விநாயகரும் கேது பகவானும்…

விநாயகரும் கேது பகவானும்

கேது பகவான் ஜோதிடத்தில் முக்கிய கிரகமும் சூரிய சந்திரையும் மறைக்கும் அளவுக்கு பலம் வாய்ந்த நிழல் கிரகம் அதாவது புராணங்களில் கிரஹணம் உண்டாவது ராகு கேதுவால் என்பது ஐதீகம். அமுதம் கொடுக்கும் போது, சைம்ஹிகேயன் என்ற அசுரன் தேவர் வடிவில் வந்து, அமிர்தம் உட்கொள்ள, அதை சூர்ய சந்திரர்கள் பார்த்து விஷ்ணுவிடம் கூற அவர் தன் சக்ராயுதத்தால், அவனை வெட்ட, அத்துண்டங்களே ராகு கேது ஆயினர் எனபது புராண கதை.

அதாவது மற்ற அசுரர்களைப் போல் சைம்ஹிகேயன் மோகினியிடம் (மோகினியாக வந்த விஷ்ணு)மயங்கிவிடாமல் இருக்கும் ஞானம் பெற்றவானாக அதே நேரத்தில் அமுதம் அருந்தும் மோகம் கொண்டவனாக திருட்டுத்தனமாக சென்று அமுதம் உண்டான் இதில் இருந்து இராகு கேதுக்கள் ஞானம், போகம், மோகம், கள்ளத்தனம் உடையவர்கள் என்பது தெளிவாகிறது இதில் ஞானம், போகம் வடிவத்தின் துண்டாக வந்தவரே கேது பகவான் எனவே நாடி ஜோதிட சித்தர்கள் கேதுவை ஞானி என்ற அழைப்பர்,

இவரின் காரகத்துவம் தாய் வழிச் சொந்தம், முற்பிறவி கர்மா, வேதங்கள் சாஸ்திரங்கள், மெய்ஞானம், அஷ்டமா சித்திகள், குண்டலினி சக்தி, மருத்துவம், மூலிகைகள், தெய்வீக செயல், ஞான திருஷ்டி, ஆழமான மதம் தொடர்பான உட்புற சடங்குகளுக்கு காரகன், ஞான காரகன், மாயா காரகன் போன்ற பல காரகத்துவங்களை பெற்றவராகும், அஸ்வினி நட்சத்திரம் மூலமாக முற்பிறவி கர்மவினைகள் தந்து பின் மகம் நட்சத்திரம் மூலமாக அந்த வினைகளின் புண்ணிய பாவ பலன்களை முழுவதுமாக அனுபவிக்க வைத்து மூலம் நட்சத்திரம் மூலமாக ஞானம், அறிவாற்றல், இறை அருளை நோக்கி மனிதர்களை செலுத்தும் செயல்கள் ஆகியவற்றை தருவார் என்பது நமது பழமையான ஐதீகம், முற்பிறவி கர்மாவின் காரகன் என்பதால் தான் அஸ்வினி என தொடங்கும் 27 நட்சத்திரங்களில் அஸ்வினியின் அதிபதி கிரகமாக ஆனார்,

எனவே முற்பிறவியின் மூலம் உருவான வினைகள் தீய வினைகளாக இருந்தால் இவர் தரும் வேதனைகள் அதிகமாக இருக்கும் குறிப்பாக கேது ஆத்மகாரகனான சூரியனுக்கு பாதிப்புகளை விட மனோகாரகன் ஆன சந்திரனுக்கு தரும் பாதிப்புகளே அதிகம் எனவே மனதை பிழிந்து எடுத்துவிடுவார்,  மேலும் ஜாதகத்தில் சந்திரனோடு கேது சேர்ந்தவர்களும், கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்திரத்தில் பிறந்தவர்கள், நவாம்சத்தில் சந்திரனோடு கேது சேர்ந்தவர்களும், லக்னம் கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்திரத்தில் இருந்தாலும், கேதுவினோடு அதிகமான கிரகங்கள் சேர்ந்து பிறந்தவர்களும், கேதுவின் திசை நடப்பவர்களும் எப்போதும் வணங்க தக்கவரும் பரிகாரத்திற்காக வழிபடதக்கவரும் ஆன

கேது பகவானின் ஆதிதேவதையான மூலாதார மூர்த்தியான ஸ்ரீ மஹாகணபதி ஆகும் எனவே இவர்கள் விநாயகரை வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும், விநாயகரை வணங்கிவிட்டு சிறிய பெரிய காரியங்களை தொடங்க வேண்டும்.

வினைகள் நசிப்பதால் தான விக்னேஷ்வரன் விநாயகன் என்றே பெயர் பெற்றவர் எனவே விநாயகர் சதுர்த்தி அன்று அவரை வழிபட்டு வினைகளை நசிக்கும் ஞானத்தை அனைவரும் பெற நல்வாழ்த்துக்கள்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "விநாயகரும் கேது பகவானும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger