அஷ்டம சனி என்ன செய்யும் எதனால்? - இராசிக்கு எட்டில் சனி…

அஷ்டம சனி என்ன செய்யும் எதனால்? - இராசிக்கு எட்டில் சனி

சனி பகவானின் காரகத்துவத்தில் முக்கியமானது ஒவ்வொருவரும் போன பிறவிகளிலும் இந்த பிறவிலும் செய்த நல்ல மற்றும் தீய கர்மாவின் விளைவுகளை முடிந்த அளவுக்கு இந்த பிறவியில் அனுபவிக்க செய்வது தான் சனி பகவானின் முக்கியமான காரகத்துவம் எனவே தான் இவரை கர்ம காரகன் என்று அழைப்பார் இவரின் அண்ணணை தர்ம காரகன் என்று அழைப்பர் ஆம் அவர் தான் எமதர்மன் சனி பகவான் விட்டாலும் இவர் விடமாட்டார், நல்ல செயல்களை தொடர்ந்து செய்து வருபவர்கள் பின் வரும் பிறவிகளில் சனியால் தூக்கிவிட பட்டு வாழ்வில் மிக உயர்ந்த இடத்தை அடைவார், சரி விஷயத்திற்கு வருவோம்.

இதனை பொதுவாகவே கோள்முனி கூறி உள்ளார் அதாவது அதீத மழைக்காலத்தில் பொதுவாக பல உயிரினங்களும் பாதிக்கபடும் ஆனால் அதில் சில உயிர் அதிர்ஷடமாக தப்பித்து விடும் அல்லது அந்த உயிரினம் இருக்கும் பகுதிக்கு மட்டும் குறைந்த மழையளவு ஏற்பட்டிருக்கும் அது போல அஷ்டமத்து சனி ஒரளவுக்கு பெரிய பாதிப்புகள் வரும் அதில் ஜாதக இராசி சக்கரம் பலமாக பெற்றவர்களும் யோகமான திசாபுத்திகள் நடப்பில் உள்ளவர்களும், சனியின் இராசியான கும்பம் இராசிக்காரர்களுக்கும் குறைவான பாதிப்போ அல்லது பாதிப்பு இல்லாத நிலையோ, பாதிப்பு ஏற்பட்டு சுமூகமாக தீர்வாகும் எனவே அஷ்டமத்து சனியை கண்டு எல்லாரும் கலங்க வேண்டாம். சனி பகவானின் காரகத்துவம் பெற்ற ஏழைகள், துறவிகள், ஊனமானவர்கள், அனாதை நிலையில் உள்ளவர்களுக்கு சனி பகவானை வேண்டி உங்களால் முயன்ற அளவுக்கு அன்னதானம், மற்ற உதவிகள் செய்தால் கஷ்ட நஷ்டங்கள் குறைவுபடும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "அஷ்டம சனி என்ன செய்யும் எதனால்? - இராசிக்கு எட்டில் சனி…"

கருத்துரையிடுக

Powered by Blogger