ஜாதகத்தில் கேது ஐந்தில் (5ல்) இருந்தால்...

ஜாதகத்தில் கேது லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -


கேது ஐந்தில் சாதகமான நிலையில் இருந்தால் : -

விசித்திரமான அனுபவங்கள் பெற்றவர், ஆன்மீகத் தொடர்பு மற்றும் கற்றல், புனித பயணம் முக்கியமாக நிறைய கோயில்கள் மகான்களின் ஸ்தலங்களுக்கு பயணித்தல், அருள் கிருபை நிறைந்தவர், காதல் விஷயத்திலும் மற்றும் குழந்தைகளுடன் தெய்வீக அன்பு உணர்வுடன் பழகுதல், உணர்வுகளில் செயல்களில் மன முதிர்வுடன் நடந்து கொள்வார், சாஸ்திரங்களை பழமையான பொருட்களை விரும்பக்கூடியவர்.

கேது  ஐந்தில் பாதகமான நிலையில் இருந்தால் : -


குழந்தை பிறத்தல் கஷ்டமானதாக தோஷமானதாக காட்டுகிறது, அதிக பாதகமான நிலையில் இருந்தால் குழந்தையை இழக்கும் நிலைகூட வரலாம், வயிற்றில் பிரச்சனை, பதவி நிலையில் வீழ்ச்சி, காதல் & பாலியல் உணர்வுகளில் ஆர்வமின்மை அல்லது தீவிர ஆர்வம் அதனால் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு, சூதாட்டம், ஊகங்கள் களியாட்டம் ஆகியவற்றில் ஆர்வம், கீழ்தரமான நடத்தை உள்ளவனாக இருத்தல், மறைவான சாஸ்திரங்கங்களில் ஆர்வம், நல்ல வேடிக்கை மற்றும் விளையாட்டுகள் ஆர்வம் இல்லை.

0 Response to "ஜாதகத்தில் கேது ஐந்தில் (5ல்) இருந்தால்... "

கருத்துரையிடுக

Powered by Blogger