தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி தசாம்சமும், 10ஆம் பாத துவைதாம்சமும் பகுதி 2...

தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி தசாம்சமும், 10ஆம் பாத துவைதாம்சமும் பகுதி 2...

போன பதிவை பகுதி படித்துவிட்டு வரவும் விட்ட இடத்தில் இருந்து தொடங்குகிறேன் தற்காலத்தில் மேலும் ஒருவர் செய்யும் தொழிலின் ஆழமான பலத்தை அறிய தசாம்சத்தையும் இன்னும் ஆழமான விவரங்களை அறிய 10ஆம் பாத துவைதாம்ச சக்கரத்தின் பலமும் முக்கியம், ஏனென்றால் இராசிக்கட்டத்தில் வலுவான பலம் அடையும் ஒரு கிரகம் உதாரணமாக தொழில் ஸ்தானமான 10 ஆம் ஸ்தானாதிபதி நவாம்ச, தசாம்ச கட்டத்திலும் மற்றும் 10ஆம் பாத துவைதாம்ச கட்டத்திலும் வலுவடைய வேண்டும் அப்படி வலுவடைந்தால் தான் தொழில் யோகம் முழுமையாக   பலனடையும்.

சரி 10 ஆம் ஸ்தானம் அதாவது தொழில், கர்ம ஸ்தானம் முதலில் நாம் தொழில், கர்மம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டும் இந்த பிறவி அந்த ஜாதகர் என்ன என்ன செயல்களை செய்ய போகிறார் அதன் மூலம் அவருக்கு கிடைக்கும் மதிப்பு, செல்வாக்கு காட்டும் ஸ்தானம் 10 ஸ்தானம் சரி தொழில் என்றால் வேலை அதாவது பணம் சேர்ப்பதற்கு, தன் அடிப்படை அல்லது விருப்ப தேவைகளை தீர்த்துக்கொள்ள வதற்க்காக செல்வம் சார்ந்து செயல்படுவது மட்டும் தொழில் அல்ல சிலர் இந்த பிறவியில் ஞானத்தை பரப்புவதற்க்காக பிறப்பெடுத்திருப்பார்கள் அவர்களுக்கு ஞானத்தை பரப்புவதில் அடையும் உச்சமே அவருக்கான தொழில் யோகம், அதற்க்காக அவர் செயல்படுவார் அதில் பல நிறைவான காரியங்களை செய்து முடிப்பார் அதுவும் தொழில் யோகமே உதாரணமாக

கீழே காஞ்சி மஹாபெரியவா அவர்களின் தசாம்ச கட்டமும், 10ஆம் பாத துவைதாம்சம் கட்டமும் கொடுத்துள்ளேன் -

தசாம்ச கட்டம்
10ஆம் பாத துவைதாம்சம் கட்டம்

 பலவருடங்கள் மடத்தின் தலைமை பதவியில் இருந்து ஆன்மீக திருபணிகளில் அரிய காரியங்கள் பல எண்ணிலடங்கா காரியங்கள் செய்தவர் அதனால் பெரிய மதிப்பு, செல்வாக்கு பெற்றவர் அன்னாரின் தசாம்ச கட்டத்தில் பாருங்கள் லக்னாதிபதி குரு உச்சம், புதன் நீசபங்கம் யோகம், 10ஆம் பாத துவைதாம்சம் கட்டத்திலும் பாருங்கள் லக்னாதிபதி செவ்வாய் உச்சம், சூரியன் ஆட்சி இவ்வாறாக அமைந்ததால் அவரின் லக்னம் 5,9 திரகோண ஸ்தானங்கள் மற்ற 8 ஸ்தானங்களும் அன்னாரை மெய்ஞானம், ஆன்மீகத்தை நோக்கி அனுப்பியது அதனால் அந்த தசாம்ச கட்டம், 10ஆம் பாத துவைதாம்சம் கட்டம் பலத்தின் காரணமாக ஆன்மீகத்தில் செயற்கரிய காரியங்களை சிறப்பாக அவர் செய்தார் பெரிய அளவில் அதை செய்தார்.

இதுபோலவே ஒருவர் தொழிலில் செயற்கரிய காரியங்களை பெரிய அளவில் செய்வதற்கும் இராசி கட்டம், நவாம்ச கட்டம் வலுவடைந்தது போக தசாம்ச கட்டமும், 10ஆம் பாத துவைதாம்சம் கட்டமும் சிறந்த அளவில் வலுவடைய வேண்டும் அப்போது தான ஒரு ஸ்விட்ஸ் கடை நடத்துபவர் தன் வீதிக்கு ஒன்று என்று இல்லாமல் ஊரில் பல கடைகள் என விரிவுபடுத்தி தன் தொழிலால் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி தானும் உயர்வார் உதாரணமாக….

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "தொழில் யோகம் காட்டும் பூதக்கண்ணாடி தசாம்சமும், 10ஆம் பாத துவைதாம்சமும் பகுதி 2..."

கருத்துரையிடுக

Powered by Blogger