ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (Ramakrishna Paramahamsa) ஜாதகம் - இந்திய ஆன்மீகத்தின் மாணிக்கம், ஆன்ம ஞானி…


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (Ramakrishna Paramahamsa) ஜாதகம் கணிப்பு - இந்திய ஆன்மீகத்தின் மாணிக்கம், ஆன்ம ஞானி

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (Ramakrishna Paramahamsa) ஜாதகம் இந்திய ஆன்மீகத்தின் பொக்கிசமான ஜாதக அமைப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜாதக அமைப்பு ஆகும், ஆன்ம ஞானம் ஆனாலும் சரி பக்தி மார்க்கம் ஆனாலும் சரி இந்த இரண்டிற்கும் வலுவாக காட்டக்கூடிய ஜாதகம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஜாதகம் ஆகும் இவரின் ஜாதகத்தின் மூலமாக ஆன்ம ஞானம் மற்றும் பக்தி மார்க்கம் போன்றவற்றை பார்ப்போம்.

பிரபல ஜாதகங்கள்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (Ramakrishna Paramahamsa) ஜாதகம்
ஆன்ம ஞானம் இது ஜோதிடத்தில் அரிதாக பேசப்படுவதும் அரிதாக காணப்படுவதுமான ஜோதிட அமைப்பாகும், பரிபூரண ஆத்ம நிலைக்கு ஜோதிடத்தில் எந்த விதமான காரகத்துவங்களும் ஸ்தானங்களும் இல்லை ஏன்னென்றால் ஜோதிடம் வேதாந்தத்தின் முன் நிலைகளைக்கு மட்டுமே கூறபட்டதாகவும் வேதாந்தம் என்ற நிலை தொடங்கும் போது ஜோதிடம் முற்று பெற்றதாகவும் ஆகிவிடுகிறது இதை வேறுவிதத்தில் கூறுவதனால் ஜோதிடம் பருப்பொருட்களின் (Physical Matter)தன்மையை மட்டுமே கணித்து கூறும் அதுவும் இந்த பூமியில் அடங்கிய நிகழ்வுகளை மட்டுமே கூறும் கலை அதனால் ஆத்மா இதற்கெல்லாம் கட்டுப்படாது.

மிக விரிவாக எழுத வேண்டிய விஷயம் ஆனால் எவ்வளவு சுருங்க கூற முடியுமோ அவ்வளவு சுருங்க கூறவே முயற்சிக்கிறேன் அப்படியானால் ஆத்ம காரகன் என்று சூரியனை எனது பதிவுகளிலும் மற்றும் ஜோதிடமும் கூறுவதாகவும் கருத்துகள் உள்ளதே என்று தங்களுக்கு தோன்றலாம் ஆம் அது பஞ்சபூத பருப்பொருட்களின் கூட்டுக்கலவையான உடலை சார்ந்த நிலையில் உள்ள ஜீவாத்மா (ஜீவன் என்ற நிலை உள்ள ஆத்மபக்குவம்) இந்த ஜீவாத்ம காரகன் தான் சூரியன் எனவே பரிபூரண ஆத்ம நிலைக்கு சூரியனோ, லக்னமோ காரகத்துவங்கள் இல்லை, இந்த கருத்தை ஏற்றுகொள்வதிலோ அல்லது முரண்படுவதிலோயோ யாவருக்கும் உரிமை உண்டு அல்லது சிறியோன் விவரம் தெரியாமல் பிதற்றுகிறேன் என்று விட்டு விட்டலாம்.

சரி அப்படியானால் ஒருவரின் ஆன்ம ஞானத்தை எப்படி அறிவது அதற்கு வேதம் நேதி நேதி என்று பிரும்ம நிலையை சொல்வது போல ஒருவரின் ஆன்ம ஞானத்தை பற்றி அறிய ஒருவர் தான் யார் என்ற உண்மையை அறிந்திட எப்படி இது இல்லை, இதுவும் இல்லை, இதுவும் இல்லை (நேதி நேதி) என்று ஒவ்வொன்றாக ஆன்மாவின் மாயைத் தோற்றகளை எல்லாம் கழித்துக்கட்டி கடைசியில் மிஞ்சி இருப்பது என்ன? என்று தனது சுயத்தில் மீதி இருப்பது ஆன்மாவின் உண்மையான, நிலையான, மாறுதலற்ற தன்மையை உணர்ந்து அதனுள் ஒடுங்குவது ஆத்ம ஞானம் எனவே ஜோதிடத்தின் மூலமாக ஒருவர் உலக பஞ்சபூத பருப்பொருட் சார்ந்த விசாரணையின் மூலமாக இகவாழ்க்கையில் தான் யார் என்ற உண்மையை அறிய ஒவ்வொன்றாக விளக்குவதை பின் முழுமையாக தன்னை உணரத் தொடங்கும் நிலை வரை ஜோதிடத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம் பின்னர் அவர் ஒடுங்கும் ஆத்ம ஞானம் ஜோதிடத்தில் கட்டுப்படாது.

இப்பேறு பெற்ற ஆத்ம ஞானத்திற்க்கான பாதையில் ஒருவர் பயணிக்க சூரியன், சந்திரன், குரு, சனி லக்னம், லக்னாதிபதி ஆகியவற்றுடன் 5,8,9,10,12 ஆகிய ஸ்தானங்களும் சுபசுத்த வலிமையை பெற வேண்டும், இதற்கு பல யோகங்கள் உள்ளன அதில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு என்ன யோகங்கள் அமைந்துள்ளன என்று இயன்ற அளவில் பார்ப்போம்,

ஞானி பிறப்பதற்க்கான ஒரு ஜோதிட விதி சனியும், லக்னாதிபதியும் ஆட்சி உச்சம் பெற்று சனியோ லக்னாதிபதியோ சூரிய, சந்திரன் அமர்ந்திருக்கும் இராசியாதிபதியை பார்வை செய்தால் ஞானி ஒருவர் உதயம் ஆவார் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு விதி யாகும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு லக்னாதிபதியே சனியாக அமைந்து அவர் உச்சம் பெற்று சூரிய, சந்திரன் அமர்ந்திருக்கும் இராசியாதிபதியாகவும் சனியாகவே அமைந்து உள்ளதால் இந்த யோகம் ஏற்பட்டது. மேலும் மேலே சொன்னதை போன்ற ஒரு ஒத்த அமைப்பு இவருக்கு நவாம்சத்திலும் அமைந்துள்ளது மேலும் சிறப்பு.

சனியோ லக்னாதிபதியோ ஆட்சி உச்சம் பெற்று சனியோ லக்னாதிபதியோ பார்க்கும் இராசியில் நவாம்சத்தில் சூரிய, சந்திரன் அமர்ந்திருந்தாலும் ஞானி பிறப்பதற்க்கான இது ஒரு ஜோதிட விதி ஆகும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு உச்சம் பெற்றுள்ள சனி பார்க்கும் தனுசு, மேஷ இராசியில் நவாம்சத்தில் சூரிய, சந்திரன் அமர்ந்திருப்பதால் இந்த உயர் அமைப்பு ஏற்பட்டது. இப்படி உயர்வு பெற்ற சனியை குரு பார்ப்பதால் சனி மேலும் சுபசுத்த வலிமையை பெற்றுள்ளது.

இதுமட்டும் போதுமா மேலும் பாருங்கள்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 12 ஆம் இராசிவிருத்தம் கட்டம்

12 ஆம் இராசிவிருத்தம்  என்ற மோட்ச முக்தி ஸ்தான விருத்தக் கட்டதில் 12 ஆம் ஸ்தானத்தில் 12க்குடைய புதன் ஆட்சி ஆனதுடன் உடன் சனியும், குருவும் சேர்ந்துள்ளனர், 5,10 க்குடைய செவ்வாய் உச்சம் ஆகி உள்ளார்.        

இதுமட்டும் போதுமா மேலும் பாருங்கள்
 ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 12 ஆம் இராசிமானம் கட்டம்


12 ஆம் இராசிமானம் என்ற மோட்ச முக்தி ஸ்தான மானக் கட்டதில் 12 ஆம் ஸ்தானத்தில் சனியும், குருவும் சேர்ந்துள்ளனர் அதுபோக 12க்குடைய செவ்வாய் 4ஆம் பார்வையாக அவரது 12ஆம் ஸ்தானத்தை பார்வை செய்கிறார்.


இன்னும் பாருங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தசாம்சம்

இதிலும் 12 ஆம் ஸ்தானம் என்ற மோட்ச முக்தி ஸ்தானமான இராசியில் 12க்குடைய செவ்வாய் ஆட்சி மற்றும் சூரியன் உச்சம்.

பார்த்தீர்களா இதன் மூலமாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்க்கு வரிசை தொடராக எவ்வளவு அம்சங்களில் 12க்குடையவரும் மேலும் சூரியன், சந்திரன், குரு, சனி வலிமை பெறுகிறார்கள் என்று தெரியும் இதனாலேயே அவர் இகவாழ்க்கையின் நாட்டத்தை விட்டு அகவாழ்க்கையான ஆன்ம போதத்தை அடைந்தார், அதென்ன சூரியன், சந்திரன், குரு, சனி சுபசுத்த வலிமை என்றும் அத்தோடு தொடர்பு பெறும் 5,8,9,10,12 ஆகிய ஸ்தானங்களின் காரகங்களை விவரிக்க தொடங்கினால் இக்கட்டுரை மேலும் மேலும் நீளும் அதனால் இந்த அளவில் புரிந்து கொண்டால் போதுமானது.

சரி பக்தி மார்கத்திற்கு வருவோம் மேலே சொன்னது போல் உடல், மனம் நானல்ல என்ற வேதாந்தத்தை போலவே உடலையும் மனதையும் மற்றும் தான் தனது உடைமை போன்றவற்றை தான் வணங்கும் இறைவனிடமே சமர்ப்பித்து இறைவனி தாளில் சரணடைவது தான் பக்தி மார்க்கம் சரி பக்தி மார்க்கத்திற்க்கான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் யோகத்தை பார்ப்போம்.

பக்தி மார்க்கத்திற்க்கான ஒரு ஜோதிட விதி லக்னாதிபதி சனி குரு இவர்கள் மூவரில் குறைந்த பட்சம் ஒருவர் 1,5,9 ல் ஆட்சி உச்சம் பெற்று ஒருவருக்கொருவர் பார்த்தாலும் ஒருவருக்கொருவரின் வீட்டில் இடம் மாறி அமர்ந்தாலும் சிறந்த பக்திமானாக இருப்பார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்க்கு இவ்வாறு அமைந்த்துடன் இக்கூட்டில் சுக்கிரனும் இரண்டில் குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமைந்ததால் அவரின் குடும்பமே ஒரு பக்திஞானப் பரம்பரையாக அமைந்தது. மேலும் மேலே சொன்னதை போன்ற ஒரு ஒத்த அமைப்பு இவருக்கு நவாம்சத்திலும் அமைந்துள்ளது மேலும் சிறப்பு.


இதுமட்டும் போதுமா மேலும் பாருங்கள்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 5 ஆம் இராசிமானம் கட்டம்
மந்திர உச்சாடணம், வேதங்களில் ஈடுபாடு, ஆன்மீக சாஸ்திரம் பயிற்சி, ஆன்மீக அருள் ஆகியவற்றிக்கு உரிய 5 ஆம் இராசிமானம் கட்டத்தில் 5 ஆம் ஸ்தானத்தில் சனி ஆட்சி உடன் குரு பகவான்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் 9 ஆம் இராசிமானம் கட்டம்

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, ஆன்மீக பயிற்சி, மத ஆச்சாரம், தர்ம குணங்கள், குரு உபதேசம்  ஆகியவற்றிக்கு உரிய 9 ஆம் இராசிமானம் கட்டத்தில் 9ஆம் ஸ்தானாதிபதி 6ல் ஆட்சி அடைந்தது உடன் 9ல் சனி, குரு சேர்ந்துள்ளனர்.

அப்பப்பா இதே போலவே 5ஆம் இராசிவிருத்தம் கட்டம் மற்றும் 9ஆம் இராசிவிருத்தம் கட்டத்திலும் இப்படிபட்ட உயர்வான அமைப்புகளையும் பெற்றுள்ளது இவரை போன்ற உயர்ந்த பிறப்புகள் மிக அரிதாகவே நூற்றாண்டுகளுக்கு ஒரு சில முறைகள் மட்டுமே அமைகிறது இது சிறந்த கோடீஸ்வர யோகங்களை விடவும் சிறந்தது ஏன்னென்றால் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை உலக கோடீஸ்வர பட்டியல்களும் உள்ளூர் கோடீஸ்வர பட்டியல்களும் மாறிக்கொண்டே இருக்கிறது ஆனால் இது போன்ற ஆத்ம ஞானிகளின் நிலை உயர்வு நிலையாக என்று உள்ளதாக உள்ளது.
 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 0 Response to "ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (Ramakrishna Paramahamsa) ஜாதகம் - இந்திய ஆன்மீகத்தின் மாணிக்கம், ஆன்ம ஞானி…"

கருத்துரையிடுக

Powered by Blogger