கணித மேதை சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) ஜாதகம் கணிப்பு....


சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) ஜாதகம் கணிப்பு -   கணித மேதை, இந்தியாவின் முக்கிய விஞ்ஞானி...
இந்தியாவில் பிறந்த கணித மேதை தனது கணித ஆற்றலால் உலகில் புகழ் பெற்ற இராமானுசரின் ஜாதகத்தின் தன்மைகளை தற்போது பார்ப்போம் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக நுண்ணறிவுடன் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தவர், இவரின் ஜாதகத்தில் பல வியப்பூட்டும் அம்சங்கள் நிறைந்துள்ளது இப்போது இவரின் கணித துறை ஆற்றல், புதிய கோட்பாடுகளை கண்டுபிடித்து தரும் ஆற்றல், இறப்புக்கு பின் சேரும் புகழ் என பலவிஷயங்கள் பார்ப்போம்.

சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) ஜாதகம்கணிதத் துறை, கணக்கு, எண்ணியல் போன்ற துறைகளுக்கு காரகத்துவம் பெற்றவர் புதன் மேலும் அதற்கு அடுத்த காரகத்துவம் பெற்றவர் குரு, சனி, இராகு ஆகியகிரகங்கள் ஆகும் மேலும் 4,6,8,12 ஆகிய ஸ்தானங்கள் முக்கிய காரகத்துவம் பெற்ற ஸ்தானங்கள் இதில் இராமானுசருக்கு 4ஆம் ஸ்தானாதிபதிக்கும் 6 ஆம் ஸ்தானாதிபதிக்கும் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளது மேலும அது செவ்வாய், புதனாக இருப்பதால் புதிய புதிரான கணிதங்களில் நாட்டம் அவருக்கு போனது, அது போக 8 ஆம் ஸ்தானாதிபதி சனி இராகுவுடன் சேர்ந்து சொந்த நட்சத்திரத்தில் அமைந்து 8 ஆம் ஸ்தானத்தை பார்ப்பதால் யாரும் இதற்கு முன் அறிந்திராத விஷயங்களில் ஆராய்ந்தார் அந்த சனி பகவான் நவாம்சத்தில் உச்ச பலமும் பெறுகிறார் அதனால் அதில் பெரிய அளவில் தீர்வும் கண்டார்,மேலும் கணிதத்திற்கு முக்கிய காரகத்துவம் பெற்ற புதன் தனது சொந்த கேட்டை நட்சத்திரத்தில் அமைந்து 6ல் அமைந்து குருவுடனும் சேர்ந்துள்ளார், இரண்டில் உள்ள இராகுவும் புதனின் சொந்த ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளார் இதனால் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார் புதுப்புதுக் கணிதச் சிக்கல்களை கணக்கிட்டு தீர்வு கண்டார் மேலும் அவர் கையாளும் உத்திகள் முன்பின் வழக்கமில்லாததாக இருந்திருக்கிறது. யார் மேதை தெரியுமா யாராலும் முடியாது என்றும் அல்லது யாரும் செய்ய துணியாத அரிய காரியங்களை அதாவது அந்த செய்யமுடியாததை எடுத்து செய்து முடிப்பவர் தான் மேதை அதை செய்து காட்டியவரே இராமானுசர்.புதிய கோட்பாடுகளை கண்டுபிடித்து தரும் ஆற்றலை செவ்வாய், புதன் இடையே ஏற்பட்ட பரிவர்த்தனை யோகம் மேலும் புதனின் வீடே லக்னமாக அமைந்து அந்த லக்ன வாங்கிய சாரம் திருவாதிரை இராகுவின் சொந்த நட்சத்திரத்தில் அமைந்து மேலும் அந்த இராகு புதனின் சொந்த ஆயில்யம் நட்சத்திரத்தில் அமைந்துள்ளதும் அந்த இராகு நவாம்ச லக்னத்தில் அமைந்ததும் அந்த லக்னாதிபதியால் 5 ஆம் பார்வையாக பார்க்க படுவதும் சனியாலும் 3ஆம் பார்வையாக பார்க்க படுவதால் கணித இயலுக்கு புதுப் பாதைகளை வகுத்து கணித முன்னேற்றத்திற்கு முன்னோடியாக இருக்கும் விந்தையான வரலாறை நிகழ்ந்தி காட்டினார்.