ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 28 - அமலா யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 28 - அமலா யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


அமலா யோகம்
ஜென்ம லக்கினத்திற்கு 10 ஆம் வீட்டில் அல்லது சந்திரனுக்கு 10 ஆம் வீட்டில் லக்கினத்திற்கு சுப யோக கிரகங்கள் சேர்ந்து ஆட்சி, உச்சம், நட்பு இராசிகள் பெற்று அமைந்திருந்தால் அது அமலா யோகம் ஏற்படும்.

இதன் பலன்கள் -
வளமான பணியிடங்கள் வேலை செய்யும் வாய்ப்பு, அந்த நபர் நீடித்த புகழ் அடையவும் வாய்ப்பு உண்டு, அவர் செழிப்பான வாழ்க்கையை வாழுவார், தொழிலில் மேன்மையான நிலைகளை பெறுவார், அப்படி வரக்கூடிய கிரகங்கள் இயற்கை சுப கிரகங்களாகவும் அமைந்தால் அவரது குணாதிசயமும் களங்கமற்றதாக இருக்கும்.

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 28 - அமலா யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger