பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (Bhaktivedanta Swami Prabhupada) - இஸ்கான் எனப்படும் கிருஷ்ணபக்தி இயக்கத்தை….

இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தை நிறுவியவரும், உலகெங்கிலும் 120 க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள் மற்றும் வைதீகப் பண்ணைகள்  உருவாக்கியரும், வேத ஞானத்தை பிரச்சாரம் செய்வதற்க்காய் தமது வாழ்வை அர்பணம் செய்ய பிரபு பாதா வின் ஜாதகத்தை இப்போது பார்ப்போம், பிரபுபாதாவின் இலக்கியத் தொண்டு, ஆன்மீக சேவை, சமூக தொண்டு ஆகியற்றை ஸ்வாமியின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பால் பார்ப்போம்.
பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (Bhaktivedanta Swami Prabhupada)
ஜாதகம்

 முதலில் வைதீக புண்ணியம் ஒருவருக்கு சிறப்பாக  இருக்க வேண்டுமானால் ஜாதகத்தில் 1,5,9 ஆகிய ஸ்தானங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஏன்னென்றால் அப்போதே ஆலய தரிசனம், குரு உபதேசம், ஆன்மீக எண்ணங்கள் ஆகியன ஏற்படும் மேலும் தெய்வ அருள் குறைவின்றி இருக்கும்.

ஸ்வாமியின் ஜாதகத்தில் 5 ஆம் ஸ்தானாதிபதி சுக்கிரன் 9 ஆம் ஸ்தானத்தில் நட்பு கிரகத்துடன் கூடி ஒரு கிரகம் நீசமான ஸ்தானத்தில் வேறொரு கிரகம் உச்சமானால் நீச பங்கம் என்ற அடிப்படையில் சுக்கிரன் நீச பங்க பலமும் பெறுகிறார், மேலும் 9 ஆம் ஸ்தானாதிபதி 9ல் உச்சமும் பெறுகிறார் அதுபோக 1 ஆம் ஸ்தானாதிபதி கர்மகாரகன் சனி 10ல் கர்ம ஸ்தானத்தில் உச்சமும் பெறுகிறார் இதனால் 26 ஆவது வயதில் குரு தரிசனம் பெற்றார், புதன் சுக்கிரனின் கூட்டின் காரணமாக அதாவது புதனால் தத்துவ ஞானத்தையும், சுக்கிரனால் ஆழ்ந்த பக்தியையும் பெற்று திகழ்ந்தார், கௌடிய வைஷ்ணவ சமூகம் அவருக்கு "பக்தி வேதாந்தா" எனும் பட்டத்தை அளித்துக் கௌரவித்தது. ஒரே இடத்தில் நில்லாமல் கர்மகாரகன் சனியின் காரணமாக அவர் கர்ம மார்க்கமாக சுற்றிதிரிந்து பல மக்களையும் சந்தித்து கிருஷ்ணபக்தியை பரப்பினார். பொதுவாக 9,10 ல் சனி பலமாக இருந்தால் அவர்கள் ஏதேனும் ஸ்தாபனங்களை நிறுவும் அமைப்பை பெறுவார்.

பக்திரீதியான இலக்கியப் பணிகள் செய்து சிறப்படைய 2,5,8,9 ஆகிய ஸ்தானங்கள் நன்றாக இருக்க வேண்டும் ஸ்வாமியின் ஜாதகத்தில் புதன் 4 வர்க்க சக்கரங்களில் ஆட்சி, உச்சம் அடைந்துள்ளது, மேலும் 2 ஆம் ஸ்தானாதிபதி சனி 10ல் கர்ம ஸ்தானத்தில் உச்சம் பெற்றும் நவாம்சத்தில் அதே மகர லக்ன பெற்று  சாஸ்திர காரகன் குரு, வித்யாகாரகன் புதன், ஞான காரகன் கேது உடன் சேர்ந்திருப்பது சிறந்த பக்திஇலக்கிய பலம் ஆகும்,

மறைவான சாஸ்திர விஷயங்களை வெளிக்கொண்டு வருவதற்க்கான 8  ஆம் ஸ்தானாதின் அதிபதி சூரியன் 8ல் ஆட்சி பெற்று அவருடன் சாஸ்திர காரகன் குருவும், ஞான காரகன் கேதுவும் சேர்ந்துள்ளது அதுபோக சுமார் 8 வர்க்க சக்கரங்களில் குருவும், கேதுவும் சேர்ந்தே உள்ளது இதனால் பல ஆண்டுகளாக ஆழ்ந்த படிப்பிலும், எழுத்திலும் ஈடுபட்டு பிற்காலத்தில் ஸ்ரீல பிரபுபாதா ஸ்வாமிகள் அறுபதுக்கும் மேலான அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்புக்களையும் விரிவுரைகளையும் எழுதி, இந்தியாவின் தத்துவங்களையும், இலக்கியங்களையும் கூட சுருக்கமாக எழுதி வெளியிட்டு கிருணஷ்பக்தர்களால் பெரிதும் கொண்டாடபட்டார்.

வெளிநாடு பயணங்களின் 3,9,12 ஆம் ஆகிய ஸ்தானங்கள் ஸ்வாமியின் ஜாதகத்தில் 3,9,12 ஆம் ஸ்தானாதிபதிகள் பலம் பெற்றதுடன், 3,12 க்குடைய குரு 8ல் அமர்ந்து 2 ஆம் ஸ்தானத்தை பார்பதும், சனி பகவான் 3 ஆம் பார்வையாக 12 ஆம் ஸ்தானத்தை பார்பதும், நவாம்சத்தில் குரு, புதன், கேது உடன் சேர்ந்திருந்து பலம் அடைவதால், 9ஆம் குரு உபதேச ஸ்தானாதிபதி புதன் பலமான உச்சத்தின் காரணமாகவும் பிரச்சாரம் செய்வதற்காக வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பல சுற்றுப் பிரயாணங்களின் காரணமாக ஸ்வாமி ஆறு கண்டங்களுக்கும் பயணப்பட்டு கிருஷ்ணபக்தியை பரப்பினார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (Bhaktivedanta Swami Prabhupada) - இஸ்கான் எனப்படும் கிருஷ்ணபக்தி இயக்கத்தை…."

கருத்துரையிடுக

Powered by Blogger