நவகோள்களும் அது பெறும் உடலின் அம்சங்களும்…


நவகோள்களும் அது பெறும் உடலின் அம்சங்களும்

சூரியன் - ஆண்மை தன்மையை கொடுப்பவர். உடலின் சூடான தன்மைக்கு காரகன், உலரும் தன்மை மற்றும் ஆக்கபூர்வமான உயிர் சக்தி, இதயம், உயிர் சுவாசம் (பிராணன்), இரத்தம் மற்றும் மூளைக் கட்டுப்படுத்துகிறது. ஆண்ணுக்கு வலது கண் ஒரு பெண்ணுக்கு இடது கண்.

சந்திரன் - உடலின் இயற்கையான செயல்பாடுகளை ஆளுகிறவர் மற்றும் பெண்மை தன்மை கொடுப்பவர், உடலின் குளிர்ச்சி தன்மை மற்றும் ஈரமான செயல்பாடுகள், மார்பு, வயிறு, பாய்ம மற்றும் நிணநீர் அமைப்புகள், ஆண்ணுக்கு இடது கண் ஒரு பெண்ணுக்கு வலது கண்.

புதன் - மூளை மற்றும் மூளை நரம்புகள், தகவல் கடத்தும் உறுப்புகள், நினைவாற்றல் ஆகியவற்றை ஆளுகிறவர், நரம்பு மண்டலம் இந்த கிரகத்தில் ஆளுகைக்கு கீழ் உள்ளதால் நரம்புகள் செல்லக்கூடிய நுரையீரல், நாக்கு, பேச்சு, கை, வாய் என பல உறுப்புகளின் செயல்பாட்டிலும் இதன் பங்குகள் உண்டு.

சுக்கிரன் -  உடலின் வெதுவெதுப்பான மற்றும் இயல்பான ஈரத்தன்மைக்கு காரகன், தொண்டை, கன்னம், நிறம், தொப்புள் மற்றும் பிறப்பு உறுப்புகள் மற்றும் அதன் உள் பாகங்கள் நிர்வகிக்கிறது, தோல், முடி, நகங்கள், சுரபிகள்.

செவ்வாய் - நெற்றி, பித்த நீர், பித்தப்பை, தசை அமைப்பு, வெளிப்புற பிறப்பு உறுப்புகள் நிர்வகிக்கிறது, மண்ணீரல், இரத்தம் மற்றும் அசுத்தமான ரத்தம், செரிமான ஆன உணவு சத்துகள், மல துவாரம், மலக்குடல்.

குரு - லேசான மிதமான வெப்பநிலைக்கு காரகன், கல்லீரல், தமனி மண்டலம், உட்தசை, காது மற்றும் சத்துக்களை உறிஞ்சும் அமைப்பு, தொடைப் பகுதி, பிட்டம், இடுப்பு ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

சனி - காற்று போக்கு வரவு, அடைப்பானகள், மற்றும் எலும்புகள், மூட்டுகள், பெருங்குடல், பற்கள், முழங்கால்கள், கபம், எலும்பு மஜ்ஜை, கால்கள், பாதம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

இராகு கேது - கழிவுகளை அகற்றும் உறுப்புகள், உடலின் கழிவுகள், இறந்த செல்கள், உடலில் ஜீவிக்கும் பிற உயிர்கள், மயக்கம், வலி மறத்தல், மன நிலை மாற்றம் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "நவகோள்களும் அது பெறும் உடலின் அம்சங்களும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger