ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 30 - சந்திரகலா யோகம்…

ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 30 - சந்திரகலா யோகம்

ஜோதிடத்தில் உள்ள ராஐ யோகங்கள் பற்றி சில சில யோகங்களாக இந்த பகுதிகளில் பார்போம், ஒன்றை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் எந்த  ராஐ யோகங்கள் ஆனாலும் அது லக்னத்திற்கும் நல்ல நிலையும், நட்சத்திர பலமும், மற்ற அம்சங்களில் நல்ல ஸ்தான பலனும், வேறு எந்த வகையிலும் தோஷப்படாமலும் சிறந்த சுப பலமும் பெற்று அமைந்தால் தான் அந்த ராஐயோகங்களின் பலனை ஜாதகர் முழுமையாக பெற முடியும் என்பது ஞாபகம் இருக்கட்டும். மேலும் சில யோக அமைப்புகளுக்கு அந்த யோக அமைப்புக்கு காரணமான கிரகசார திசா புத்திகள் நடைபெறும் காலம் வந்தால் தான் யோக அமைப்புக்கான பலன்கள் வந்து சேரும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.


சந்திரகலா யோகம்
ஜென்ம லக்னத்திற்கு லக்னாதிபதியும் சந்திரன் சேர்ந்து கேந்திர திரிகோணங்களில் அமைந்து அது நட்பு இராசி வீடுகளில் அமைந்தால் சந்திரகலா யோகம் ஏற்படும், சந்திரனுக்கு சுபக்கிரகமாக லக்னாதிபதி அமைந்தால் மேலும் பலப்படும் பகை கிரகமாக இருந்தால் யோகம் பங்கப்படும் மேலும் தேய்பிறை  சந்திரனாலும் யோகம் பங்கப்படும்.

இதன் பலன்கள் -
அழகான தோற்றம் உள்ளவராக்கும், மற்றவரை கவரும் உடை நடை பாணி ஆகியவை ஏற்படும், அன்றாட தேவையான உணவு, உடை, உறைவிடம் நிறைவாக அமையும், நல்ல பேச்சு, கனிவான குணம், நல்ல செல்வாக்கு, கல்வியறிவு, அரசர்களால் மதிக்கபடுபவனாக இருப்பான்.

0 Response to "ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி 30 - சந்திரகலா யோகம்…"

கருத்துரையிடுக

Powered by Blogger