பில் கேட்ஸ் (Bill Gates) ஜாதகம் கணிப்பு - உலகின் முதல் பணக்காரர் ஆனவர், கணினி மென்பொருள்...

பில் கேட்ஸ் (Bill Gates) ஜாதகம் கணிப்பு - உலகின் முதல் பணக்காரர் இருந்தவர், கணினி மென்பொருள்...

உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்றவர், இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்ததுள்ளது, இந்த நூற்றாண்டின் கணினி மென்பொருள் துறையின் பெரிய சாதனை தொழில் முனைவோன் (entrepreneur) இவரின் ஜாதகத்தின் மூலமாக கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் சிறந்த தொழில் முனைவோன் (software and Hardware entrepreneur) ஆக ஏற்படும் யோகங்கள், சிறந்த சாமர்த்தியசாலி, அதிகமான தர்மங்கள் செய்யும் குணங்கள், பெரும் செல்வந்தர் அமைப்பு ஆகியவற்றை பார்ப்போம்.

பிரபலங்கள் ஜாதகம்
பில் கேட்ஸ் (Bill Gates) ஜாதகம்
முதலில் மென்பொருளில் (Software) திறன் மிக்கவராக இருக்க அடிப்படை கணித பாடங்களில் சிறந்தவராக இருக்க வேண்டும் கணித பாடங்களில் வல்லவராக புதனின் துணை முக்கியம் அதுவும் 3 ஆம் ஸ்தானத்தில் உச்சம் பெற்ற புதனாக செவ்வாயின் சாரம் பெற்று செவ்வாயுடனே சேர்க்கையும் பெறுகிறார் இது புத்திசாதுர்ய யோகம் தரும் சிறந்த இணைப்பாகும், இவரது கணித திறமையின் காரணமாக இவரது பள்ளியில் இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதனால் அதிக நேரம் பள்ளியின் கணினி அறையின் பயிற்சியில் சிறுவயதிலே ஈடுபட முடிந்தது.

மென்பொருள் துறையில் வெற்றி அடைந்தவர்களின் ஜாதகங்களில் சந்திரனும், புதனும் முக்கிய பங்கு வகிப்பார் அதுவும் Computer hardware entrepreneurship தரக்கூடியவரும், மின்சாதன ஆடம்பர வசதிபொருள்களின் காரகத்துவம் பெற்ற சுக்கிரனும் முக்கியம் என்று நாம் ஏற்கனவே நாராயண மூர்த்தி ஜாதக கணிப்பின் போது பார்த்தோம்.

பில் கேட்ஸின் ஜாதகத்தில் சந்திரனின் லக்னமான கடகத்தில் பிறந்து 9ல் சந்திரன் உச்சம் பெற்ற சனியின் சாரம் பெற்று அமர்ந்து அந்த வளர்பிறை சந்திரனை உச்சம் பெற்ற புதன் 7 ஆம் பார்வை ஒருவருக்கொருவர் பார்வை செய்து வலுவான பார்வை பலம் பெறுகிறது இதுவும் இராசி கட்டத்தில் வலுவடையும் சனியும், சுக்கிரனும் செவ்வாயும் நவாம்சத்தில் புதனி வீட்டில் அமர்ந்தததும் அந்த லக்னத்திலேயே புதனும் கேதுவும் அமர்ந்தததும் மேலும் சதுர்த்தாம்சம், அஷ்டாம்சம், துவாதம்சம் ஆகிய அம்ச கட்டங்களில் புதன் ஆட்சி, உச்சமும் அடைந்து வலுவடைகிறார் எனவே மென்பொருள் துறையில் வெற்றி அடைந்து சாதனையாளர் ஆனார்.

