சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்...


சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்....
o    சிம்ம லக்னத்தில் பிறப்பவர்கள் பொதுவாக உயர் நடுத்தர வர்க்கம் அல்லது உயர் வர்க்க குடும்பதில் பிறப்பார்கள்.
o    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் மற்றும் குரு அல்லது செவ்வாய் ஆகிய மூன்று கோள்கள் ஒன்றுக்கொன்று நல்ல தொடர்பை பெற்றிருந்தால் அது பெரிய யோகங்களை உருவாக்கும்.
o    சிம்ம லக்னத்தில் பிறப்பவர்கள் பொதுவாக எந்த விஷத்திலும் ஆர்வத்துடன் இருப்பார், சக்திவாய்ந்தராக, படைப்பு திறன் இருக்கும், தாராளம், பிடிவாதம், ஆக்கிரோஷம், கருத்து சுதந்திரம் ஆகியவை அதிகம்.
o    சிம்ம லக்னத்தில் பிறப்பவர்கள் எப்போதும் ஒரு நிர்வாகியாக வேலை செய்ய விரும்புவார்கள், வேலை வாங்குவதில் ஆர்வமுள்ளவர்கள், யாருக்கும் கீழ் வேலை பார்பதன் மூலம் திருப்தி அடையமாட்டார்கள்.
o    சிம்ம லக்னத்தில் பிறப்பவர்கள் சந்திரன் 6ல் இருந்தால் தனது எதிரிகளை செயலிழக்கவைக்கும் ஆற்றல் ஏற்படும்.
o    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே ஈகோ (அகந்தை) அதிகமாக இருக்கும் எனவே தங்கள் ஈகோ கட்டுப்படுத்த முடியாதவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் தோல்வி காண வாய்ப்பு அதிகம்.
o    சிம்ம லக்னத்தில் பிறந்த நபர் முடிவெடுப்பதில் அவசரம் காட்டாமல் பொறுமையாக வேண்டிய நேரத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
o    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக எதிர் பாலினம் கும்பம் லக்னமாக இருந்தால் ஈர்ப்பு இருக்கும் ஆனால் கூட பயணித்தால் முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
o    சிம்ம லக்னத்தில் பிறப்பவர்கள் பொதுவாக மேஷம், தனுசு ராசிகளுடன் சற்று அதிகமான நல்ல நட்புரீதியான உறவு இருக்கும், விருச்சிகம் மற்றும் கடகம் ராசிகளுடன் உறவு சமமான அளவில் இருக்கும், மீன ராசி உடன் அவ்வளவாக ஒத்துப்போகாது.
o    சிம்ம லக்னத்தில் பிறப்பவர்கள் மரபுகள், பழைய பழக்கவழக்கங்களுக்கு மீறியவர்களாகவும் மற்றும் அதீத நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருப்பார்கள் அவர்களின் ஜாதகத்தில் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் அதை மாற்றி நல்ல விஷயங்களை நோக்கி செலுத்தும் சிறப்பான வழிகாட்டிகள் கிடைப்பார்கள்.
o    வெற்றிகரமான அரசியல்வாதிகள், இராணுவம், உயர்மட்ட நிர்வாகிகள் என சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் அதிகம்.
o    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக போட்டிகளை, சவால்களை விரும்பக்கூடியவர்கள் செவ்வாய் சிறப்பாக இருந்தால் அதில் வெல்லுவதற்க்கான ஆற்றல் கிடைக்கும்.
o    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் குறிப்பு அடையாளமாக இருப்பது சிங்கம் ஆம் ராஜகெம்பிரம், தைரியம், ஆதிக்கம் செலுத்தும் போக்கு, வேலை முடிந்ததும் மந்தமான சிங்கமே குறிப்பு அடையாள விலங்கு.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger