துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்…

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்

 • துலாம் லக்னத்தில் பிறப்பவர்கள் பொதுவாக உயர் நடுத்தர வர்க்கம் அல்லது பணக்கார குடும்பத்தில் பிறப்பார்கள்.
 • துலாம் லக்னம் என்றாலே சுறுசுறுப்பு, கலை ஆர்வம், எளிதாகப் பழகும் தன்மை, பரிசுகள் அழகு மீது பிரியம், இராஜதந்திரம், அலங்காரம், சமநிலை.
 • துலாம் லக்னத்தில் பிறப்பவர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் தங்களை சரிசெய்து கொள்ளும் திறன் பெற்றவர்கள், கணக்கு பார்த்து தான் வேலை செய்வார்கள்.
 • துலாம் லக்னத்தில் பிறப்பவர்களுக்கு ராகு, சனி சரியான இடங்களில் சேர்ந்து அமர்ந்தால் மிக அதிர்ஷடமான சேர்க்கையாக இருக்கும் அவர்கள் திசையும் சிறப்பாக இருக்கும்.
 • துலாம் லக்னத்தில் பிறப்பவர்களுக்கு புதன் யோகமான கிரகம் ஆகும் இவர் சரியான பலத்துடன் ஆட்சி, உச்சம் அடைந்தால் வெளிநாட்டு யோகங்கள் ஏற்படுகின்றன.
 • துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் நண்பர்,வாழ்க்கை துணை, சுற்றத்தார்களுடன் மிகவும் உணர்ச்சி பிணைப்போடு பழகுவார்கள் இந்த இயல்பின் காரணமாக தங்கள் மனதில் சில குழப்பத்தை உருவாக்கி கொள்வார்கள்.
 • துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக சினிமா, கலை அல்லது ஃபேஷன் தொழிலில்களில் சீக்கிரமாக ஈர்க்கப்படுவார்கள்.
 • துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக கும்பம், மிதுனம் ராசிகளுடன் சற்று அதிகமான நல்ல நட்புரீதியான உறவு இருக்கும், கடகம் மற்றும் ன்னி ராசிகளுடன் உறவு சமமான அளவில் இருக்கும், மீனம் ராசி உடன் அவ்வளவாக ஒத்துப்போகாது.
 • துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக சனி பகவான் நன்றாக சுப பலத்துடன் இருந்தால் திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும், சந்திர பகவான் நன்றாக சுப பலத்துடன் இருந்தால் திருமணத்திற்கு பிறகு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.
 • துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக காதல் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் வருமானால் எளிதில் காதல் உணர்வுக்கு உள்ளாகி விடுவார்கள்.
 • துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் பொதுவாக தனிமையை விரும்புவதில்லை எனவே காதலர்கள், தோழர்கள், குடும்பம், நண்பர்கள், வணிக கூட்டாளிகள் என  சுற்றத்துடனே இருக்க முனைவார்.
 • துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்களின் கருத்துக்களை அவர்களது கோணத்தில் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்கள் எனவே மற்றவர்களின் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டும்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 

0 Response to "துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கான பொதுவான நிறைகள், குறைகள், குணங்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger