ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 24 - வாகன யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 24 - வாகன யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

போன பதிவில் -

வாகன யோகம்
வாகனங்கள் எப்படி பலதரபட்டதாக இருக்கிறதோ அது போல வாகன யோகங்களும் பலவகையில் உள்ளன அதில் முதல் தரமான வாகன யோகம் இது ஜென்ம லக்னத்திற்கு 4 ஆம் ஸ்தானாதிபதி ஜென்ம லக்னம் மற்றும் லக்னத்திற்கு 4,5,7,9,10 ஆட்சி, உச்சம் அடைந்தால் நட்பு கிரகங்கள் உடன் சேர்ந்தால் இந்த யோகம் ஏற்படும், நவாம்சத்திலும் இந்த நிலையை அடைந்தால் தான் இன்னும் யோகம் வலுசேர்க்கும். இதற்கு பலவிதிகள் உண்டு குரு, புதனாக இருந்தால் இந்த யோகம் நன்கு ஆராய்ந்து தான் முடிவுக்கு வரவேண்டும், பாவிகள் சேர்ந்தாலும் யோகம் பங்கபடும்.

இதன் பலன்கள் -
நவீன உலகத்தில் அறிமுகபடுத்தபட்ட புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கார்கள் (cars) வாங்கும் யோகம் ஏற்படும். இந்த யோக அமைப்புக்கு காரணமான கிரக சார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் கார் வாங்கும் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.

வாகன யோகம் ஒரு வகை உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 24 - வாகன யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger