ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 26 - இந்திர யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 26 - இந்திர யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


இந்திர யோகம்
ஜென்ம லக்கினத்திற்கு 5, 11 ஆம் வீட்டின் அதிபதி கிரகங்கள் அவர்கள் இருவரும் பரிவர்த்தனை யோகம் பெற்று அதாவது 5 வீட்டின் அதிபதி 11 ஆம் வீட்டில் அமர்ந்து 11 வீட்டின் அதிபதி 5 ஆம் வீட்டில் மாறி அமர்வது மேலும் சந்திரன் 5 வீட்டில் இருந்தால் இந்த இந்திர யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
மிகவும் தைரியமானவர், நீடித்த புகழ், அரசு அரசியலில் நல்ல இடம், நல்ல போகம், வர்த்தக தொடர்புகளினால் மிகுந்த லாபம், கனிவான பேச்சு அதே சமயம் புத்திசாலித்தனமான நடவடிக்கை உள்ளவர், எளிதில் வளைந்து கொடுத்துபோககக் கூடியவர்.

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 26 - இந்திர யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger