சொந்த வீடு தரும் கிரகங்கள், ஸ்தானங்கள்…


சொந்த வீடு தரும் கிரகங்கள், ஸ்தானங்கள்…

எவ்வாறான வழிகளில் பொதுவாக சொந்த வீடுகள் அமைகின்றன என்பதை முதலில் பார்ப்போம்

தனக்கு சொந்தமாக உள்ள நிலத்தில் வீட்டை தானே முன்னின்று கட்டுவதன் மூலமாக சொந்த வீடு யோகத்தை பெறுவது.
கட்டப்பட்ட வீட்டையோ / பிளாட் / அபார்ட்மெண்ட் போன்றவற்றை வாங்குவதன் மூலமாக சொந்த வீடு யோகத்தை பெறுவது.
பூர்வபுண்ணியமாகவோ அல்லது பூர்வபாவத்தின் மூலமாகவோ தானமாகவோ அல்லது உறவுமுறையின் காரணமாகவோ சொந்த வீடு யோகம் அமைவது

இன்னும் பல வழிகளில் வரலாம் இது பெரும்பாலானதாக இருக்கும்.

சொந்த வீடு தரும் ஸ்தானங்கள் -
நான்காம் ஸ்தானம் = வீடு
மூன்றாம் ஸ்தானம் = நிலம்
ஐந்தாம் ஸ்தானம் = அந்த வீட்டை அதற்கு சொந்தமானவர் அனுபவிக்கும் முறை காட்டும் ஸ்தானம்.
பத்தாம் ஸ்தானம் = தொழிலினால் ஏற்படும் வீடு யோகம், தொழிலிற்கும் அந்த வீட்டிற்க்குமான தொடர்பை  காட்டும் ஸ்தானம்.

மேலும் 8 ஆம் ஸ்தானம், 12 ஆம் ஸ்தானம் ஆகிய ஸ்தானங்களும் முக்கியம்.

சொந்த வீடு தரும் கிரகங்கள் -
சுக்கிரன், செவ்வாய், சந்திரன் மேலும் 3,4,5 ஆம் ஸ்தானாதிபதிகள் வலிமையாக இருக்கவேண்டும், புதிதாக சொந்த வீடு அமைய அவர்களின் திசாபுத்தி வர வேண்டும், மேலும் கோச்சாரம் அதில் சனி, குரு சாதகமான நகர்வாக இருக்க வேண்டும்.
எந்த கிரகங்கள் சிறப்பாக வலிமையாக இருந்தால் எப்படிபட்ட முறைகளில் சொந்த வீடு அமையலாம் என்பதை பார்ப்போம் : -- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "சொந்த வீடு தரும் கிரகங்கள், ஸ்தானங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger