ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 27 - சுவர்ண யோகம்…


  தை பிறந்து அனைவர் வாழ்விலும் நல்ல வழி பிறக்க வாழ்த்துகிறோம் 


ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 27 - சுவர்ண யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஜ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சுவர்ண யோகம்
ஜென்ம லக்கினத்திற்கு 2 ஆம் வீட்டின் அதிபதி மற்றும் சூரியன், குரு சேர்ந்து யாராவது ஒருவர் ஆட்சி, உச்சம் பெற்று இந்த மூன்று கிரகங்களும் ஒருவருக்கு ஒருவர் சேர்ந்தோ அல்லது ஒருவருக்கு ஒருவரால் பார்க்கபட்டோ அமைந்திருந்தால் இந்த சுவர்ண யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
தங்கம் வெள்ளி போன்ற உயர்ந்த மதிப்பு வாய்ந்த உலோகங்கள் சிறந்த அளவில் சேர்ப்பார் அல்லது உயர்ந்த மதிப்பு வாய்ந்த உலோகங்கள் வைத்து வர்த்தகம் செய்தல், பணசார்ந்த வர்த்தக தொடர்புகளினால் மிகுந்த லாபம், புத்திசாலித்தனமான பண மேலாண்மை தெரிந்தவராக இருத்தல் போன்ற யோக பலன்கள் ஏற்படும், இதில் முக்கியமாக சனி,இராகு, கேது, மாந்தியால் எந்தவிதத்திலும் யோகம் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

சுவர்ண யோகம் ஒரு வகை உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 27 - சுவர்ண யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger