நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகம் கணிப்பு - அவரின் ஆட்சிமுறையும் எப்படி இருக்கும்...


நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகம் கணிப்பு - அவரின் ஆட்சிமுறையும் எப்படி இருக்கும்...

இவ்வளவு உயர்ந்த பதவிகளுக்கு இவர் வருவதற்க்கான ஜோதிட அமைப்புகளை பார்ப்போம், முதலில் ஒருவரின் தலைவிதியை தீர்மானிக்கும் ஸ்தானம் ஆன லக்னத்தில் இந்த பிறவியில் அனுபவிக்கும் 9ஆம் பாக்கியங்களின் ஸ்தான காரகனான சந்திரன் லக்னத்தில் நீசம் அடைந்து அந்த லக்னாதிபதி ஆட்சி அடைவதால் சந்திரனுக்கு நீச பங்க ராஜ யோகம் பெற்று சிறக்கிறது மேலும் 

செவ்வாயின் ஆட்சியுடன் மிகப்பெரிய யோக அமைப்பும் இதில் கலந்துள்ளது அதாவது லக்னமும் விசாகம் நட்சத்திரம் இதனுடன் லக்னாதிபதி செவ்வாயும் விசாகம் நட்சத்திரத்தில் உள்ளது அதாவது பூர்வ புண்ணய ஸ்தானம் ஆன 5 க்குடைய குருவின் சாரம் பெற்றுள்ளது அந்த குரு செவ்வாயின் சாரம் ஆன அவிட்டம் நட்சத்திரத்தில் உள்ளது இது நட்சத்திர பரிவர்த்தனை யோகம், துவாதசவர்க்கங்கள் 5 க்குடைய குரு சுமார் எட்டு இடங்களில் ஆட்சி, உச்சம் அடைந்து சிறந்த மிகச்சிறந்த வர்கோத்தமபலன் ஆகும் அதாவது வர்க்கோத்தம பலம் பெறுவதன் மூலமாக குரு பகவான வெறும் மேலொட்டமான பலத்தை தண்டி ஆழமான பலத்தை பெறுகிறார்

அதாவது தலைவிதியை தீர்மானிக்கும் 1 ஆம் ஸ்தானம், பூர்வ புண்ணயத்தை தீர்மானிக்கும் 5 ஆம் ஸ்தானம்,தங்களின் முன்னோர்களின் புண்ணயத்தை தீர்மானிக்கும் 9 ஆம் ஸ்தானம் ஆக 1,5,9 ஆகிய அனைத்து திரிகோண ஸ்தானங்களுக்கு இடையேயும் மிக பலமான பிணைப்பு உள்ளது இது இவர் முற்பிறவிகளில் மிகச்சிறப்பான தான, தர்ம, புண்ணயங்களை நிறைய செய்தவர் என்று தெளிவாகிறது இது அபூர்வமாக அமையும் யோகம் ஆகும்.

செவ்வாய் ஆட்சி பெற்றதால் செயல் திறமை ஏற்பட்டு விடும் ஆனால் அரசியல் என்றாலே உள்ளே போட்டி பொறாமைகள், துரோகிகள் அவர்களை கவிழ்த்தி மேலே வருவதும், வெளியே போட்டி பகைமைகள், எதிரிகளை கவிழ்த்தி மேலே வருவதும் என இந்த யுத்தத்தில் ஜெயித்தவனே மேலே பதிவிக்கு வர முடியும் ஜென்ம லக்னத்திற்கு பதவி ஸ்தானமான 10 ஆம் ஸ்தானத்தில் சிம்மத்தில் சனி, சுக்கிரன் பகை பெற்று அமர்ந்துள்ளது அதனால் போட்டி பொறாமை துரோகி எதிரிகளை அதிகமாக சந்தித்திருப்பவராக இருப்பார் இதில் சனி ஆனவர் சுயசார பலம் பெற்ற சூரியனால் அஸ்தங்கம் ஆனதாலும் 10 ஆம் ஸ்தானாதிபதி சூரியன் உச்ச புதனுடன் சேர்ந்து பலம் அடைவதாலும் இந்த அனைத்து போட்டி பொறாமை துரோகி எதிரிகளை சந்தித்து அதில் வென்றவராக உள்ளார்.

நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகம்
பதவியேற்பு 26 மே 2014 அதில் இருந்து நடப்பு திசை சந்திர திசையும் குரு, சனி, புதன், கேது புத்திகள் ஆகியவை வரும்.சரி இனி நமது பிரதமரும் அவரின் ஆட்சிமுறையும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் இதற்கு தான் இந்த 10 ஆம் பாத துவைதாம்ச சக்கரமும் தேவைபடும் இதையும் வைத்து பார்ப்போம்(இராசி சக்கரத்தில் 11ல் சூரியன், புதன், கேது) (10 ஆம் பாத துவைதாம்ச சக்கரத்தில் 11ல் குரு, சூரியன்) - அதாவது முதலில் எதிர்மறையான பணவீக்கங்கள் பின் ஆட்சி காலங்களில் பணபுழக்கம் அதிகரிக்கும், இவரின் அயல்நாட்டு பயணங்களினால் அயல்நாட்டு உறவுகள் பலப்படும் ஆனால் வெளிநாட்டின் முதலீடுகள் எதிர்பார்த்த அளவுகளில் வராது.(இராசி சக்கரத்தில் 10ல் சுக்கிரன், சனி) (10 ஆம் பாத துவைதாம்ச சக்கரத்தில் 3ல் சுக்கிரன்) - ஆரம்பிக்கபடும் திட்டங்களில் ஆரம்பித்தில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் பின்பு அதை சரிசெய்த பின்பே திட்டங்களின் பலன்கள் ஒரளவு நல்லவிதமாக வரும், ஆடம்பரமாக ஆரம்பிக்கும் திட்டங்கள் போதிய வளர்ச்சி காணாது, நிர்வாகங்களில் சிக்கனம் இருக்கும், ஒரு சில மந்திரிகளின் துறைகள் சரியான செயல்பாடுகளின்றி இருக்கும் பிற்காலங்களில் அதற்கு ஏதேனும் செய்ய வேண்டி வரும்.(இராசி சக்கரத்தில் 1ல் செவ்வாய், சந்திரன்) (10 ஆம் பாத துவைதாம்ச சக்கரத்தில் 1ல் இராகு, கேது) - மழையளவுகளில் 2015, 2016 மற்றும் 2017 பாதி வருடம் வரை ஆகிய காலங்களில் மழையளவுகள் குறைந்தும் மிகஅதிகரித்தும் காணப்படும் 2018, 2019 காலங்களில் சமமான மழையளவு இருக்கும்.(இராசி சக்கரத்தில் 4ல் குரு, மாந்தி, 5ல் இராகு) (10 ஆம் பாத துவைதாம்ச சக்கரத்தில் 12ல் செவ்வாய், சந்திரன், புதன்) - 2015, 2016 மற்றும் 2017 பாதி வருடம் வரை தொழிற் துறை வளர்ச்சி தளர்வாகவே இருக்கும், வெளி தேசங்களின் இயற்கை, பொருளாதார சூழல்களின் முடக்கம் காரணமாக நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்திருக்கும் அது பின் 2017 பாதிக்கு மேலும் 2018, 2019 காலங்களில் எதிர்பார்த்த தொழிற் துறை வளர்ச்சிகள் ஏற்படும் குறிப்பாக பொறியியல் துறை, உலோகத்துறை, சுரங்கங்கள், மின்சாரத் துறை, நில கட்டிட துறைகள் வளரலாம்.2016 ஆம் வருட பாதிக்கு மேல் 2017 பாதிக்குள் வரும் அரசியல் போட்டிகளில் அந்த அளவு சாதகமான வெற்றிகள் வராது.

இதில் இன்னும் விரிவாக எழுதலாம் பின் நேரம் கிடைத்தால் இன்னும் விரித்து எழுத முயற்சிக்கிறேன்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "நரேந்திர மோதி (Narendra Modi) ஜாதகம் கணிப்பு - அவரின் ஆட்சிமுறையும் எப்படி இருக்கும்..."

கருத்துரையிடுக

Powered by Blogger