தொழில் யோகங்கள் பகுதி 1 - வக்கீல் தொழில் (Lawyer Job), பிரபல வழக்கறிஞர்கள்…

தொழில் யோகங்கள் பகுதி 1 - வக்கீல் தொழில் (Lawyer Job), பிரபல வழக்கறிஞர்கள்

தொழில் யோகங்கள் பகுதியில் தனது தொழிலில் (வேலையில் ) பிரபலமான திறமையான ஆற்றலை வெளிபடுத்தி தன் சார்ந்த தொழிலில் புகழ்பெற்றவர்களாக, சாதனைகள் செய்தவர்களாகவும், அங்கீகாரம் பெற்றவர்களாகவும் வலம் வரும் சிறந்தவர்கள் அவர்களின் ஜாதகத்தில் அமைந்த அந்த தொழிலுக்கான சிறப்பான யோகங்களை இந்த பதவுகளில் பார்ப்போம்.  இதை ஆங்கிலத்தில் சொல்லவதானால் high standards of workmanship it means He/She have quality of something made excellent or do something better than ordinary, because of his/her knowledge and skills at performing unique and right way of his/her tasks. ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் இதில் உள்ள ஜாதகங்களின் பலன்களை நான் மிகமிக சுருக்கமாகவே கூறிவருகிறேன் விரிவாக எழுத வேண்டும் என்றால் ஒவ்வொன்றும் அதிகமாக நேரம் எடுத்துக்கொள்ளும் எனவே தான் ஜாதகங்களின் பலன்களை சுருக்கமாகவே எழுதி உள்ளேன்.

இன்று நாம் எடுத்துக்கொண்டுள்ளது வக்கீல் தொழில் (Lawyer Job)  பிரபலமான திறமையான இரண்டு வழக்கறிஞர்கள் ஜாதகத்தை கீழே கொடுத்துள்ளேன் அதில் வழக்கறிஞர் தொழில் யோகங்களை பார்ப்போம்

வழக்கறிஞர் தொழில் என்பது சாதாரணமானதல்ல பூரண தர்மத்தை கடைபிடிக்க முடியாது அதே நேரத்தில் தர்மத்தைவிட்டு அதிகமாக விலகிச்செல்லவும் கூடாது, இப்படிபட்ட தொழிலில் வாதம் பிரதிவாதம் இரண்டிலும் திறன் பெற்றவனாக இருக்கவேண்டும் எனவே வாக்கு ஸ்தானமான 2 ஆம் வீடு பலமாக இருக்கவேண்டும், பொய்யோ உண்மையோ தனக்குள் வைத்திருக்க வேண்டும் எப்போது வெளிபடுத்த வேண்டுமோ அந்த சமயம் வரை பொறுமை வேண்டும் மேலும் தனக்குள் பலவித திட்டங்களை வைத்திருப்பவனாக இருக்கவேண்டும் ஆனால் அதை வெளிபடுத்துவதில் தந்திரம் வேண்டும் இதற்கு 8ஆம் வீடு பலமாக இருக்கவேண்டும், நினைவாற்றலுக்கு 5ஆம் வீடு பலமாக இருக்கவேண்டும், எதிரிகளை பயமின்றி சந்திப்பதற்கும் அச்சாமல் வாதிடுவதற்கும் அதில் வெற்றிகானவும் 6ஆம் வீடு பலமாக இருக்கவேண்டும், கடைசியாக முன்கூட்டியே விஷயங்களை யூகிப்பதற்கும் அதில் வெற்றிகானவும் 9ஆம் வீடு பலமாக இருக்கவேண்டும், இவைகளுக்கெல்லாம் ஒத்துழைக்கும் விதமாக அவரது 10ஆம் வீடு அமைய பெற்றிருக்க வேண்டும்.
இதற்க்கான காரகத்துவ கிரகங்கள் - சனி, செவ்வாய், குரு, சூரியன். புதன் (நினைவாற்றலுக்கு).

 பிரபல வழக்கறிஞர் ஜாதகம்  - 1
 
 
பிரபல வழக்கறிஞர் ஜாதகம்  - 1 : - ஒரு மூத்த வழக்கறிஞர் ஜாதகம் வழக்கறிஞர்கள் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமான 2 ஆம் வீட்டிற்கு செவ்வாயின் பார்வை, இருப்பு அல்லது ஏதோவிதமான பலமான தொடர்பையாவது பெற்றிருக்க வேண்டும், இவரின் ஜாதகத்தில் 2ல் கேது இருந்து அவரை செவ்வாய் பலமாக பார்க்கிறார் மேலும் 8ல் ஆட்சி பெற்ற சூரியனும் பலமாக பார்க்கிறார் மேலும் குரு பகவானும் 5ஆம் பார்வையாக பலமாக பார்க்கிறார் மேலும் வாக்கு ஸ்தானாதிபதி சனி பகவான் 9ல் உச்சம் பெற்ற புதனுடன் சென்று சேர்ந்து வலிமை அடைகிறார்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல இவரின் 8 ஆம் ஸ்தானம் அமைந்துள்ளது ஆம் 8ல் சூரியன் ஆட்சியால் பூரண ஆயுளுடன் வாழ்கிறார் ஆனால் இராகு, செவ்வாயின் சேர்க்கையால் நித்திய கண்டம் போல் தினமும் தொழில் சாவல்கள் என வாழ்ந்து வருகிறார் 8 ஆம் ஸ்தானாதிபதி சூரிய பகவான் 8ல் ஆட்சி உடன் செவ்வாய் எனவே திட்டம் தீட்டுவதில் சட்ட நுணுக்கங்களை சுட்டிக்காட்டுவதில் வல்லவர் ஆக்கி உள்ளது, எதிரிகளை பயமின்றி சந்திப்பதற்கும் அச்சாமல் வாதிடுவதற்கும் 6ஆம் ஸ்தானாதிபதி புதன் பகவான் 9ல் உச்சம் பெற்றுள்ளார், இறுதியாக 10ஆம் ஸ்தானாதிபதி சுக்கிரன் தனது பொறுப்பை சூரியனிடம் ஒப்படைத்து விட்டு அடங்கி விட்டார் 10ல் உள்ள குரு, சந்திரன் தொழிலில் புகழ்பெற்றவராக மாற்றிவிட்டார்

பிரபல வழக்கறிஞர் ஜாதகம்  - 2
பிரபல வழக்கறிஞர் ஜாதகம்  - 2 : - இதுவும் ஒரு மூத்த வழக்கறிஞர் ஜாதகம் வழக்கறிஞர்கள் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானமான 2 ஆம் வீட்டிற்கு செவ்வாயின் பார்வை, இருப்பு அல்லது ஏதோவிதமான பலமான தொடர்பையாவது பெற்றிருக்க வேண்டும் என்று ஏற்கெனவே சொன்னது போல் இவரின் ஜாதகத்தில் 2ல் செவ்வாய் மேலும் 2 ஆம் வீட்டை சனி, சூரியன் பலமாக பார்க்கிறார்கள் மேலும் 2 ஆம் ஸ்தானாதிபதியும் 5 ஆம் ஸ்தானாதிபதியும் ஆன புதன் பகவான் 9ல் உள்ளார், சனி செவ்வாய் சப்தம பார்வையின் காரணமாக நீதிமன்றத்தில் நின்று பேசினார் ஆனால் சிம்ம கர்ஜனை தான் ஆனால் மற்ற சமயங்களில் அமைதியானவர்.

8ல் சூரியன், சனி, சந்திரன் அந்த 8 ஆம் ஸ்தானாதிபதி குரு பகவான் 8 ஆம் ஸ்தானத்தை 9ஆம் பார்வையாக பலமாக பார்க்கிறார், எதிரிகளை பயமின்றி சந்திப்பதற்கும் அச்சாமல் வாதிடுவதற்கும் 6ஆம் ஸ்தானாதிபதி சுக்கிரன் 10ல் அமைந்து 10 ஆம் ஸ்தானாதிபதி சனி பகவானால் பலமாக பார்க்க படுகிறார் அவரே லக்னாதிபதியும் ஆவதால் அவரை 9,10 ஆம் ஸ்தானாதிபதி பார்ப்பது மிகச்சிறப்பு, சனி பகவான் நவாம்சத்தில் நீசபங்க ராஜயோகத்தை செவ்வாயால் பெறுகிறார் இதனால் இவர் பின்னாளில் நீதிபதி ஸ்தானத்திற்கும் உயர்ந்தார். மேலும் இவரின் 5 ஆம் ஸ்தானாதிபதி புதன் 9ல் இருந்து மேலும் நவாம்சத்தில் சனி பகவான் உடன் சேர்ந்து புதன் வலுவடைவதால் இவரது மகனும் பிரபல வழக்கறிஞராக வலம் வந்தார்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "தொழில் யோகங்கள் பகுதி 1 - வக்கீல் தொழில் (Lawyer Job), பிரபல வழக்கறிஞர்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger