ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 12 - மாளவியா யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 12 - மாளவியா யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


மாளவியா யோகம்
சுக்கிரன் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் ஆட்சி (சொந்த வீட்டில்), உச்சம் பெற்று அமர்ந்தால் மாளவியா யோகம் ஏற்படும், ஜென்ம லக்னத்திற்கு திரிகோண கேந்திரங்களில் ஆட்சி பெறும் சுக்கிரன் இராகு கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து அமர்ந்தால் பாதி அளவிலான் மாளவியா யோகம் தான் ஏற்படும்.

இதன் பலன்கள் -
பஞ்ச மஹா புருஷ யோகங்களில் இதுவும் ஒன்று, சுக்கராச்சாரியார் அசுர குலகுரு என வர்ணிக்க படும் மேலும் சுக்ரனிடம் எல்லா செல்வங்களும் உண்டு என்றும் குபேரனே இவரிடம் கால் பங்கு கடன் வாங்கி வாழ்பவன் என்று ஜோதிட கதைகள் சிறப்பிக்கும் எனவே இந்த யோகம் அமையப்பெற்றவர் கவர்ந்திழுக்கும் முகம், நன்கு வளர்ந்த உடலமைப்பு,  வலுவான எண்ணங்கள் மற்றும் பாசவுணர்வு உள்ளவர்கள், வாழ்க்கையை சுகமாக ஜீவிக்க தேவையான செல்வங்களை பெற்றவர்கள்,  குழந்தைகள் மற்றும் மனைவியால் மகிழ்ச்சி இருக்கும், தனித்துவமான திறமைகள் மற்றும் கல்வி ஞானம், கலைகள் கைவர பெற்றவர்கள்.

மாளவியா யோகம் ஒரு வகை உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 12 - மாளவியா யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger