ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 23 - சுங்கா யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 23 - சுங்கா யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சுங்கா யோகம்
ரிஷபம், துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ஆட்சி, உச்சம், நட்பு வீட்டில் இருந்து அந்த சுக்கிரன் சனியாலும், குருவாலும் சுக்கிரன் பார்க்கபட்டு புதன் சுக்கிரனுடன் சேர்ந்து அமர்ந்திருந்தால் இந்த சுங்கா யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
தீர்க்க ஆயுள், பெரிய நோய்கள் அண்டாமை, சென்ற இடங்களில் சிறப்புகள் பெருவது, பலவகைகளிலும் பொன் பொருட்கள் சேர்ப்பது, மனைவி மக்களால் நன்மை, பரந்த மனபான்மை கொண்டவராக நடத்தல், ஆன்மீக நாட்டம், குழந்தைகளுக்கு உயர் கல்விஞானம், அறிவுசார்ந்த விஷயங்களை கொடுத்தல், சமூக மரியாதை போன்ற பலன்கள் ஏற்படும்.

சுங்கா யோகம்  ஒரு வகை உதாரண படம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 23 - சுங்கா யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger