ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 17 - லட்சுமி யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 17 - லட்சுமி யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


லட்சுமியோகம்
லட்சுமி யோகங்கள் பல உள்ளது அதில் இதுவும் ஒன்று அதாவது லக்னாதிபதியும் பாக்ய ஸ்தானமான 9ஆம் ஸ்தானாதிபதி சேர்ந்தோ தனித்தாகவோ 2, 11 ஸ்தானங்களில் இருந்து 2, 11 ஸ்தானாதிபதிகளில் ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் அடைந்தால் அது லட்சுமி யோகம் ஆகும். இதில் அசுப கிரக சேர்க்கை பார்வை இருந்தால் யோக பலன்குறைவு ஏற்படும்.

இதன் பலன்கள் -
பேச்சில் சாதுர்யம், செல்வாக்கு, சமுதாயத்தில் சிறப்பான அங்கீகாரம் மற்றும் பொறுப்புகள், கற்று தேர்ந்தவர், திறமையானவர்,  உயர்ந்த நோக்கங்கள் இருக்கும், லாபகரமான தொழில் அமைப்பு, விலையுயர்ந்த செல்வங்களின் சேர்க்கை போன்றவை ஏற்படும். இதில் அசுப கிரக சேர்க்கை பார்வை இருந்தால் அல்லது மற்ற பாதிப்பான அமைப்புகள் இருந்தால் சாதாரண விளைவுகளே ஏற்படும்.
லட்சுமியோகம் ஒரு வகை உதாரண படம்
 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 17 - லட்சுமி யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger