தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்…


தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்…
·        தனுசு லக்னத்தில் பிறப்பவர்கள் பொதுவாக உயர் நடுத்தர வர்க்கம் அல்லது உயர் வர்க்க குடும்பத்தில் பிறப்பார்கள்.

·        தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் தாராள மனப்பான்மை, சுதந்திரத்தை விரும்பும் நபர், புதிய கருத்துக்கள் மற்றும் ஆய்வு இடம் அளிப்பவர் அதே நேரத்தில் பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டார்.

·        தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் லட்சியங்கள் உள்ளவர், வெளிப்படையாக சவால்களை சந்திப்பார், தனக்குள் உந்து சக்தி உள்ளவர்.

·        தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் சூரியன் வியாழன் அல்லது செவ்வாய் இந்த 3 கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்றால் வாழ்வில் வெற்றி, சமூகத்தில் உயர்வான இடம் போன்றவை அமையும்.

·        தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் வியாழன் ராகு லக்னத்தில் 5, 9 ஆகிய வீடுகள் ஒன்றாக இருந்தால் அது பெரிய யோகத்தை ஏற்படுத்தும் குறிப்பாக ராகு தசா காலங்களில்.

·        தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் தங்களின் பிள்ளைகளின் மீது அதிக பாசமாக இருப்பார்கள், அதுவும் சின்ன குழந்தைகளாக இருக்கும் போது அதிக பாசமாக இருப்பார்கள்.

·        தனுசு சில விதத்தில் அதிர்ஷ்டமான லக்னமாகும் ஏனெனில் எளிதில் அவர்களுக்கு சிரமமான காலங்களில் அவர்களுக்கு உதவ ஏதே ஒருவிதத்தில் ஆட்கள் அமைவார்கள்.

·        தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் தத்துவம், உயர்கல்வி அல்லது உலக அறிவு தேடல் உள்ளவர்கள் மற்றும் பரந்த கருத்துக்கள் அதன் பூர்வீகமான உள்ளுணர்வு, தொலைதூர இடங்களில் பயண விருப்பம், தனிப்பட்ட கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்கள்.

·        தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மத, கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள், குறைந்தபட்சம் சமூக கட்டமைப்பை மதிப்பவர்கள், பொறுமை மீறினால் கடும் கோபம் ஏற்படும் குரு நன்றாக இருந்தால் கோபத்தை கட்டுப்படுத்த ஆற்றல் இருக்கும்.

·        தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக சிம்மம், மேஷம் மற்றும் மீனம் ராசிகளுடன் சற்று அதிகமான நல்ல நட்புரீதியான உறவு இருக்கும், கடகம் மற்றும் கன்னி ராசிகளுடன் உறவு சமமான அளவில் இருக்கும், ரிஷபம் ராசி உடன் அவ்வளவாக ஒத்துப்போகாது.

·        தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குருமங்கள யோகம், புதாதித்தயா யோகம் ஆகிய யோகங்கள் சிறப்பான பலனை தரும்.

0 Response to "தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger