12 ஸ்தானங்களில் திரிகோண ஸ்தானங்களின் சிறப்புகள்…


12 ஸ்தானங்களில் திரிகோண ஸ்தானங்களின் சிறப்புகள்

ஜனன லக்னம் மற்றும் ஜனன லக்னத்திற்கு 5 ஆம் ஸ்தானம், 9 ஆம் ஸ்தானம் ஆகிய மூன்று ஸ்தானங்களும் திரிகோண ஸ்தானங்கள் என்று அழைக்கபடுகின்றன, திரிகோணம் என்று ஏன் அழைக்க வேண்டும் கோணம் என்றால் ஒரே புள்ளியில் இருந்து கிளம்பும் இரண்டு கோடுகள் உருவாக்கும் வடிவம் கோணம் (Angle) எனப்படும் திரிகோணம் என்றால் முன்று புள்ளியில் இருந்து கிளம்பும் கோடுகள் சேருவதால் இதற்கு திரிகோணம் என்று அழைக்கபடுகின்றது அது என்ன முன்று புள்ளிகள் அதுதான் லக்னம் மற்றும் ஜனன லக்னத்திற்கு 5 ஆம் ஸ்தானம், 9 ஆம் ஸ்தானம் ஆகும் உதாரணமாக இந்த படத்தை பாருங்கள்

மேஷம் லக்னமாக வைத்து அதிலிருந்து 5 ஸ்தானங்கள் எண்ணிவர சிம்மம் இராசி வரை ஒரு கோடு அடுத்து சிம்மம் முதல் 5 ஸ்தானங்கள் எண்ணிவர தனுசு இராசி வரை ஒரு கோடு  அடுத்து தனுசு முதல் 5 ஸ்தானங்கள் எண்ணிவர மேஷம் இராசி வரை ஒரு கோடு இவை இணைவதை கண்டால் ஒரு முக்கோணம் போல அமையும் எனவே இது திரிகோணம் என்று அழைக்கபட்டது,

சரி திரிகோணத்திற்கு அவ்வளவு என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம் ஆம் வாழ்க்கையின் போக்கை காண 27 நட்சத்திரங்களில் 9 கிரகங்களின் போக்கை வைத்து கணிக்கிறார்கள் இதில் அஸ்வினி முதலாக ரேவதி வரையிலான நட்சத்திரங்களில் 9 கிரக அதிபதிகள் பகிர்ந்து கொள்கிறார்கள் அதாவது கீழ்காணும் விதமாக -

எண்
பெயர்
அதிபதி
1
அஸ்வினி
கேது
2
பரணி
சுக்கிரன்
3
கார்த்திகை
சூரியன்
4
ரோகிணி
சந்திரன்
5
மிருகஷீரிஷம்
செவ்வாய்
6
திருவாதிரை
ராகு
7
புனர்பூசம்
வியாழன்(குரு)
8
பூசம்
சனி
9
ஆயில்யம்
புதன்
10
மகம்
கேது
11
பூரம்
சுக்கிரன்
12
உத்திரம்
சூரியன்
13
ஹஸ்தம்
சந்திரன்
14
சித்திரை
செவ்வாய்
15
சுவாதி
இராகு
16
விசாகம்
வியாழன்
17
அனுஷம்
சனி
18
கேட்டை
புதன்
19
மூலம்
கேது
20
பூராடம்
சுக்கிரன்
21
உத்திராடம்
சூரியன்
22
திருவோணம்
சந்திரன்
23
அவிட்டம்
செவ்வாய்
24
சதயம்
ராகு
25
பூரட்டாதி
வியாழன்
26
உத்திரட்டாதி
சனி
27
ரேவதி
புதன்

வேதகாலத்தில் மனித வாழ்க்கையை நான்கு விதமாக பிரித்து அதன் அடிப்படையினால் ஆன நால்வகை ஆசிரமங்களும் கடமைகளும் அவை கிரகஸ்த ஆசிரமம் (இல்லறம்), பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்) ஆசிரமம், வனப் பிரஸ்த ஆசிரமம் (காடுறைந்து வாழும் முறை), சந்நியாச ஆசிரமமும் (துறவறம்) என வகுத்துள்ளனர். இதை இந்த காலத்திற்கு ஏற்ப சொல்வதனால்

பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்) - பிறந்திலிருந்து பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பு, முதல்கட்ட வருமானம் என இந்த பருவங்களில் வருவதை காட்டும்.

கிரகஸ்த ஆசிரமம் (இல்லறம்) - முதல்கட்ட வருமானத்தின் மூலமாக திருமண வாய்ப்பு, திருமணம், மனைவி, குழந்தைகள், குடும்ப கடமைகளை நிறைவேற்றுதல், தந்தை தாயை அரவணைத்து செல்லுதல், தமது குழந்தைகளுக்கு வேண்டிய கல்வி, வழிகாட்டல் போன்ற தேவைகளை நிறைவேற்றுதல், தொழிலை வளர்ச்சி பாதையில் நடத்துதல், வருமானத்தை சேமித்து பயன்படுத்தல் என இந்த பருவங்களில் வருவதை காட்டும்.

வனப் பிரஸ்த ஆசிரமம் - தர்மம் தவறாமல் தொழில் செய்து பின் மெல்ல மெல்ல இல்லற வாழ்க்கையின் கடமைகளில் இருந்து விலகி, கோயில் ஆன்மீகம் தியானம் இறைபக்தியுடன் தவ வாழ்க்கை வாழும் என இந்த பருவங்களில் வருவதை காட்டும்.

சந்நியாச ஆசிரமம் (துறவறம்) - இதற்கு முன் வாழ்ந்த வாழ்வின் நிலையாமையை உணர்ந்து முன் வாழ்ந்த போது இருந்த தர்ம கர்ம கடமைகளை முழுவதுமாக துறந்து இறைவனை உணரும் நிலையை பக்குவத்தை பெறும் இந்த பருவம் காட்டும்.
 
இதிலிருந்து ஒவ்வொரு பருவ வாழ்க்கைகும் மூல ஆதாரமாக இருக்கும் 1ஆவது, 5 ஆவது, 9ஆவது ஸ்தானங்களின் அதாவது திரிகோண ஸ்தானங்களின் தனிச்சிறப்பை உணரலாம் இதை இன்னும் விரிவாக எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளன பொதுவாக திரிகோணத்தின் சிறப்பை உணர்ந்தால் போதும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "12 ஸ்தானங்களில் திரிகோண ஸ்தானங்களின் சிறப்புகள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger