ஜாதகத்தில் குரு ஐந்தில் (5ல்) இருந்தால்...


ஜாதகத்தில் குரு லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -

குரு ஐந்தில் சாதகமான நிலையில் இருந்தால் : -

அறிவாற்றல் நிறைந்தவர், தர்க்கம் மற்றும் சட்ட சார்ந்த கல்விகளில் நிபுனர், மிகவும் புத்திசாலித்தனமான, சிறந்த ஆசான் அல்லது ஆலோசகர், மந்திரம் சாஸ்திரம் நிபுனத்துவம் பெற்றவர், நல்ல நண்பர்கள் மற்றும் வாகனங்கள் மற்றும் நற்பண்புடைய நடத்தை, பயபக்தியுடையவர், நண்பர்களுடன் சந்தோஷமாக பழகும் தன்மை, பொழுதுபோக்குகாக விளையாட்டை விரும்புவீர்கள் அதிலும் முக்கியமாக உள்ளரங்க விளையாட்டுகள் (indoor games) விரும்புவீர்கள், உயர்கல்வி யோகம் உடையவர், கலை திறமை உடையவர், கவிதை இலக்கிய ஆர்வமும் உடையவர், இறையருள் நிரம்ப பெற்றவர், இராகுவுடன் சேர்ந்து குரு பலப்பட்டால் நிதிசார்ந்த வணிகங்களில் நன்மைகள் ஏற்படும்.

குரு ஐந்தில் பாதகமான நிலையில் இருந்தால் : -

தேவைக்கு கூட யோசித்து யோசித்து செலவு செய்க்கூடியவர், சில நேரங்களில் சூதாட்ட இழப்புகள் அல்லது ஏமாற்றபடுதல், தாமதமான குழந்தை பிறப்பு, பிள்ளைகளுடன் உறவு முறை மிக சராசரியாக இருத்தல் அல்லது பாதிப்பு, தொழில் குடும்ப வாழ்க்கை காதல் போன்றவற்றில் அஜாக்கிரதையான போக்கு உள்ளவராக இருத்தல், மந்தமான யோசனைகள் உள்ளவர், யாரிடமும் கலந்து பழகாத தன்மை உடையவர், வெளிவேஷம் போடக்கூடியவராக இருத்தல், விரிந்த பார்வை யில்லாத தன்மை, சம்பிரதாயங்கள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்தல், தன்னையோ அல்லது தனக்கு வேண்டியவர்களையோ மட்டும் உயர்த்தி பேசுதல் மற்றும் நடத்துதல் போன்ற குணங்கள் பெற்றவராக இருத்தல்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "ஜாதகத்தில் குரு ஐந்தில் (5ல்) இருந்தால்..."

கருத்துரையிடுக

Powered by Blogger