மிதுனம் லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்…

மிதுன லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்
முதல் பாடலின் விளக்கம் -
மிதுனம் (இருவர்) லக்கினத்தில் தோன்றியவருக்கு களத்திர (வாழ்க்கை துணை) ஸ்தானம் தனுசு ஆகும் அதற்கு நாயகன் குரு (வேதன்) பகவான் ஆகும் இந்த லக்கினத்தில் தோன்றியவருக்கு இல்வாழ்க்கையை பற்றி கூறுகிறேன் கேட்பாய் ஆக அவருக்கு திருமணக் காலத்தில் நினைத்து வைத்திருக்கும் அல்லது எதிர்பார்ப்பில் திட்டம் தீட்டியது போல் இல்லாமல் அந்நிய சொந்தத்திலோ, சமூக பழக்க வழக்கங்களின் விதிகளை மீறியதாகவோ அல்லது சமூக பழக்க வழக்கங்களின் விதிகளில் இருந்து விலகி செல்வது போன்ற சம்பவங்கள் திருமணக் காலங்களில் நடக்கலாம் அது குரு பகவான் ஜாதகத்தில் எப்படிபட்ட பலத்தில் அமர்ந்துள்ளார் என்பதை பொறுத்து அது சாதகமாய் அமையும். இந்த லக்கினத்தில் தோன்றியவருக்கு இல்வாழ்க்கை துணை நிறைந்த அறிவு உள்ளவராகவும், தன் சார்ந்த குடும்பத்தை காப்பாற்றும் திறம் பெற்றவராகவும், ஒன்றுபட்டு குடும்பத்தை நடத்தக்கூடியவராக, அழகானவராகவும், பரந்த மனமும் தானம் தர்மங்கள் செய்க்கூடி இயல்பு உள்ளவராகவும், தேவைக்கு தக்க செல்வங்கள் பெற்றவராகவும் இருப்பார் இதை குரு (வேதன்) பகவான் சுப பலத்தை கண்டு உரைப்பாய்.

இரண்டாம் பாடலின் விளக்கம் -
குரு (வேதன்) பகவான் சுப பலத்தை கூறுகிறேன் கேட்பாய் ஆக குரு எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் தனியாக இருந்தால் சிறப்பில்லை, கேந்திரங்களில் சுப கிரகங்களுடன் சேர்ந்தால் பாதக வலிமை அதிகரிக்கும், லக்கினத்தில் 3ஆம், 5ஆம், 6ஆம், 9ஆம், 11 ஆகியவை சுப பல ஸ்தானங்கள் இங்கு வல்லவன் (சூரியன், செவ்வாய்) உடன் கூடினால் நல்லவிதமாக குடும்பத்தை நடத்துவர் மேலே சொன்ன பலன்களும் நடக்கும் மற்ற இல்லங்களில் பாதிப்புடன் அமர்ந்தால் செல்வ வசதிகளில் பற்றாக்குறை, வாதம் செய்யும் வாழ்க்கை துணை, ஏற்ற இறக்கமான வண்டிச்சக்கரம் போல் கணவன் மனைவி முரண்பட்டு இருப்பார், (ஆலய குருவிற்கு அரச கனவுவாம்) இது ஒரு பழமொழி அதாவது ஆலயத்தில் குருக்களாக நல்ல நிலையில் இருந்தும் அவருக்கு அரசனாக வேண்டும் என்ற ஏக்கத்தில் தனது சிறப்பை உணராமல் கவலை பட்டு கொண்டிருந்தானாம் அது போல கணவன் மனைவிக்கு இடையே தங்களுக்குள் உள்ள சிறப்பை உணராமல் குறைகளையே பெரிதாக பார்த்துக்கொண்டிருப்பார்கள், இதை நவகோள்களின் நிலைகளையும் ஆராய்ந்து பின் உரைப்பாய் இந்த கோள்முனி சொன்னதை.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "மிதுனம் லக்கினத்தில் தோன்றியவருக்கு கணவன் - மனைவி துணை ஸ்தான பலன்…"

கருத்துரையிடுக

Powered by Blogger