பத்து வயதிற்குள்ளேயே இராமானுசர் கணித வல்லமையும் நினைவாற்றலும் பெற்றிருந்தார் அதை சுருக்காமாக விளக்குவதானால் பள்ளி மாணவனாக இருந்த இராமானுசர் கல்லூரிப் கணித பாடபுத்தகத்தை ஒரே வாசிப்பில் முடித்ததோடு மட்டுமல்லாமல் அதிலிருந்த எல்லா கணக்குகளையும் தானே போட்டு தீர்வு கண்டுள்ளார் மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் ஏன் ஆசிரியர்களுக்கே கூட புதிராகவும் ஒரே வியப்பாகவும் இருந்ததாம் இதை தான் பூர்வபுண்ணியம் என்று ஜோதிடம் கூறும் முந்தை பிறவியில் பாக்கி வைத்து முக்கிய சிறப்பான அம்சங்களை பெற்று இந்த பிறவியில் பிறப்பர் பின் குறைந்த வயதிலேயே குழப்பான விஷயங்கள் என்றும் அல்லது கற்றுக்கொள்ள அதிக காலம் எடுக்கும் என்று சொல்லக்கூடிய விஷயங்களை ஒருவர் இளம் சிறிய வயதிலேயே கற்றுத் தேர்ந்தவர் ஆவர்,இதற்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ஆம் ஸ்தானத்தின் பலத்தாலும் 5ஆம் ஸ்தானாபதியின் பலத்தாலும் ஒருவருக்கும் அமையும் மேலும் லக்னத்தின் பலத்தாலும் லக்னாதிபதியின் பலத்தாலும் ஒருவருக்கும் அமையும் சரி இராமானுசருக்கு லக்னாதிபதியான புதனின் பலத்தை கூறிவிட்டேன் ஏற்கெனவே கூறிவிட்டதால்முக்கியமான பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ஆம் ஸ்தானாபதி சுக்கிரன் 5ஆம் ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ளார் மேலும் சப்தாம்சம், அஷ்டாம்சம், தசாம்சம் ஆகிய அம்சங்களிலும் ஆட்சி உச்சம் பெற்று பலம் பெறுகிறார் இதனால் வர்க்கோத்தம யோகம் பெற்றுள்ளது அதாவது வர்க்கோத்தம பலம் பெறுவதன் மூலமாக சுக்கிரன் வெறும் மேலொட்டமான பலத்தை தண்டி ஆழமான பலத்தை பெறுகிறது மேலும் அப்படி பலம் சுக்கிரன் புண்ணியங்களுக்கு காரகன் ஆன குரு பகவானின் நட்சத்திரத்தில் அமைந்துள்ளதும் மேலும் நவாம்சத்தில் லக்னத்திற்கு 5ஆம் ஸ்தானத்தில் அமைந்து துலாம் இராசியை பார்ப்பதுவும் என அமைந்தால் பெரிய ஆச்சார்யனாக இருந்த முற்பிறவி யோகம் பெற்று வாழ்ந்தவராக இருந்து அதனால் உண்டான பெரிய ஞானத்தோடு பிறந்தவராக பிறந்து பின் இந்த பிறவியில் நேராக தன் வந்த விஷயத்திற்க்கான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள். 12 ஆம் ஸ்தானாதிபதியாகவும் அவரே இருப்பது இதற்கு மேலும் சிறப்பு.இதற்கு முற்பிறவி கர்ம ஆற்றல்களுக்கு காரகத்துவம் பெற்ற கேதுவின் ஒத்துழைப்பும் இவருக்கு ஒத்துழைத்தது அதாவது கேது 8ல் அமைந்து 8க்குடைய சனியால் பார்க்கபட்டு சந்திரன் சாரத்தில் அமைந்து அந்த சந்திரன் இந்த பிறவியின் கர்ம ஸ்தானம் ஆன 10ல் அமைந்துள்ளது,மேலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ஆம் ஸ்தானத்திக்குற்கு 5ஆம் ஸ்தானம் ஆன 9ஆம் ஸ்தானத்தின் பலமும் முக்கியம் அந்த 9ஆம்  ஸ்தானத்தின் அதிபதியும் சனியே ஆகி அவரும் தனது சொந்த சாரம் பெற்ற பூசம் நட்சத்திரத்தில் அமைந்து கேதுவை பார்க்கிறார் இவைகளெல்லாம் சேர்ந்த ஆழமான பூர்வபுண்ணிய பலம் பெற்று கொடுத்து பிறப்பாக அமைந்தது.ஆயுளும், திருமண வாழ்க்கை அவருக்கு சிறப்பாக அமைவில்லை இரண்டில் உள்ள சனி,இராகுவாலும் மேலும் நவாம்சத்தில் 7ல் அமைந்த சூரியன், கேது சேர்க்கையும் காரணம், மேலும் உபய லக்னம் என வர்ணிக்கப்பட கூடிய மிதுன லக்னத்திற்கு 7,11ம் வீடுகள் மாரக ஸ்தானம் ஆகும் அதாவது மரணத்திற்கு நிகரான கண்டங்கள், வலிகள் தர காரகத்துவம் பெற்றது சில சமயம் மரணத்தை தரவும் ஒத்துழைப்பு செய்யும் இவரின் ஜாதகத்தில் மாரகாதிபதி குரு ஆயுள் காரகன் ஆன சனியின் சாரமே பெற்றும் மேலும் மற்றொரு மாரகாதிபதி செவ்வாய் பொது உடல்காரகன் ஆன சந்திரன் சாரம் பெற்று அந்த சந்திரனும் சனியின் சாரம் பெற்று அந்த ஆயுள் காரகன் ஆன சனி இராகுவுடன் 7 பாகைக்குள் சேர்ந்த மருள் தோஷம் பெற்றுள்ளதால் தனது 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார் அதாவது கேதுவின் திசை முடிந்தவுடன் வந்த வேலையை முடித்துக்கொண்டு இந்த பிறவியையும் முடித்துக்கொண்டார் இராமானுசர்.ஏற்கெனவே நான் சொன்னது போல் புண்ணிய பலமான புதனின் திசையில் தனது பல கணித ஆய்வுகளை செய்தார் நிறைய கணித ஆய்வுக்குறிப்பேடுகள் எழுதினார், பின்பு வந்த கேதுவின் திசைகளுக்குள் அதாவது தனது 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார், இருந்தாலும் இவருக்கு புதழ் ஸ்தானாதிபதி சனி இராகுவுடன் 7 பாகைக்குள் சேர்ந்த மருள் தோஷம் பெற்றுள்ளதால் தான் வாழும் காலத்திலேயே உலகத்தால் புரிந்து கொள்ளபட்டு பாராட்டுக்களையும் விருதுகளை பெற முடியாதவராக போய் விட்டார் மேலும் அதற்கு ஒத்துழைக்கும் விதமாக லக்னம் இராகுவின் சாரமே பெற்றுவிட்டதுஇருந்தாலும் சுக்கிரன் 5ஆம் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பலம் பெற்றதாலும் நவாம்சத்திலும் மேலும் பல அம்சங்களில் சனியுடன் பலமான தொடர்புகளை பெற்றதாலும் இறப்புக்கு பின் சேரும் புகழ் பெற்றார் ஏன் இனிவரும் ஆய்வாளர்களுக்கு இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ்மான கணித உண்மைகள் அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறைகளுக்கு மேலும் பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இவ்வாறாக அவர் என்றும் புகழுடன் வாழ்வார்.
பிர்லா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் தோட்டத்தில் ராமானுஜன் சிலை.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 


0 Response to "கணித மேதை சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) ஜாதகம் கணிப்பு...."

கருத்துரையிடுக

Powered by Blogger