ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 11 - ஹம்ச யோகம்…

ஜோதிட ரா யோகங்கள் பகுதி 11 - ஹம்ச யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


ஹம்ச யோகம்
வியாழன் (குரு) ஜென்ம லக்னத்திற்கு திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி (சொந்த வீட்டில்), உச்சம் பெற்று அமர்ந்தால் ஹம்ச யோகம் ஏற்படும், ஜென்ம லக்னத்திற்கு கேந்திரங்களில் குரு ஆட்சி (சொந்த வீட்டில்), உச்சம் பெற்று அமர்ந்து சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் நட்சத்திர சாரம் பெற்று அமர்ந்தோ அல்லது சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து அமர்ந்தால் பாதி அளவிலான் ஹம்ச யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
பஞ்ச மஹா புருஷ யோகங்களில் இதுவும் ஒன்று, ப்ரஹஸ்பதி (குரு) அக்னியை விட ஒளிமிக்க முகம் உடையவர் என்று வர்ணிப்பர் எனவே இந்த யோகம் அமையப்பெற்றவர் ஒளிமிக்க முகம், மரியாதையான தோற்றம், அழகான உடல், மற்றவர்களுக்கு பிடிக்கும் குணங்கள் நிறைந்தவர், நடத்தையில் நீதியும் ஒழுக்கமும் மனதில் தூயவராகவும் வாழ விரும்புவர் அவ்வாறு வாழ்பவராக இருப்பார், கல்வி கேள்விகளில் வல்லவர், பெரிய அறிவாளி.

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 11 - ஹம்ச யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger