தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்....

தனுசு லக்னம் பற்றிய அடிப்படை :-
தனுசு உபய லக்னம்
தனுசு ஒற்றை லக்னம்
தனுசு நெருப்பு லக்னம்
தனுசு ஆண் லக்னம்
தனுசு தர்மம் லக்னம்
தனுசு பித்த லக்னம்
தனுசு கிழக்கு லக்னம்
தனுசு க்ஷத்ரிய லக்னம்

65% மேலாக நன்மையான பலன் தரும் கிரகங்கள் சுபர்
65% மேலாக தீமையான பலன் தரும் கிரகங்கள் பாபர்
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னம் என்ற தலைவிதியை தீர்மானிக்கும் லக்னாதிபதி குரு பகவான் ஆவார் அவரே நான்காம் வீடு   -  சுக, வண்டி, வீடு  ஸ்தானம், தாய் ஸ்தானத்திற்கு அதிபதி ஆவார், குருவே 1,4 ஆகிய இரண்டு கேந்திரங்களுக்கும் அதிபதியாவதால் கேந்திரங்களில் 1,4,7,10 அமரும் போது கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு அதை இந்த வலைபதிவிலேயே எழுதி உள்ளேன், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டால் தீமையான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால் மட்டும் 70% நன்மையான பலன்களும் 30% தீமையான பலன்களையும் தரவல்லார், மற்றபடி 55% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 45%  தீமையான பலன்களும் தரவல்லார். குரு பகவான் பாவர் அல்ல சுபர் தான் ஆனால் அதிகமாக இனிப்பை தந்து சக்கரை வியாதிக்கு இழுத்து செல்லுவதை போல தன்மை படைத்தவர்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டின் அதிபதியும், மூன்றாம் வீடு  -  தைரிய ஸ்தானம், சகோதர ஸ்தானத்திற்கு அதிபதியும் சனி பகவான் ஆவார். சனியின் நட்பை குரு விரும்ப மாட்டார் ஆனால் கிடைக்கும் நன்மைகளை பயன்படுத்தி கொள்ளவார், குடும்ப வாழ்க்கை, இளம் பருவம் பேச்சை தீர்மானிக்கும் முக்கிய மானவராக சனி உள்ளதால் 65% நன்மையான பலன்களையும் 35%  தீமையான பலன்களும் தரவல்லார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண ஸ்தானம் ஐந்தாம் வீடு  -  பூர்வ புண்ணிய  ஸ்தானம், புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியும், மறைவு ஸ்தானமாம் என அழைக்கபடும் பன்னிரண்டாம் வீடு  -  அயன சயன, நட்ட ஸ்தானம், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதியும் செவ்வாய் ஆகும், லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் குழந்தை பிறப்புக்கான முக்கிய காரகாதிபதி ஆகிறார் எனவே 65% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 35%  தீமையான பலன்களும் தரவல்லார். 7 வருட செவ்வாய் திசையில் முதலில் 65% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 35%  தீமையான பலன்களும் தரவல்லார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானமாம் என அழைக்கபடும் ஆறாம் வீடு  -  ரண ருண ரோக ஸ்தானம், சேவா ஸ்தானத்திற்கு அதிபதியும், பதினோராம் வீடு  -  லாப ஸ்தானம், சமூக ஸ்தானத்திற்கு அதிபதியும் சுக்கிர பகவான் ஆகும், உபய தனுசு லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும் எனவே மாராகாதிபதி தன்மையையும் அடைகிறார் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் சுக்கிரனே லக்னாதிபதிக்கு பகை கிரகம் ஆகும் நோய்களை தீர்மானிப்பவர் அதனால் 35% நன்மையான பலன்களையும் பிற்பாதியில் 65%  தீமையான பலன்களும் தரவல்லார். ஆனால் வாழ்வில் ஏற்படும் லாபத்தை தீர்மானிப்பவரும் இவரே.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கேந்திர ஸ்தானங்கள் என அழைக்கபடும் ஏழாம் வீடு - களத்திர  ஸ்தானம், வணிக ஸ்தானத்திற்கும், பத்தாவது வீடு -   கர்ம, காரிய, ராஜ்ய ஸ்தானத்திற்கும் அதிபதி புதன் பகவான் ஆவார் இரண்டு கேந்திரங்களுக்கும் அதிபதியாவதால் கேந்திரங்களில் 1,4,7,10 அமரும் போது கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு அதை இந்த வலைபதிவிலேயே எழுதி உள்ளேன், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டால் தீமையான பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, மேலும் தனுசு லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும் மாரக ஸ்தான ஆதிபத்தியமும் பெறுகிறார் அதாவது உடலை பெரிய அளவில் பாதிக்க கூடிய நோய்கள், கண்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தக் கூடியவரும் புதனே அது போக மிதுன லக்னத்திற்கு 7ம் வீடும் பாதக ஸ்தானமாக அமைகிறது அதாவது பாதகங்களை ஏற்படுத்த கூடியவரும் புதனே எனவே ஜாதகரின் வாழவில் 35% நன்மையான பலன்களும் 65% தீமையான பலன்களையும் தரவல்லார், கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டால் இன்னும் அதிக தீமையான பலன்களையும் தரவல்லார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மறைவு ஸ்தானமாம் என அழைக்கபடும் ஆயுள்  ஸ்தானம், மர்ம ஸ்தானம், துரதிர்ஷ்ட ஸ்தானமான 8 ஆம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் ஆவார் ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் சந்திரனே துரதிர்ஷ்ட காரகன் ஆகிறார் வளர்பிறையில் பிறந்த தனுசு லக்னத்தாருக்கு  35% நன்மையான பலன்களும் 65% தீமையான பலன்களையும் தரவல்லார், தேய்பிறை சந்திரனானால் 25% நன்மையான பலன்களும் 75% தீமையான பலன்களையும் தரவல்லார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திரிகோண ஸ்தானம் ஒன்பதாம் வீடு  -  தர்ம ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தந்தை ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் ஆவார் ஒற்றை ஆதிபத்திய தன்மை பெற்ற நிலையில் சூரியனே தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கும் முக்கிய காரகன், லக்னாதிபதிக்கு நட்பு கிரகம் எனவே தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் யோகர் ஆகும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு - லக்ன சுபர், பாவர், யோகர்...."

கருத்துரையிடுக

Powered by Blogger