12 இராசிமண்டலப் பிரிவுகளின் பொது காரகத்துவங்கள் சுருக்கமாக…

12 இராசிமண்டலப் பிரிவுகளின் பொது காரகத்துவங்கள் சுருக்கமாக

மேஷம்: சக்தி வாய்ந்தவர், ஆர்வமிக்கவர், வீரம், சிவப்பு, தலை, காடுகள், மனக்கிளர்ச்சி, அவசரக்காரர், பெரிய நெற்றி, அமைதியற்ற, தடித்த புருவம், தலைமை, ஆணவமானவர், உயரமாக வளரக்கூடியவர், ஷத்திரியர்கள் (வீரர்கள்) அக்கினி அடையாளம்.

ரிஷபம்: வசீகரமானவர், முகம், உறுதியானவர், மந்தமானவர், விசுவாசமானவர், புல்வெளிகள், சமவெளிகள், ஆடம்பர அரங்குகள் (திரையரங்கு, கல்யாண மண்டபம்), உணவுவிடுதிகள், சாப்பிடும் இடங்கள், பற்கள், பெரிய கண்கள், ஆடம்பரமான, நேர்மையானது, அடர்த்தியான முடி, வைசியர்கள் (வர்த்தகர்கள்) பூமியின் அடையாளம்.

மிதுனம்: மார்பு, தோட்டம், தகவல் தொடர்பு, இதழியல், பள்ளிகள், கல்லூரிகள், படிக்கும் அறைகள், கேபிள்கள், தொலைபேசி, ஆர்வம், கற்று கொள்ளும் திறன், மகிழ்வானவர், செய்தித்தாள்கள், உயரமானவர், கன்னங்கள், அடர்த்தியான முடி, பரந்த மார்பு, சூத்திரர்கள் (தொழிலாளர்கள்) காற்று அடையாளம்.

கடகம்: இதயம், மார்பகம், நீர்த்தன்மையான இடங்கள், ஆறுகள், கால்வாய்கள், சமையலறை, உணவு, கவர்ச்சிகரமானவர்கள், மாற்றம், உணர்ச்சிக்கு முக்கியத்துவம், ஆழமாக இணைக்கப்பட்ட உறவுகள், தீர்க்க புலன், தாய் பாசம், அந்தணர்கள் (அறிஞர்கள்) நீர்த்தன்மை அடையாளம்.

சிம்மம்: வயிறு, செரிமானம், தொப்புள், மலைகள், காடுகள், குகைகள், பாலைவனங்கள், அரண்மனைகள், பூங்காக்கள், கோட்டைகள், கொதிகலன்கள், அதிகாரம், ஆணவம், எஃகு தொழிற்சாலைகள், மெல்லிய, உலர்ந்த இடங்கள் மற்றும் பொருட்கள், சூடானது, அரசு, அரசாங்கம், சுய பெருமை, ஷத்திரியர்கள் (வீரர்கள்) அக்கினி அடையாளம்.

கன்னி: மேல் இடுப்பு பாகங்கள், இணக்கம், பசுமையான தோட்டங்கள், வயல்கள், பழத்தோட்டம், நூலகங்கள், புத்தக கூடங்கள், பண்ணைகள், நுண்ணறிவு, புத்திக்கூர்மையானவர், பேச்சாற்றல், முக்கிய நரம்பு மண்டலம், உடலளவில் பலவீனம், விவேகம், திறமையுடைமை, வைசியர்கள் (வர்த்தகர்கள்) பூமியின் அடையாளம்.

துலாம்: இடுப்பு, வர்த்தகர்கள், சந்தைகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், ஹோட்டல்கள், பொழுதுபோக்கு, பூங்காக்கள், பொழுதுபோக்கு, கழிப்பறைகள், ஒப்பனை அலங்காரம், சமநிலை, மதிப்பீடு, பரந்த பார்வை, நல்ல பேசுகிறவன், சூத்திரர்கள் (தொழிலாளர்கள்) காற்று அடையாளம்.

விருச்சிகம்: உடலுறவுப் பாகங்கள், துளைகள், ஆழமான குகைகள், சுரங்கங்கள், கடைகள், மங்கலான பகுதிகள், மங்கலான நிறம், பிரகாசமான கண்கள், இரகசிய பகுதிகள்,  திட்டம் தீட்டுதல், ரகசியங்கள், சிறந்த நண்பர் அல்லது மோசமான எதிரி, வெடுவெடுவென இருத்தல், நுண்உணர்திறன், அந்தணர்கள் (அறிஞர்கள்) நீர்த்தன்மை அடையாளம்.

தனுசு: தொடைகள், அரசு நிர்வாகங்கள், வக்கீல்கள், அரசு அலுவலகங்கள், விமானம், வீழ்ச்சி, சிதறியுள்ள அல்லது சிதறிபோகும் தன்மை, முடி, தசை, ஆழமான கண்கள், நேர்மை, திறமையான நடத்தை, நற்பண்பு, நடைமுறையை மீறவும் வழிகாட்டுபவர், சூதாட்டக்காரர், ஷத்திரியர்கள் (வீரர்கள்) அக்கினி அடையாளம்.

மகரம்: முழங்கால்கள், சதுப்பு நிலங்கள், தண்ணீரால் இடங்கள், முதலைகள், மிருகங்கள், புதர்கள்,  மெல்லிய அல்லது எளிய தோற்றம், பழைய கட்டிடம், நீண்ட கழுத்து, முக்கிய பற்கள், நகைச்சுவை, நேர்த்தியவாதி, நோயாளி, அமைப்பாளர், நடைமுறைக்கேற்றவர், இரகசியம், எச்சரிக்கையாக இருப்பது, வைசியர்கள் (வர்த்தகர்கள்) பூமியின் அடையாளம்.

கும்பம்: கணுக்கால், கால்கள், தொண்டு, தத்துவம், உயரமானவர், எலும்பு, சிறிய கண்கள், மலை வாசஸ்தலம், வசந்த காலம், தண்ணீர் இடங்கள், ஒழுங்கமைவு இல்லாத பற்கள், கரடுமுரடான முடி, கடினமாக உழைக்கும் தன்மை, ஞானி, நேர்மையானவர், சூத்திரர்கள் (தொழிலாளர்கள்) காற்று அடையாளம்.

மீனம்: கால்கள் பாதங்களும், சமுத்திரங்கள், கடல்கள், சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், துறவி, குட்டை, குண்டாக இருப்பது, பெரிய கண்கள், பெரிய புருவம், உள்ளுணர்வு, வாயாடி அதிகமாக பேசுவது, சோம்பேறி, உணர்ச்சிவசப்பட்டவர், பயந்த சுபாவம், நேர்மை, தயக்கம், அந்தணர்கள் (அறிஞர்கள்) நீர்த்தன்மை அடையாளம்.


ஷத்திரியர்கள் (வீரர்கள்), அந்தணர்கள் (அறிஞர்கள்), சூத்திரர்கள் (தொழிலாளர்கள்), வைசியர்கள் (வர்த்தகர்கள்) இந்த பிரிவுகள் இங்கே காணப்படுவதன் நோக்கம் பிறப்பின் அடிப்படையிலான பேதத்திற்க்காக அல்ல அந்த இராசியின் செயல்களின் அடிப்படையான பேதமே நமது ஆதி ரிஷிகளும் இதை செயல்களின் அடிப்படையில் தான் பிரித்தார்கள் அவர்கள் மனிதர்களை பிரிக்கவில்லை மனித தன்மை மட்டுமே பிரித்தார்கள் அதாவது சுபாவத்தின் அடிப்படையில் பிரித்தார்கள்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
 0 Response to "12 இராசிமண்டலப் பிரிவுகளின் பொது காரகத்துவங்கள் சுருக்கமாக…"

கருத்துரையிடுக

Powered by Blogger