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனியும், சுக்கிரனும் 4ல் உச்சம் மற்றும் ஆட்சி ஆனால் அவர் சிறந்த தொழில் முனைவோராக இருப்பார், பல இடங்களுக்கும் தேடி போய் தன் தொழிலை வளர்ப்பார், ஏற்றுமதி தொழில் சிறப்பார், சரியான சமயத்தில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் பெற்றவர், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தெரிந்தவராக இருப்பார் இது எனது கருத்தல்ல இதை கோள்முனி பாடி உள்ளார் அந்த பாடல் கீழே கொடுத்துள்ளேன் -

நண்டு காணும் இராசி தன்னில் சனித்தவருக்கு ஏழும்
     அதனின் அடுத்ததுக்கும் காரகனாம் நீலவேந்தனும்
பண்டு அந்த குபேரன் செல்வத்தை தவத்தால் கொண்ட
     நாலு பதினொன்னுக்கு காரகனாம் விடிவெள்ளியும்
கண்டு அந்த தராசு இராசி சேர தூரதூர தேசங்கள் போய்
  ஏவல் செய்வான் கடும்பணியோன் காரியத்தில் கெட்டி
நீண்ட வீடும் நெடும் செல்வமும் சேர்பானப்பா இதில்
   மற்ற ஏழையும் கண்டு உரை கோள்முனி வாக்கை
                                                                                              - கோள்முனி ஞானமாயிரம்

இப்படி சிறப்பான அமைப்பின் காரணமாக மென்பொருள் சாதனங்களின் ஏற்றுமதி தொழிலில் உயர்ந்த கொடிகட்டி பறக்கிறார் மென்பொருள் சாதனங்களின் விற்பனையால் பில்லியனராக உயர்ந்தார்.

சிறந்த சாமர்த்தியசாலிக்கு சந்திரனும், புதனும் நல்லரீதியாக பலமுடன் ஒருவருக்கொருவர் தொடர்பு ஏற்பட்டாலே சாமர்த்தியசாலி அவர் இருப்பார் அதுவும் காரிய ஸ்தானமான 3ல் இந்த பலமான தொடர்பு பெற்றதால் சிறந்த சாமர்த்தியசாலி இவர் திகழ்கிறார்.

சரி முக்கிய விஷயத்திற்கு வருவோம் ஆம் கோடீஸ்வர யோகம் இதற்கு பலமான தொடர்புகள் 2ஆம், 5, ஆம், 8ஆம், 11 ஆம் ஸ்தானங்களுக்கு இடையே ஒன்றுக்கொன்று பலமான சுப தொடர்பாக இருக்க வேண்டும்,  

  • 2 ஆம் அதிபதி சூரியன் 4ல் நீசபங்க ராஜயோகம்.
  • 5 ஆம் அதிபதி செவ்வாய் 3ல் லக்னாதிபதி சாரம் வாங்கி லக்னாதிபதியான சந்திரனை ஒருவருக்கொருவர் பார்க்கிறார் இது பலமான சந்திரமங்கள யோகம்.
  • 8  ஆம் அதிபதி சனி பகவான் 4ல் உச்சம்.
  • 11 ஆம் அதிபதி சுக்கிர பகவான் 4ல் ஆட்சி.
  • 10 ஆம் அதிபதி செவ்வாய் 10  ஆம் ஸ்தானத்திற்கு பார்வை பலம் பெறுவது.

இப்படி பணபர ஸ்தானங்களான 2,5,8,11 ஆகிய ஸ்தானங்கள் இராசி கட்டத்தில் வலுவடைந்துள்ளது இது ஒரு கோடீஸ்வர யோகம் மேலும் இது மட்டும் பத்தாது, இவருக்கு இந்து லக்னம் & மகாலட்சுமி லக்னம் என்று வரும் மிதுன லக்னத்தின் அந்த லக்னாதிபதி புதன் அந்த இந்து லக்னத்திலேயே ஆட்சி பெற்று அமைவது மேலும் சிறப்பு ஆகும், இதுபோக இதற்கு மேல் பலத்தை தெரிய இந்த 11 ஆம் பாத துவைதாம்சம் இது 11 ஆம் லாபஸ்தானத்தை விரிவான பலத்தை காண உதவும் இதை கீழே கொடுத்துள்ளேன் -

 இதில் பில் கேட்ஸின் ஜனன லக்னமான கடக லக்னத்திற்கு 11 ஆம் ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் 11 ஆம் பாத துவைதாம்சத்தில் உச்சம் அடைகிறார் மேலும் 11 ஆம் பாத துவைதாம்ச லக்னமான மகர லக்னத்திற்கு 4,10 க்கு அதிபதியாகி சுக்கிர பகவான் 3ல் உச்சம் அடைகிறார் இதனால் செய்யும் தொழிலில் அபரிவிதமான லாபங்களை ஈட்ட இந்த அமைப்பு உதவியது.

