மேஷ லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்...

மேஷ லக்கினத்தில் தோன்றியவருக்கு வாழ்க்கை துணை ஸ்தான பலன்...


முதல் பாடல் விளக்கம்
மேஷ லக்கினத்தில் தோன்றியவருக்கு களத்திர (வாழ்க்கை துணை) ஸ்தானம் துலாம் ஆகும் அதற்கு நாயகன் சுக்கிர (சுங்கன்) பகவான் ஆகும் இந்த லக்கினத்தில் தோன்றியவருக்கு இல்வாழ்க்கையை பற்றி கூறுகிறேன் கேட்பாய் ஆக அவருக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை திடமான மனதை உடையவராகவும், அன்பும் அழகும் உடையவராகவும், ஆசைகள் அதிகம் உடையவராகவும், குளிர்ந்த தேகத்தை உடையவராகவும், மனதில் சுதந்திர உணர்வும் விரும்பியதை அடைய பிடிவாத குணமும் இருக்கும், கலைகள் எதையேனும் அறிந்திருப்பார், பேச்சில் மயக்க கூடிய அளவிற்கு வார்த்தை ஜாலங்கள் அறிந்தவராய் இருப்பார், வீடு நில போக வசதிகளும் தேவையான அளவுக்கு வருமானமும் பெற்றவராக இருப்பார் ஆனால் சுக்கிரன் நன்றாக அமைந்தவருக்கு மட்டுமே உரைக்க வேண்டும்.

இரண்டாம் பாடல் விளக்கம்
சுக்கிரன் நன்றாக அமைய சுக்கிரன் (பகடன்) மேஷ லக்கினத்தில் 2ஆம், 3ஆம், 9ஆம், 10ஆம் ஸ்தானங்கள் இவருக்கு உகந்த சுபர்களோடு சேர்ந்து அமர்ந்திருந்தால் நல்லவிதமாக குடும்பத்தை நடத்தக்கூடியவராக இருப்பார் மற்ற ஸ்தானங்களில் இருந்தால் ஏதேனும் நிறைகளோ அல்லது குறைகளோ அளவை மீறி இருக்கும், வேண்டாத சிறு சிறு வழக்கும் புரிந்து கொள்ளாத தன்மை தலைதூக்கும், மற்றவரால் விமர்சிக்க படும் நிலைகள் ஏற்படும், சிறப்பான கனவு வந்து அது பின் கலைந்து போனது போல் ஆகும் அதாவது நமது வாழ்க்கை துணை இப்படி இருப்பார் அப்படி இருப்பார் என்று நீங்கள் போட்ட வைத்த கணக்குகள் கற்பனைகள் பயனற்றதாகும் இதை சுக்கிரனை தவிர மற்ற ஆறு கிரகங்கள் மற்றும் இரண்டு நிழல்கிரகங்கள் ஆன மொத்தம் எட்டு கோள்களின் நிலைகளையும் ஆராய்ந்து பின் உரைப்பாய் இந்த கோள்முனி சொன்னதை.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "மேஷ லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்..."

கருத்துரையிடுக

Powered by Blogger