ரத்தன் டாடா (Ratan Tata) ஜாதகம் கணிப்பு - பல்துறை நிர்வாகம், தசாம்ச சக்கரத்தின் சிறப்பு…

ரத்தன் டாடா (Ratan Tata) ஜாதகம் கணிப்பு -  தொழிற்இயக்குநருக்கான சிறந்த அமைப்புகள்

இந்தியாவின் புகழும் மிகுந்த டாடா குடும்பத்தில் ரத்தன் டாடா பிறந்தார்,  இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்இயக்குநராகவும் நிர்வாகியாகவும் டாடா குழுமத்தின் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர், ரத்தன் டாடா வணிகம் மற்றும் தொழில்கள் குறித்த பிரதம மந்திரியின் மன்றத்திலும் உறுப்பினராக பணியாற்றியவர், இந்தியாவின் பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம பூஷண் விருது போன்ற எண்ணற்ற விருதுகளுக்கும் சொந்தக்காரர், அவரின் ஜாதகத்தின் மூலம் தொழிற்இயக்குநருக்கான சிறந்த அமைப்புகள், பல்துறை நிர்வாகம் செய்யும் திறமை மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றை பார்ப்போம்.

ரத்தன் டாடா (Ratan Tata) ஜாதகம்
 இந்த ஜாதகத்தின் பலம் அறிய உங்களுக்கு தசாம்சமும் தெரிய வேண்டும் இதுவே ரத்தன் டாடா தசாம்ச சக்கரம்
 

 முதலில் உங்களுக்கு ஒரு தொழில் அதிபரின் ஜாதகத்தில் தனகாரகன் அதாவது நிதி நிர்வாகி குரு பகவான் நீசமா என்று தோன்றலாம் மேலோட்டமாக இராசிக்கட்டதில் பார்த்தால் அப்படி தோன்றலாம் ஆனால் குரு உத்திராடம் 278:45:30 இந்த பாகையில் இருக்கும் போது இராசிக்கட்டதில் நீசமானாலும் நவாம்சம், பாத துவைதாம்சம் ஆகிய சக்கரங்களில் ஆட்சி ஆவார் அதனால் வலு கூடும் அதுபோக 2,4 ஆம் ஸ்தானாதிபதிகள் பரிவர்த்தனை யோகமும் பெற்று நீசபங்க யோகம் பெறுகிறார் எற்கெனவே பலமுறை எழுதி உள்ளேன் நீசபங்க யோகம் மிகசிறந்த யோக அமைப்பாகும், லக்னம், சுக போக ஸ்தானபதியான குரு இத்தகைய அமைப்பை பெற்றதால் தான் இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நிறுவனத்தின் தலைமை பொறுப்பை பெற்றார்.

அதுபோக இவரின் லக்ன சாரம் மூலம் நட்சத்திரம் பித்ருக்கள் அதாவது நம் முன்னோர்களின் பாரம்பரியத்திற்கு காரகன் ஆன கேது பகவானின் சாரத்தில் இவர் பிறந்துள்ளதும் மேலும் முன்னோர்களின் 9 ஆம் அதிபதியான சூரியனும் கேது பகவானின் சாரத்தில் இருப்பது போன்ற இந்த காரணங்களால் டாடா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா வின் கொள்ளுப் பேரனான இவருக்கு இந்த உயரிய வாய்ப்புகள் கிடைத்தது. இந்த ஜாதகத்தில் சூரியன் மிக வலுவானவர் இதை பின் பார்ப்போம்.

லக்னம் கேதுவின் சாரம் பெற்று ஒரு குழந்தை பிறந்தால் அவர் குழந்தை பருவம், வளர்இளம் பருவம் ஆகிய காலகட்டகளில் ஏதேனும் துயரத்துற்கு ஆளாவர் இது ஒரு ஜோதிட விதியாகும். இவரின் தந்தை இவருக்கு ஏழு வயதான போதே மரணம் அடைந்தார் அதனால் ரத்தன் டாடாவை அவர்களது பாட்டியார் வளர்த்தார், த த்துபிள்ளை வாழ்க்கை என அதனால் இவரின் குழந்தைப்பருவம் இடர்ப்பாடுகள் நிறைந்ததாக இருந்தது.

சரி நாம் தொழில் ஸ்தானத்திற்கு வருவோம் தொழில் ஸ்தானாதிபதியான புதன் லக்ன கேந்திரம் ஏறியதுடன் நவாம்சத்தில் உச்சமும் ஆகிறார் இப்படிபட்ட 10க்குடைய கர்மாதிபதியான புதன் சூரியனுடன் கூடி அஸ்தங்கமும் ஆகி தன் வலுவை தர்மாதிபதியான சூரியனுக்கு வழங்குகிறார் இது சிறந்த புதாத்தியாய யோகமும், மிகச்சிறந்த தர்மகர்மாதிபதி யோகம் ஆகும் இந்த யோகத்தின் பலன்கள் செய்யும் செயல்கள் சிறந்த நிர்வாகத்திறன், சிறப்பாக திட்டமிடும் ஆற்றல் தரும், தொழிலில் பெயர் புகழ் பெறுவார், தாராளமாக தர்ம காரியங்களைச் செய்வார், உயர் பொறுப்புகள் பதவிகளை பெறுவார், அரசாங்க மற்றும் வர்த்தக தொழிற்சபைகளால் மதிப்பு, மரியாதை, அங்கீகாரம், உலகப் புகழ், மதிப்பு, மரியாதையைபெறும் யோகம் எல்லாம் சிறப்பாக அமையும் என இந்த இரு யோகங்களின் பலன்களை முழுமையாக பெற்ற ஜாதகமாக இந்த ஜாதகம் விளங்குகிறது.

இந்த ஜாதகத்தில் பாக்ய ஸ்தானமான 9 ஆம் அதிபதி சூரியனின் வலுவை சொல்லியே ஆக வேண்டும் இந்த ஜாதகத்தில் சூரியன் புதன், சுக்கிரனை அஸ்தங்க படுத்தி தான் வலிமை அடைகிறார் அத்துடன் சூரியன் 252:54:00 பாகையில் உள்ளார் இதனால் தொழில், மதிப்பு, செயல்பாடு காட்டக் கூடிய தசாம்சம், மற்றும் சஷ்டாம்சம், திரேக்காணம் ஆகிய சக்கரங்களில் ஆட்சி, உச்சம் அடைந்தும் வலுவடைகிறார், பொதுவாக 9ஆம் விட்டுக்குடையவர் லக்ன கேந்திரம் ஏறினால் வலுவடையும் அதுவும் நட்பு வீடு ஆனதால் நன்மையாகும் இப்படி பலமான பாக்யாதிபதி பல பாக்யங்களை பெற்றார்,

தொழில், மதிப்பு, செயல்பாடு காட்டக் கூடிய தசாம்ச சக்கரத்தில் வர்க்கோத்தமம் பெற்ற லக்னத்திற்கு தர்மாதிபதியான சூரியன் உச்சமடைந்து மேலும் தசாம்ச சக்கரத்தில் முதலீட்டாளர்களை காட்டக்கூடிய 8 ஆம் ஸ்தானபதியான சந்திரன் உச்சமடைந்தால் முதலீட்டாளர்கள் நன்மதிப்பையும் பெற்றார் அதனால் பல நிறுவனங்களை தன் சார்ந்த நிறுவனத்துடன் கையகப்படுத்தினார்.

இருந்தாலும் இந்த பலமான சூரியனால் களத்திர ஸ்தானாதிபதி புதன், வாழ்க்கை துணைக்கு காரகத்துவம் பெற்ற சுக்கிரனும் அஸ்தங்க தோஷம் ஆனதால் திருமணமாகாதவர் என்ற நிலை ஏற்பட்டது. மேலும் இந்த ஜாதகத்தில் மற்ற கிரகங்களான செவ்வாய், சுக்கிரன் நவாம்சத்திலும் தொழில் காரகனான் சனி சுய சாரம் பெற்றதுடன் சப்தாம்சம், அஷ்டாம்சம் ஆகிய சக்கரங்களில் ஆட்சி, உச்சம் அடைந்தும் வலுவடைகிறார்.

ரத்தன் டாடா, 1961-ல் அதாவது தனது 24 ஆம் வயதில் டாடா குழுமத்தில் தனது சாதாரண பணியில் தொடங்கினார் அப்போது அவருக்கு சுய சாரம் பெற்ற சனி திசை நடைபெற்றது அதில் படிப்படியாக நிறுவனத்தின் அடிப்படை கட்டமைப்பை உணர்ந்தார், சூரியன் புதனை அஸ்தங்க படுத்தி தான் வலிமை அடையும் புதன் திசையில் நிறுவனத்தில் உயர்ந்த மதிப்பை அடைந்தார், பலமான சூரியன் அமர்ந்த நட்சத்திரமான கேதுவின் திசையில் டாட்டா குழுமத்தின் தலைவர் என்ற உச்ச ஸ்தானத்தை அடைந்தார், சூரியன் சுக்கிரனை அஸ்தங்க படுத்தி தான் வலிமை அடையும் சுக்கிரனின் திசையில் நிறுவனத்தை பல வளர்ச்சிக்கு அதாவது தன் நிர்வாகப் பொறுப்பில் டாடா டீ டெட்லே என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியது, டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியது மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் கோரஸ் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியது இப்படி பல கட்ட வளர்ச்சிக்கு வித்திட்டார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ரத்தன் டாடா (Ratan Tata) ஜாதகம் கணிப்பு - பல்துறை நிர்வாகம், தசாம்ச சக்கரத்தின் சிறப்பு…"

கருத்துரையிடுக

Powered by Blogger