மேலும் சொத்து சேர்ப்பை காட்டக்கூடிய தன ஸ்தானம் என்று அழைக்கப்படும் 2 ஆம் இராசிமானத்தில் கடக லக்னத்திற்கு 2 ஆம் ஸ்தானாதிபதியான சூரியன் பகவான் 2ல் ஆட்சி அடைகிறார் மேலும் ரிஷப லக்னத்திற்கு 4ல் ஆட்சி அடைகிறார் இதெல்லாம் ஆழமான பலமான கோடீஸ்வர யோகம் ஆகும். அந்த கட்டத்தையும் கீழே கொடுத்துள்ளேன் -

 சரி என்ன தான் பணக்காரன் ஆனாலும் தான தர்மங்கள் செய்யக்கூடிய குணம் ஒருவருக்கு வந்தால் தான் மக்களாலும் புண்ணியங்களாலும் நிறைவான வாழ்க்கையாகும் அதற்கு சிறந்த தர்மகுண அமைப்பை பெற வேணும் இவர் "பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை" தோற்றுவித்து பலபல நல்ல தொண்டு சேவைகளை செய்கிறார் இது உலகின் பணக்கார அறக்கட்டளை ஆகும் இதற்கு இவரது லக்னாதிபதி 9ல் குரு வீட்டில் சனியின் சாரத்தில் அமைந்ததும் அந்த சந்திரன் நவாம்சத்தில் நீச ஸ்தானம் போனதும் தான் ஈட்டிய பெரும் செல்வத்தை தான தர்மங்களின் மூலம் இழக்கக்கூடிய புண்ணிய அமைப்பு பெற்றது அது போக 1,5,9,10 ஆம் ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் பலமான தொடர்பை அடைந்ததும் அந்த ஸ்தானாதிபதிகள் குரு, வளர்பிறை சந்திரன் போன்ற சாத்வீக குணம் கொண்ட கிரகங்கள் ஆனதும் அவர்களுடன் யோக செவ்வாய் தொடர்பும் இத்தகை சிறந்த தர்மகுண அமைப்பை தந்தது.

வளர்இளம் காலத்தில் வந்த புதன் திசையில் அடிப்படையான கணித ஆர்வமும் பயிற்சியும் சிறந்த விதையாக இவரது மனதில் விதைத்தது (புதனின் உயர்ந்த யோக அமைப்பை மேலே ஏற்கனவே சொல்லி உள்ளேன்), அடுத்த வந்த செவ்வாயின் சாரம் பெற்ற கேதுவின் திசையில் கணினியின் அடிப்படை கட்டமைப்பை பற்றி அறிந்தார் புதிய ஆராய்ச்சி புதிய தொழில்நுட்பங்களை முயன்று பார்த்தார்,  குருவின் சாரம் பெற்ற ஆட்சி பெற்ற சுக்கிரனின் திசையில் அதுவும் சரியான 26 வயதில் அது ஆரம்பித்து 46 வயது வரை 20 வருடங்களில் உலகின் பெரும் பணக்காராக உயர்ந்தார்.

பில் கேட்ஸின் ஜாதக அமைப்பை பற்றி எழுதுவதானால் நிறைய எழுதிக்கொண்ட போகலாம் அவ்வளவு விஷயங்கள் நிறைந்த அமைப்பை பெற்றுள்ளார் இதில் நான் எழுதியது வெறும் 40% சதவீதம் தான்.

0 Response to "பில் கேட்ஸ் (Bill Gates) ஜாதகம் கணிப்பு - உலகின் முதல் பணக்காரர் ஆனவர், கணினி மென்பொருள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger