்க கூடாது இருந்தால் யோகம் பலனில்லை.

இதன் பலன்கள் -
வேத ஜோதிடத்தில் இந்த யோகத்தை அரசன், தளபதி, போர்க்கலைகளில் வல்லவன் என்று சொல்ல பட்டுள்ளது இந்த காலகட்டகளில் பார்த்தால் வேலைவாய்ப்பு, பண சம்பாதித்தலில் வல்லவனாக இருப்பான், அந்த ஆண் நல்ல வீரனாகவும், ஆண்மைக்கான குணங்களான தைரியம், போராட்ட குணம், போட்டிகளில் பங்கேற்று வெல்லக்கூடியவனாகவும் இருப்பான், அதே நேரத்தில் கோபமும், அசட்டு துணிவும் கூட ஏற்பட்டு விடும்.
 

 லட்சுமி யோகம்
லட்சுமி யோகங்கள் பல உள்ளது அதில் இது ஒன்று அதாவது லக்னாதிபதியும் பாக்ய ஸ்தானமான 9ஆம் ஸ்தானாதிபதி சேர்ந்து திரிகோண, கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் ஸ்தானங்களில் ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் அடைந்தால் அது லட்சுமி யோகம் ஆகும். இதில் அசுப கிரக சேர்க்கை பார்வை இருந்தால் யோக பலன்குறைவு ஏற்படும்.

இதன் பலன்கள் -
அழகான தோற்றம், அனைத்து இன்பங்களையும் வசதிகளை வாழ்வில் அனுபவித்து வாழும் அமைப்பு ஏற்படும், கற்று தேர்ந்தவர், நேர்மையானவர்,  உயர்ந்த குணங்கள் மற்றும் நற்பெயர் கொண்ட மனிதராக வாழ்வர். இதில் அசுப கிரக சேர்க்கை பார்வை இருந்தால் சாதாரண விளைவுகளே ஏற்படும்.
 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 8 - மகாபுருஷ யோகம், லட்சுமி யோகம்..."

கருத்துரையிடுக

Powered by Blogger