ஜாதகத்தில் சனி ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…

ஜாதகத்தில் சனி ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…

முதலில் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் உச்ச பலம் பெற்ற ஒரு கிரகம் தன் உச்ச பலத்தை செயல்படுத்த முடியாத சில அமைப்புகளும், நீசம் அடைந்த ஒரு கிரகம் சில அமைப்புக்களால் சிறப்பான பலன்களை தருவதும் நம் அனுபவ உண்மை அதனால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனிதனியாக தக்கவாரு அவைகள் மாறுபடும் தன்மை கொண்டவை எனவே ஆட்சி, உச்ச பலத்தை ஒருவர் அனுபவிக்க முடியாமலும் போகலாம் அல்லது குறைவாக அனுபவிக்கலாம், அல்லது அந்த முழுமையான திசா பலன்கள் இன்னும் வராமலும் இருக்கலாம்.
சனியின் ஆட்சி வீடு மகரம் ராசி, கும்பம் ராசி
சனியின் உச்ச வீடு துலாம் ராசி

ஜாதகத்தில் சனி ஆட்சி வீடான மகரம் ராசி, கும்பம் ராசியில் அமர்ந்திருந்தால்

சனி பகவான் மகரத்தில் ஆட்சி ஆவதற்கும் கும்பத்தில் ஆட்சி ஆவதற்கும் வித்தியாசம் நிறைய உள்ளது இருந்தாலும் பொதுவான அம்சங்களை மட்டும் இப்போது பார்போம், தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், கடும் உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வருபவர், நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை சேர்ப்பவர், தீர்க்காயுள் உள்ளவர், அதிக பிள்ளைகள், ஆன்மீக திருப்பணிகளில் ஈடுபாடு, தான் சார்ந்த தொழில் துறையில் சாதனை படைப்பவர், நிலையான கனவுகள் ஆசைகள் உள்ளவர் அதை நிறைவேற்றியும் காட்டுவார், முதிர்ந்த பக்குவமும் நேர்மையும் உள்ளவர், ஆள்பலமும் செல்வாக்கும் உள்ளவர்.

ஜாதகத்தில் சனி உச்ச வீடான துலாம் ராசியில் அமர்ந்திருந்தால்
சனி பகவான் உச்சம் ஆனால் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் மேலும் தொழில் துறை சார்ந்த சங்கங்களில் தலைமை பொறுப்புகளில் வருபவராகவும் ஆவார், கோயில் ஆன்மீக திருப்பணிகளில் செல்வாக்கு பெற்றவர், நீதிமானாக திகழ்வார், கர்ம வீரராக திகழ்வார், தன் இலட்சியத்தை நோக்கி பொறுமையாக நகர்ந்து வெற்றி அடைவார் இடர்பாடுகளுக்கு கலங்க மாட்டார், மக்கள் பணிகளில் ஈடுபாடு உள்ளவர், இவரின் சமூக தொண்டு காரணமாக சுற்றத்தாரால் போற்றப்படுவார், தீர்க்காயுள் உள்ளவர், அரசியல் பலம் உள்ளவர், முதிர்ந்த பக்குவமும் நேர்மையும் உள்ளவர், ஆள்பலமும் செல்வாக்கும் உள்ளவர், தான தர்மங்களில் பிரியம் உள்ளவர், சட்டத்திற்கு உட்டபட்டும் சட்டத்திற்கு புறம்பாகவும் இருவழிகளிலும் வருமானம் ஈட்டத் தெரிந்தவர்.இதில் உள்ள பெரிய சிக்கல் என்னவென்றால் சனி பகவான் ஆட்சியோ அல்லது உச்சமோ அதாவது அந்த 2 ½ வருடகாலங்களில் பிறக்கும் அத்தனை குழந்தைக்கும் மேலே சொன்ன இந்த பலன்கள் முழுமை போய் சேராது சனி பகவான் விஷயத்தில் பல சூட்சம பலங்களும் வலிமையடையும் முறைகளும் உள்ளன அந்த காலங்களில் பிறக்கும் ஒருவருக்கே பலன்கள் முழுமையாக போய் சேரும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜாதகத்தில் சனி ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger