நீங்கள் முதலாளியா? தலைவனா? - Are you Boss? Or leader?...

நீங்கள் முதலாளியா? தலைவனா? - Are you Boss? Or leader?...

நீங்கள் வெறும் முதலாளியா அல்லது தலைவனா இதற்கு ஜோதிடம் கூறும் கருத்தை தெரிவதற்கு முன் முதலாளி மற்றும் தலைவன் என்றால் என்னவென்றும் வித்தியாசம் என்னவென்றும் சற்று சுருக்கமாக பார்ப்போம், இதில் நல்ல முதலாளி அல்லது நல்ல தலைவன் இதற்க்கான ஜோதிட கருத்தை மட்டுமே கூற உள்ளேன் அதனால் பெருங்குறைகள் உள்ள முதலாளி அல்லது தலைவன் பற்றி எடுத்துக்கொள்ள வில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

முதலாளி என்றால் தனக்கு சொந்தமான ஒரு தொழிலுக்காக தனது அல்லது தன் சார்ந்தவர்கள் மூலம் நிதியை திரட்டி அதை அந்த தொழில் ஸ்தாபனத்தில் முதலீடு செய்து அந்த தொழிலுக்கு தக்க வேலையாட்களை அமர்த்தி அவர்கள் பயிற்சி மற்றும் முயற்சிகளை நிர்வாகம் செய்து அதன் மூலம் லாபத்தை ஈட்டக்கூடியவரே முதலாளி எனப்படுவார், தனது வெற்றியால் கிடைத்த லாபத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார் ஆனால் கீழ்நிலை பணியாளர்களுக்கு மதிப்பு மரியாதை விருது பரிசுகள் தந்து ஆதரிப்பார்.

தலைவர் என்றால் அரசியல் தலைவனல்ல Business Leader அதாவது தொழிலை அல்லது வியாபாரத்தை தனது தலைமையில் முன்னெடுத்து செல்பவரே வியாபாரத் தலைவர் (Business Leader) சரி இவர் முதலீடு போட மாட்டாரா அப்படி அல்ல இவரும் முதலீடு போடுவார் ஆனால் இவரது நிர்வாகமானது கட்டளை பிறப்பிப்பது மட்டும் அல்லாமல் தான் இட்ட கட்டளைகளை செய்படுத்துவதில் தன் கீழ் பணியாளர்களோடு ஒருகிணைந்து திட்டம் தீட்டுவதிலும் செய்படுத்துவதிலும் ஒருகிணைந்து தோள் கொடுப்பவராக அவர் இருப்பார் தனது வெற்றியால் கிடைத்த லாபத்தை சரிவிகிதத்தில் சமப்படுத்த முயல்வார் குறைபட்சம் கீழ்நிலை பணியாளர்களுக்கு உயர்வான மதிப்பு மரியாதை விருது பரிசுகள் தந்து ஆதரிப்பார்


சரி விஷயத்திற்கு வருவோம் முதலில் முதலாளியானாலும் அல்லது தலைவனாலும் ஜென்ம லக்னத்திற்கு 2,4,5,9,10,11 ஆகிய ஸ்தானங்கள் வலுவடைந்து நவாம்சமும் வலுவடைந்து மற்ற சில அம்சங்களும் வலுப்பெற்று அமைந்தவர்களே அந்த உயர்வான இடத்தை அடைவார்கள் அப்படி அந்த நிலையில் உள்ளவர்களின் நிர்வாக சார்ந்த நடவடிக்கைகளில் முதலாளி, தலைவன் வித்தியாசத்தை சொல்லுவது மட்டுமே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலாளி - ஜென்ம லக்னம் மற்றும் லக்னத்திற்கு 4,5,9,10 ஆகிய ஸ்தானங்கள் வலுவடைந்து நவாம்சமும் வலுவடைந்து அப்படி வலுவடையும் ஸ்தானங்கள் சிம்மம், மேஷம், விருச்சிகம், மகரம், ரிஷபம் ஆகிய இராசிகளாக அமைந்து மேலும் அங்கே வலுவடையும் கூட்டு கிரகங்கள் (செவ்வாய்+சூரியன்), (சனி+செவ்வாய்), (சூரியன்+சனி), (சூரியன்+கேது+செவ்வாய்), (சனி+செவ்வாய்+கேது), (சூரியன்+குரு+செவ்வாய்), (சூரியன்+சனி+குரு) இவ்வாறாக அமைந்தால் நிர்வாக சார்ந்த நடவடிக்கைகளில் முதலாளிக்கான தன்மைகள் அதிகமாக இருக்கும். இதில் இவ்வாறு அமையும் கிரகங்களை சுபகுரு வலிமை அமர்ந்து பார்வை செய்தால் வியாபாரத் தலைவனுக்கான  தன்மைகள் சற்று கூடிதலாக இருக்கலாம்

வியாபாரத் தலைவர் - ஜென்ம லக்னம் மற்றும் லக்னத்திற்கு 4,5,9,10 ஆகிய ஸ்தானங்கள் வலுவடைந்து நவாம்சமும் வலுவடைந்து அப்படி வலுவடையும் ஸ்தானங்கள் கும்பம், துலாம், தனுசு, கடகம், மீனம் ஆகிய இராசிகளாக அமைந்து மேலும் அங்கே வலுவடையும் கூட்டு கிரகங்கள் (சனி+சுக்கிரன்),  (சந்திரன்+செவ்வாய்), (சூரியன்+புதன்+சந்திரன்) (சனி+புதன்+சுக்கிரன்) இவ்வாறாக அமைந்து அந்த ஸ்தானங்களுக்கு சுப குருவின் பார்வை விழுவது மற்றும் (சனி+குரு+செவ்வாய்),  (சூரியன்+குரு+சந்திரன்)(சந்திரன்+செவ்வாய்+குரு) இவ்வாறாக அமைந்தால் நிர்வாக சார்ந்த நடவடிக்கைகளில் வியாபாரத் தலைவனுக்கான  தன்மைகள் அதிகமாக இருக்கும்.

மேலே சொன்னவற்றில் கலவையாக ஒருவரது ஜாதகம் இருக்குமானால் முதலாளி, தலைவன் ஆகியவற்றின் வித்தியாச தன்மைகள் சரிசமமானதாக இருக்கும் அதாவது அந்த தன்மைகள் கலவையாக கொண்டவராக அவர் இருப்பார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "நீங்கள் முதலாளியா? தலைவனா? - Are you Boss? Or leader?..."

கருத்துரையிடுக

Powered by Blogger