வீடுகட்டும் பணி தடைகள் தரும் அமைப்பும் அதை நீக்கும் கோயில்களும்…
வீடுகட்டும் பணி தடைகள் தரும் அமைப்பும் அதை நீக்கும் கோயில்களும்

சொந்த வீடுகள் கட்டும் பணி துவங்கி தடை தாமத படுவதற்க்கான அமைப்புகள் ஜாதகத்தில் 4 ஆம் ஸ்தானத்தில் இராகு, கேது, சனி, சுக்கிரன் குரு பார்வையின்றி இருந்தாலும்.

ஜென்ம லக்னத்திற்கு 6,8,12 ஆம் ஸ்தானாபதிகள் 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தாலும், 4 ஆம் ஸ்தானாபதியுடன் சேர்ந்தாலும் சொந்த நிலம் வாங்கும் போது மற்றும் வீடுகட்டும் போது தடை தாமத படுவதற்க்கான அமைப்புகள் ஏற்படும்.

ஜென்ம லக்னத்திற்கு 3,9,11 ஆம் ஸ்தானாபதிகள் 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தாலும், 4 ஆம் ஸ்தானாபதியுடன் சேர்ந்தாலும் சொந்த நிலம் வாங்கும் போது மற்றும் வீடுகட்டும் போது சற்று குறைவான தடை தாமத படுவதற்க்கான அமைப்புகள் ஏற்படும்.

ஜென்ம லக்னத்திற்கு 3,5 ஆம் ஸ்தானாபதிகள் 4 ஆம் ஸ்தானத்திற்கு ஒத்துழைப்பாக இல்லாவிட்டாலும் சொந்த நிலம் வாங்கும் போது மற்றும் வீடுகட்டும் போது சற்று குறைவான தடை தாமத படுவதற்க்கான அமைப்புகள் ஏற்படும்.

ஜென்ம லக்னத்திற்கு 4 ஆம் ஸ்தானாபதி பகை இராசியில் அமர்ந்தாலும், பகை கிரக சேர்க்கை ஏற்பட்டாலும், பகை நட்சத்திரத்தில் அமர்ந்தாலும் சொந்த நிலம் வாங்கும் போது மற்றும் வீடுகட்டும் போது தடை தாமத படுவதற்க்கான அமைப்புகள் ஏற்படும்.

சொந்த நிலம் வாங்கும் போது மற்றும் வீடுகட்டும் போது கோச்சார ரீதியாக இராசி, லக்னத்திற்கு 4 ஆம் ஸ்தானத்தில் இராகு, கேது, சனி வரும் போது குறைவான தடை தாமத படுவதற்க்கான அமைப்புகள் ஏற்படும்.

ஜென்ம லக்னத்திற்கு 4 ஆம் ஸ்தானத்தை பாதிக்க கூடிய கிரகங்களின் திசா புத்தி வரும் காலங்களில் இந்த தடை தாமத படுவதற்க்கான அமைப்புகள் ஏற்படும்.

தனி சொந்த வீடுகள் அல்லது விற்பதற்க்காக வீடுகள் கட்டும் பணி துவங்கி தடைபட்டு நிற்பது அல்லது மிகுந்த தாமதம் ஆகிறது என்றால் அவர்கள் வழிபட வேண்டிய தலங்கள் -


அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் : -
மூலவர்        : பூமிநாதர்
அம்மன் : அறம்வளர்த்த நாயகி
ஊர்        : மண்ணச்சநல்லூர்
மாவட்டம்        : திருச்சி
சிறப்பு : இங்கு வாஸ்து நாளன்று வாஸ்து பரிகார பூஜை செய்வது சிறப்பு

அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் : -
மூலவர் : பூமிநாதர்
அம்மன் : ஜெகதாம்பிகை
ஊர் :        திருச்சி

அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் : -
மூலவர் : பூமிநாதர்
அம்மன் : ஆரணவல்லி
ஊர் :        செவலூர்
மாவட்டம்        : புதுக்கோட்டை

அருள்மிகு ஆதிவராகர் திருக்கோயில் : -
மூலவர் : ஆதிவராகப்பெருமாள்
தாயார் : பூமாதேவி
ஊர் :        கல்லிடைக்குறிச்சி
மாவட்டம் : திருநெல்வேலி

அருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் :-
ஊர்        :        பன்னியூர்
மாவட்டம்        :        பாலக்காடு
மாநிலம்        :        கேரளா
சிறப்பு : வீடு கட்டவும் நிலத்திலுள்ள மண்ணை எடுத்து அபீஷ்ட சித்தி பூஜை நடத்துகின்றனர்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "வீடுகட்டும் பணி தடைகள் தரும் அமைப்பும் அதை நீக்கும் கோயில்களும்… "

கருத்துரையிடுக

Powered by Blogger