நவகோள்கள் காட்டும் மனிதனின் வயது காரகத்துவ காலங்கள்...

நவகோள்கள் காட்டும் மனிதனின் வயது காரகத்துவ காலங்கள்...

பண்டை ஜோதிடத்தில் இராகு கேது தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களின் மனிதனின் வாழ்நாள் வயது காலங்களை ஏழு கிரகங்களுக்கும் பிரித்து காட்டி உள்ளனர் முதலில் அந்த விஷயத்தை தெரிவித்து கொள்ளகிறேன் பின் அதை விவரித்து கூறுகிறேன்.
இது பண்டை காலத்தின் முறை என்பதால் தற்காலத்துக்கு தக்கவாறு அதை மாற்றி தான் பலன் கொள்ள வேண்டும் சரி இப்படி பிரித்துள்ளதில் ஒரு விசேஷம் உள்ளது அதாவது எந்த ஒரு கிரகத்தின் ஆதிக்க காலத்தில் அந்த கிரகத்தின் திசை இயல்பாக அவருக்கு வருமானால் அந்த கிரகம் ஜாதகத்தில் பலமாக இருந்தால்  அந்த திசையின் காலத்தில் அந்த கிரகத்தின் ஆதிக்க காலமும் நடக்கும் ஆனால் அனைத்து கர்மங்களும் சுபமாகவும் முழு மங்கள யோக அமைப்பாகவும் அமையும்.

உதாரணமாக ஒருவர் சூரியனின் ஆதிக்க காலமான 23 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர் என்று வைத்துக்கொள்வோம் அவர் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு
இயல்பாகவே 23 வயது முதல் 30 வயதுக்குள் சூரியனின் திசை வரும் அவரின் ஜாதகத்தில் சூரியன் பலமாக இருந்தால் சூரியனின் ஆதிக்க காலத்தில் நடக்கும் சம்பவங்கள் அவருக்கு இணக்கமாகவும், சுபமாகவும், சிறப்பாகவும் அமையும்

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "நவகோள்கள் காட்டும் மனிதனின் வயது காரகத்துவ காலங்கள்..."

கருத்துரையிடுக

Powered by Blogger